குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவியில் சேர்ந்த 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
26 police officers who joined the post of DSP through Group 1 examination have been given IPS status
>>> Notification தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
குரூப் 1 தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்பியாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
2001 (2 பேர்), 2002 (9 பேர்), 2003 (14 பேர்), 2005 (ஒருவர்) என தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 26 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால், இப்பிரிவு போலீஸார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி-க்கள் நியமிக்கப்படுவதுண்டு. இவர்கள் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற பிறகு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அந்தஸ்து, கடந்த 2001-ம் ஆண்டு முதல் பணிக்கு சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்க தகுதியான 26 எஸ்.பி-க்களின் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அது தொடர்பாக டெல்லியில் மீட்டிங் நடந்தது. அதன்படி கடந்த 2001-ம் ஆண்டு டி.எஸ்.பி-யாக பணியில் சேர்ந்து தற்போது எஸ்.பி-யாகப் பணியாற்றும் மணி, செல்வக்குமார், 2002-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சுதாகர், ராஜராஜன், சக்திவேல், செந்தில்குமார், முத்தரசி, விமலா, நாகஜோதி, ராமகிருஷ்ணன், பெரோஷ்கான் அப்துல்லா ஆகிய 9 பேருக்கும் 2003-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரிகளான சுரேஷ்குமார், பாஸ்கர், சண்முகபிரியா, ஜெயக்குமார், மயில்வாகனன், ஜெயலட்சுமி, உமையாள், சுந்தரவடிவேல், சரவணன், செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, செல்வராஜ், ராஜன் ஆகியோருக்கும்... 2005-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரியான ஸ்டாலின் என மொத்தம் 26 பேருக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆர்டர் விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட காலமாக ஐ.பி.எஸ் அந்தஸ்த்தை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக காவல்துறையின் குரூப் ஒன் ஆபீஸர்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகளாகியுள்ளனர். அதே நேரத்தில் குற்றச்சாட்டில் சிக்கிய எஸ்.பி ஒருவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
ஐ.பி.எஸ் அந்தஸ்து பெற்ற காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது ``சீனியாரிட்டி அடிப்படையில் நேரடி டி.எஸ்.பி-க்களாக பணிக்குச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு ஐ.பி.எஸ் அந்தஸ்தை வழங்கும். ஆனால் சில ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதில் தகுதியான இரண்டு எஸ்.பி-க்களில் ஒருவர் காவல் பணியிலிருந்து விலகி விட்டார். இன்னொருவர், ஐ.பி.எஸ் அந்தஸ்து கிடைக்காமல் எஸ்.பி-யாகவே ஓய்வு பெற்றுவிட்டார். இது குறித்து தமிழக அரசிடம் தகுதியான எஸ்.பி-க்கள் கோரிக்கை வைத்தோம். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டது. அதனால்தான் தமிழகத்தில் 26 எஸ்.பி-க்களுக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து கிடைத்திருக்கிறது" என்றனர்.