கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆவணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆவணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கான ஆவணங்கள் குறித்த தேர்தல் ஆணைய சுற்றறிக்கை (Election Commission circular on Voter Identification Documents)...



>>> வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கான ஆவணங்கள் குறித்த தேர்தல் ஆணைய சுற்றறிக்கை...


Election Commission specifies the following documents for establishing the identity of such electors:- 

(I) Electoral Photo Identity Card (EPIC) provided under the authority of the Election Commission of India; 

(II) Passport; 

(iii) Driving License; 

(iv) Service Identity Cards with Photograph issued to Its employees by State / Central Government, Public Sector Undertakings, Local Bodies or Public Limited Companies; 

(v) Passbooks with photograph issued by Public Sector Banks / Post Office; 

(vi) PAN Card; 

(vii) Smart Card issued by RGI under NPR; 

(viii) Job Cards under MGNREGA ,cheme with Photograph; 

(Ix) Health Insurance Scheme Smart Cards with Photograph issued by the State or Central Government authorities. 

(x) Pension Documents with Photograph, such as Ex-servicemen's Pension Book/Pension Payment Order / Ex-servicemen's Widow / Dependent Certificates; 

(xi) Official Identity Cards Issued to MPs/MLAs/MLCs; and

(xii) Aadhaar Card. 




2020 பிப்ரவரி முதல் காலாவதியான ஆவணங்கள் செப்டம்பர் 30 வரை செல்லும்: அரசு அறிவிப்பு...

 


2020 பிப்ரவரி முதல் காலாவதியான ஆவணங்கள் 2021 செப்டம்பர் 30 வரை செல்லும்: அரசு அறிவிப்பு...


ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் என  அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுனர் உரிமம், உடல் தகுதி சான்று, உள்ளிட்ட ஆவணங்களை காலாவதி தேதிக்கு பிறகு, மக்களால் புதுப்பிப்பது  இயலாமல் போனது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆவணங்களின் காலாவதி தேதியை அரசு அவ்வப்போது நீட்டித்து வருகிறது.


இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து ஓட்டுனர் உரிமம், பதிவு செய்தல் உள்ளிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான ஆவணங்களின் காலாவதி தேதி முடிந்து இருந்தாலோ, புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ அவற்றை வரும் 2021 செப்டம்பர் 30ம் தேதி வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதுவரையில் இதற்கு 6 முறை  அரசு நீட்டிப்பு அளித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாடு சான்றிதழுக்கு இந்த கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை.


மாசு கட்டுப்பாடு நாடு முழுவதும் ஒரே சான்றிதழ்: 
 சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989ன் கீழ், நாடு முழுவதிலும் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதில் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், இன்ஜின் எண், சேசிஸ் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கும். இந்த விவரங்கள் தேசிய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதற்காக வழங்கப்படும் க்யூஆர் கோடு மூலம் இத்தகவல்களை எளிதில் பெறலாம். இதில், செல்போன் எண் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமே, வாகனத்தின் காலாவதி தேதி, கட்டணத் தொகை உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.





வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? தேர்தல் ஆணையம் விளக்கம்...

What are the documents confirming the identity of the voter? - Election Commission...



ஓட்டு போடும்போது வாக்குச்சாவடியில் வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புகைப்பட அடையாள அட்டை இதுகுறித்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 நடைபெறவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு, வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும். 


மாற்று ஆவணங்கள் எவை? 

  1. கடவுச்சீட்டு,
  2. ஓட்டுனர் உரிமம், 
  3. மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், 
  4. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், 
  5. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, 
  6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, 
  7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, 
  8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, 
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 
  10. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, 
  11. ஆதார் கார்டு ஆகியவை ஆகும். 

 

தகவல் சீட்டு ஆவணம் அல்ல 

 வாக்காளர்களுக்கு புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டை அளிக்க தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு இந்த சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் தரப்படும். ஆனால் வாக்களிக்க வரும்போது, இதை தனித்த அடையாள ஆவணமாக காட்ட முடியாது. இந்தச் சீட்டை வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்க முடியாது. 


பட்டியலில் பெயர் 

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். 


 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...