கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அங்கீகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அங்கீகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அனைத்து வகை சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கட்டடங்கள் சார்பாக உரிய அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெறாவிட்டாலும் 01.06.2022 முதல் 31.05.2023 வரை தொடர் அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க அனுமதித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை (1டி) எண்: 221, நாள்: 10-08-2022 வெளியீடு (School Education Department G.O. (1D) No: 221, Dated: 10-08-2022 Issued to allow issuance of continuous permission and authorization from 01.06.2022 to 31.05.2023 on behalf of all types of Self-Financed and Government-Aided School buildings even without approval from the relevant body)...

 


>>> அனைத்து வகை சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கட்டடங்கள் சார்பாக உரிய அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெறாவிட்டாலும் 01.06.2022 முதல் 31.05.2023 வரை தொடர் அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க அனுமதித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை (1டி) எண்: 221, நாள்: 10-08-2022 வெளியீடு (School Education Department G.O. (1D) No: 221, Dated: 10-08-2022 Issued to allow issuance of continuous permission and authorization from 01.06.2022 to 31.05.2023 on behalf of all types of Self-Financed and Government-Aided School buildings even without approval from the relevant body)...


அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை  உத்தரவு. 


கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி என பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு உத்தரவு.


மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கீகாரம் ஓராண்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.


ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே இறுதிவரை அங்கீகாரம் வழங்கல்.





ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை (Approval of Headmasters for Teachers' Transfer Applications)...

Teachers' Transfer Counselling 2022 -  ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பத்தை EMIS Portal-லில் submit செய்த பின் தலைமை ஆசிரியர் தங்களுடைய User IDயைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் விண்ணப்பத்தை Approve செய்ய வேண்டும்.











பள்ளிகளுக்கான அங்கீகாரம் இணைய வழியில் வழங்குதல் - அலுவலர்கள் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய கால அளவு நிர்ணயம் - அரசாணை( G.O.Ms.No.132, Dated:07-09-2021 ) வெளியீடு (Issuance of Accreditation for Schools Online - Timeline for Officers to Review Applications )...



 பள்ளிகளுக்கான அங்கீகாரம் இணைய வழியில் வழங்குதல் - அலுவலர்கள் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய கால அளவு நிர்ணயம் - அரசாணை( G.O.Ms.No.132, Dated:07-09-2021 ) வெளியீடு (Issuance of Accreditation for Schools Online - Timeline for Officers to Review Applications )...


>>> Click here to Download G.O.Ms.No.132, Dated:07-09-2021...


அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை உடனடியாக மூடுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு...



அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும், அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தொடக்கப்பள்ளிகள் நடத்த அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகள் இனி செயல்பட கூடாது.


அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அங்கு பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களை மாற்று பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் மாவட்டத்தில் செயல்படுமாயின் அதற்கு அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பு. அரசு விதிமுறையை நடைமுறைப்படுத்த மறந்த கல்வி அலுவலர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 07.05.2021...


தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 07.05.2021...

 



தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 5405/ எப்1/ 2021,  நாள்: 07.05.2021...


அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு...


🚫🚫 அங்கீகாரம் இல்லாத, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


✅✅ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்


>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 5405/ எப்1/ 2021,  நாள்: 07.05.2021...



அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...

 


G.O.No.16, Dated: 25-01-2021

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மறவாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.. இனியும் ஒரு தேதி நீட்டிப்புத் தவணை கிடைக்கும் என்று காத்திராமல் இதுவரை வரன்முறை செய்திடாத வீட்டு மனைகள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளை வரும் பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின் DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில் முறையாக விண்ணப்பித்து அத்துறையின் அனுமதி உத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்..... 

இதுகுறித்த 25-01-2021 நாளில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணை  PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.... 

>>> அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.28 வரை காலஅவகாசம்: ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கலாம்...

 தமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைபிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அங்கீகாரம் பெறாதமனைப்பிரிவுகளை பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைவாங்கியவர்களின் நலனைக் காக்கவும், அந்த மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்கவும், கடந்த 2017-ம் ஆண்டு மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மே 4-ம் தேதி இதற்கான விதிகளை வீட்டுவசதித் துறை வெளியிட்டது.


இந்த விதிகள்படி, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க, 2017, நவ.3 வரை 6 மாதம்காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு நவ.3-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.


இந்நிலையில், வரன்முறை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய மனைப்பிரிவு உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மீண்டும் வரன்முறைக்கான வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதிலும் கால நீட்டிப்பு கோரப்பட்டது.


இதையடுத்து தமிழக வீட்டுவசதித் துறை செயலர் தற்போது வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:


வரன்முறை திட்டத்துக்கான கால அவகாசம் முடிவுறுவது பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், கால அவகாசம் நீட்டிக்கப்படும் என தவறாக கருதியதாலும் பலர் விண்ணப்பிக்க தவறிவிட்டனர். இவ்வாறு விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் வரன்முறைப்படுத்த முடியாமல் விடுபட்ட மனைகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பளிக்கும் விதமாக, விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கலாம் என நகர் ஊரமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.


அதேபோல், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர், ஆன்லைன் மூலம் மனை மற்றும் மனைப்பிரிவுக்கு வரன்முறைப்படுத்த மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம் என தெரிவித்தார்.


இதை பரிசீலித்த தமிழக அரசு,மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறை செய்யத் தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதி மற்றும் அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டிருப்பின், அந்த மனைபிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எந்தவித மாற்றமும் இல்லாமல் வரும் பிப்.28-ம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...