ஏப்ரல் 23ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை
தமிழ்நாட்டில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் நாளில் (ஏப்ரல் 23) தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அந்தந்த தேர்தல் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.