கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalai Thiruvizha Competitions 2026-2027 | Guidelines | Joint Proceedings of the Directors



கலைத்திருவிழா போட்டிகள் 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


Kalai Thiruvizha Competitions 2026-2027 | Guidelines | Joint Proceedings of the Directors


பள்ளிக் கல்வி - 2026-2027 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து இயக்குநர்களின் செயல்முறைகள்



பள்ளிக் கல்வித்துறை


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 600006.


ந.க.எண்.1800/ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2026, நாள்: 17.07.2026


பொருள்:


2026-27 பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து.


 கலைத்திருவிழா என்பது பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான கலை மற்றும் பண்பாட்டு விழாவாகும். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை, தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். மேலும், இவ்விழாவானது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு, அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது.


அதன்படி, 2026-2027ம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகளை "இளையோர் திறன்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பின்வரும் ஐந்து பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


கலைத்திருவிழா 2026-2027 போட்டிப் பிரிவுகள் மற்றும் எண்ணிக்கை


பிரிவு         வகுப்புகள்     போட்டிகளின் எண்ணிக்கை


பிரிவு 1

1 மற்றும் 2 ஆம் வகுப்பு

9 போட்டிகள்


பிரிவு 2

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை

15 போட்டிகள்


பிரிவு 3

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை

18 போட்டிகள்


பிரிவு 4

9 மற்றும் 10 ஆம் வகுப்பு

32 போட்டிகள்


பிரிவு 5

11 மற்றும் 12 ஆம் வகுப்பு

32 போட்டிகள்




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...