Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தையின் பதிலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பாராட்டுப் பதிவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தையின் பதிலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பாராட்டுப் பதிவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
SSLC & +1 துணைத் தேர்வு - 25.06.2025 (புதன்கிழமை) பிற்பகல் முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்குனர் செய்தி குறிப்பு வெளியீடு
SSLC & +1 Supplementary Exam Hall Ticket Download From 25.06.2025 AN
>>> செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மே 14-ம் தேதி 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பார்.
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கண்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி பி.ஆர்.கவாயின் பெயரை சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 2025-ல் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக, கவாய் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றில் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்த தீர்ப்பு உள்ளிட்டவை அடங்கும்.
மகாராஷ்டிராவின் அமராவதியில் நவம்பர் 24, 1960-ல் பிறந்த நீதிபதி கவாய், 1985-இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். ஆகஸ்ட் 1992-இல், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2000-ஆம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.
நீதிபதி கவாய் நவம்பர் 14, 2007 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர் அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு (NMMS EXAMINATION) தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து செய்திக்குறிப்பு வெளியீடு
NMMS Exam February 2025 Results - Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
NMMS 2024-2025 Individual Students Marks Download Link
50 தொகுதிகளின் வெற்றி தோல்வி நிர்ணயம் எங்கள் கையில் - ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை
The victory or defeat of 50 seats is in our hands - Teachers' Federation warns
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மானாமதுரையில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி 16.03.2025 தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.
50 தொகுதி தலையெழுத்து எங்கள் கையில் ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு சவால்
தமிழகத்தில் 50 தொகுதிகளின் தலையெழுத்தை எங்களால் நிர்ணயிக்க முடியும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் பணி நிறைவு விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பேசியதாவது: 6. 25 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றுவோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
இது சத்தியம் என்று சொன்னார்.
இந்த பட்ஜெட்டிலாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குழு அமைத்துள்ளோம் என்று சொல்கின்றனர். குழு அமைப்பது என்பது ஒத்தி போடுவதற்காகத்தான் என கருணாநிதியே கூறியுள்ளார்.
இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நமது திட்டத்தை பின்பற்றி வருகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
வாக்குறுதியே சொல்லாத ஆறு மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் வாக்குறுதியை சத்தியமாக சொன்ன ஸ்டாலின் குழுவை அமைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அந்தக் குழு விசாரணை முடிவதற்குள் ஆட்சி காலமும் முடிவுக்கு வந்துவிடும்.
நீங்கள் எப்படி மிசா, தடா, பொடா பார்த்தோம் என்று சொல்கிறீர்களோ, அதே போன்று நாங்களும் ஏராளமான அடக்குமுறைகளை பார்த்துள்ளோம். அரசு ஊழியர்களை மொத்தமாக பணி நீக்கிய பிறகு நடந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.
சக்தி மிக்க தலைவராக கருதப்படும் எம்.ஜி.ஆர்., ஆசிரியர்களை 40 நாள் சிறையில் வைத்ததற்காக அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் கடும் சரிவை சந்தித்தார்.
நீங்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
அப்புறம் எப்படி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என்று கூட்டணி கட்சியினரே கேட்கின்றனர். தற்போதுள்ள பல முக்கிய தலைவர்கள் தபால் ஓட்டுகளால் தான் வெற்றி பெற்றனர்.
1.5 கோடி முதல் 2 கோடி வாக்காளர்கள் வரை எங்களது குடும்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் 50 தொகுதிகளின் தலை எழுத்தை எங்களால் நிர்ணயிக்க முடியும்.
இதை நாங்கள் சவாலாகவே சொல்கிறோம். இதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நிரூபித்து காட்டி இருக்கிறோம் என்றார்.
ஆர்.பி.ஐ. ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
Sanjay Malhotra appointed as Governor of Reserve Bank of India for next 3 years
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவு; சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11 முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை, இப்பதவியில் நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாசின் பதவிக்காலம் வரும் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடர் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். வருவாய் மற்றும் வரி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா, ஐஐடி கான்பூரில் படித்தவர். அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் (Public Policy) முதுகலை பட்டம் பெற்றவர்.
மேலும், அவர் வருவாய்த் துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நிதி சேவைகள் துறை செயலாளராக இருந்தார். குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம், நிதி, வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளில் கொள்கைகளை வடிவமைத்து, மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நற்பெயரை பெற்றவர்.
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) - ஜனவரி 2025 - அறிவிப்பு - செய்திக் குறிப்பு வெளியீடு
Tamil Nadu Chief Minister's Talent Search Examination (TNCMTSE) for 10th Class Students in Government Schools - January 2025 - Notification - Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ₹1000 வழக்கப்படும்.
மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 9ம் தேதிக்குள், மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு...
Press Note on Issuance of Class 10th Original Marks Certificate...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024 செய்திக் குறிப்பு & அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் கடிதம்...
>>> தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024 செய்திக் குறிப்பு...
தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...
>>> பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம் - 25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு "தொடர்ந்து கற்போம்" திட்டத்தின் மூலம் 13-05-2024 முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு 10.05.2024 முதல் தொடங்குவதாக அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு...
மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
>>> அம்பேத்கர் பல்கலைக்கழகப் பதிவாளரின் செய்திக்குறிப்பு...
இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS Results தேர்வு முடிவுகள் 2023-2024 வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Press Release : MRB Counselling Intimation...
மருத்துவ அலுவலர் பணியிடங்கள் கலந்தாய்வுக்கான செய்தி குறிப்பு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் - திருத்திய செய்திக் குறிப்பு வெளியீடு (Change in half-yearly exams Timetable across Tamil Nadu - Revised press release)...
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும்.
>>> திருத்திய செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு (Half-yearly examination will be held as scheduled in all districts except 4 districts - Press release from Director of School Education)...
>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
செய்திக்குறிப்பு
➖➖➖➖➖➖➖➖➖
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க மேற்கண்ட அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.
இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வி இயக்ககம்
➖➖➖➖➖➖➖➖
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Tamil Nadu Chief Minister Talent Search Exam 2023 - Directorate of Government Examinations Press Release on Result Release)...
>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning - Directorate of Government Examinations Press Note)...
>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவர...