கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin should implement the old pension scheme as per his election campaign promise - Tamil Nadu Elementary School Teachers Mandram insists



 புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்னும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு, ஆசிரியர் அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது தேர்தல் காலப் பரப்புரை  வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திடல் வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல் 


The announcement by the Hon'ble Tamil Nadu Finance Minister that steps will be taken to implement the new Unified Pension Scheme (UPS) has created a tense atmosphere among the among the Teachers & Government Employees - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin should implement the old pension scheme as per his election campaign promise - Tamil Nadu Elementary School Teachers Mandram insists


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 

(மாநில அமைப்பு) 

பதிவெண்:17/74

அரசு அங்கீகாரம் எண்:991/89

--------------------------------------------


தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்‌ படி பழைய ஓய்வூதியத்திட்டம்‌ 01.04.2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்திடல் வேண்டும்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது!

----------------------------------------------


தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு   

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு விரைந்து தொடங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  அவர்கள்  மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினர்களின் சட்டமன்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து சட்டமன்றத்தில் 11.01.2025 அன்று தெரிவித்து உள்ளார்கள்.

 

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (ups) மத்திய அரசு நடப்பு 2025ஆம் ஆண்டில் அமல்படுத்துவதற்கு  அறிவிப்பு செய்து உள்ளது என்றும்மத்திய அரசின் இத்தகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் மத்திய அரசின் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை  உறுதி செய்யும் வகையில் உள்ளது என்றும்

 இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், மற்றும் விதிமுறைகள்  வெளியானதும் தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்றும் மேலும்,

தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்றும்  இத்திட்டம் சார்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இசைவுக்கு முன்வைக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் மேற்கண்டவாறான அறிவிப்புகள் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி தந்து உள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை - பெருங்கவலையை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.


ஒன்றிய அரசு அறிவித்து உள்ள புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு (UPS)   இந்திய நாடு முழுதும் கடுமையான எதிர்ப்புகள் -ஆட்சேபனைகள்  பெருமளவில் எழுந்துள்ளது.

இத்திட்டம் தேவையற்றது;

பயனற்றது  என்றும் வரையறுக்கப்பட்ட பயன்தரும் பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் (OPS) தான் நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளும்-

போராட்டங்களும் வலுத்து வரும்  நிலையில் l, இந்தியாக் கூட்டணியில் இணைந்துள்ள பல்வேறுக்கட்சிகள்  ஒன்றிய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து எதிர்வினைகள்  ஆற்றிவரும்  நிலையில் 

மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் 

அறிவிப்புகள் பெருத்த விவாதத்தையும் - விமர்சனத்தையும் ஆசிரியர் -அரசு ஊழியர்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மீது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கொண்டு இருக்கும் அசைக்க முடியாத பெருத்த நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தும் உள்ளது.

ஆசிரியர்-அரசு ஊழியர்களை தன்னெழுச்சியாக போராடும் சூழ்நிலைக்கும் தள்ளி விட்டும் உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு,  கடந்த சட்டமன்றத் தேர்தல் காலப் பரப்புரை  வாக்குறுதியின் படி மற்றும் தேர்தல் அறிக்கையின் உறுதிமொழியின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 01.04.2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை  தொடர்ந்து அமல்படுத்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களின் பாதுகாவலர் தலைவர் கலைஞர் அவர்களின்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிடமாடல் அரசு  என்பதை மெய்ப்பித்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடல் வேண்டும் என்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.



இவண்...


பெ.இரா.இரவி

மாநிலத்தலைவர்


முனைவர்-மன்றம்

நா.சண்முகநாதன்

பொதுச்செயலாளர்


முருகசெல்வராசன்

மாநிலப்பொருளாளர்


புதுக்கோட்டை

12.01.2025


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - TNTF insists

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொட...