கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamilnadu government's announcement regarding pension scheme is a scam - TNPTF General Body Condemns



 ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஏமாற்று வித்தை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கண்டனம்


Tamilnadu government's announcement regarding pension scheme is a scam - Tamil Nadu Primary School Teachers' Federation General Body Condemns


தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிவுத்திருப்பது ஒரு ஏமாற்று வித்தை என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (12.01.2025) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற்றது. 


கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூத்திட்டத்தைச் செயல்படுத்திட ஏதுவாக ஓய்வூதியம் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டவுடன் புதிதாகக் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக்குழுவின் அறிக்கையைப் பெற்று ஓய்வூதியத்திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்று வித்தையாகும். தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்போது "ஒன்றிய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தைப் பின்பற்றி அது தொடர்பாக குழு அமைத்து அதன் அறிக்கையைப் பெற்று தக்கதொரு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்" என்று கூறுவது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் ஏமாற்றும் செயலாகும். 


எனவே, இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று தேர்தல் வாக்குறுதியில் எழுத்து மூலமாகத் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாக பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப் பதிவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து தொடக்கக் கல்வித்துறையில் பதவி உயர்வுகள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் கருதி மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் காலமுறை ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைக் தடைகளை உடனடியாக நீக்கி ஆணைகள் வெளியிடப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதலின் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22.02.2025 அன்று STFI சார்பில் சென்னையில் நடைபெறும் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்திலும், 07.03.2025ல் டிட்டோஜாக் சார்பில் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Manarkeni App Download & Update Link - Version 0.0.39 - Updated on 11-12-2024

  TNSED Manarkeni App Download & Update Link - Version 0.0.39 - Updated on 11 December 2024 What's New New CLAT Content is Added. Bu...