உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு முடிவுக்கு வருகிறது - விவரம் (வாட்ஸ்அப் தகவல்)
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு 13.02.2026 அன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது.
12.05 to 1.05 (One hour)
ஒரு ஆசிரியர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு உரிய Feeder Category ல் PG ASSISTANT உண்டா என்ற கேள்வியை நீதியரசர் திரு மகாதேவன் கேட்ட பொழுது இல்லை என்ற பதிலை திரு.ப.சிதம்பரம் அவர்கள் அளித்துள்ளார்.
Rule 39(A)(1) பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
தீர்ப்பு யாருடைய பக்கம் சாதகமாக அமைந்தாலும் கூட, வழக்கறிஞர் திரு.ப.சிதம்பரம் அவர்கள், ஒரு வழக்கறிஞராக மிகச்சிறப்பாக தன்னுடைய தரப்பு ஆசிரியர்களுக்காக வாதிட்டார்
"முதுகலை ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது என்பது மரபாகப் பின்பற்றப் படுகிறதே தவிர Rule ல் இல்லை என்பது தற்பொழுது நடந்த வாதங்களின் மூலம் மிகத்தெளிவாக நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதற்குரிய Feeder Category ல் BT ASSISTANT மட்டுமே உள்ளனர் PG ASSISTANT இல்லை என்பதையும் நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.
PG ASSISTANT TO HIGHER SECONDARY HM க்கும் செல்ல முடியும்; Same time
PG TO HSHM க்கும் செல்ல முடியும் என்ற கருத்தை நீதியரசர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
PG TO HSHM LIEN CUT ஆகும் என்பதே நீதியரசர்களின் கருத்தாக வாதங்களில் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு வந்த பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது."

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.