கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எழுத்தறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்தறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NILP - 2024-25 - Conduct of Final Basic Literacy Test - Activities - Issuance of Guidelines - Proceedings of the Director

 

புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ - 2024-25ஆம்‌ ஆண்டு செயல்பாடுகள்‌ - இறுதி அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துதல்‌ - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ - பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌:065/ஆ2/2024, நாள்‌: 23.10.2024


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு தேதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. NILP திட்ட கற்போருக்கான தேர்வு (10.11.24) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது...



New India Literacy Program - Activities for the year 2024-25 - Conduct of Final Basic Literacy Test - Activities to be undertaken - Issuance of Guidelines - Proceedings of the Director of Non-School and Adult Education No:065/A2/2024, Dated: 23.10.2024



பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

முன்னிலை: முனைவர்‌.சு.நாகராஜ முருகன்‌

ந.க.எண்‌:065/ஆ2/2024, நாள்‌: 23.10.2024


பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்ககம்‌ - புதிய. பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-27 - நடப்பு 2024-25ஆம்‌ ஆண்டு செயல்பாடுகள்‌ - திட்ட முதற்கட்ட கற்போருக்கு 10.11.24அன்று இறுதி அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துதல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ - சார்பு.


பார்வை: 1, 2024-25ஆம்‌ ஆண்டிற்கான புதிய பராத எழுத்தறிவுத்‌ திட்ட ஏற்பளிப்புக்‌ குழு கூட்ட (PAB) நாள்‌ 22.03.24

2, அரசாணை நிலை எண்‌.159, பள்ளிக்‌ கல்வித்(எம்‌எஸ்‌) துறை, நாள்‌: 09.07.24

3, இவ்வியக்கக செயல்முறைகள்‌ ந.க.எண்‌.065/ஆ2/2024, நாள்‌: 09.07.24


தமிழ்நாட்டில்‌, 15வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத்‌ தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வி வழங்கிடும்‌ வகையில்‌ புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ கடந்த 2022-23 ஆம்‌ ஆண்டு முதல்‌ அனைத்து 38 மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்‌, 2022-23ஆம்‌ ஆண்டு முதல்‌ 2024-25ஆம்‌ ஆண்டு வரை 16 இலட்சம்‌ பேர்‌ பயனடைந்துள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்‌.


பார்வை-3இல்‌ காணும்‌ செயல்முறைகளின்படி, 2024-25ஆம்‌ ஆண்டில்‌ அனைத்து எழுதப்படிக்கத்‌ தெரியாதோர்‌ அனைவரையும்‌ 100% கண்டறிந்து, அவர்கள்‌ அனைவருக்கும்‌ அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வி கற்கும்‌ வாய்ப்பை வழங்கிடும்‌ வகையில்‌ திட்டச்‌ செயல்பாடுகளை இரண்டு கட்டங்களாகப்‌ பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதன்‌ அடிப்படையில்‌, திட்ட முதற்கட்டத்தில்‌ விரிவான கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள 6.14இலட்சம்‌ நபர்களுள்‌, 5.09இலட்சம்‌ நபர்கள்‌ அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளி வளாகங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள 30,113 கற்போர்‌ எழுத்தறிவு மையங்களில்‌ சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 30,113 தன்னார்வலர்களின்‌ உதவியுடன்‌ 200 மணி நேரக்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ கற்றல்‌ செயல்பாடுகள்‌ 2024-ஜுலை மாதம்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்ட இரண்டாம்‌ கட்டம்‌ 2024-நவம்பர்‌ மாதம்‌ முதல்‌ 2025-மார்ச்‌ மாதம்‌ வரை செயல்படுத்தப்படும்‌.


தற்போது, திட்ட முதற்கட்டத்தின்கீழ்‌. விரிவான கணக்கெடுப்பின்‌ மூலம்‌ கண்டறியப்பட்டு, அனைத்து 38 மாவட்டங்களிலும்‌ இணைப்பில்‌ கண்டுள்ளபடி எழுத்தறிவு மையங்களில்‌ சேர்க்கப்பட்டுள்ள 5,09,459 கற்போருக்கு வருகின்ற 10.11.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்குப்‌ பின்வருமாறு வழங்கப்படுகிறது.





புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP (New India Literacy Programme) - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...



>>> புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



NILP கற்போருக்கான தேர்வு


👉 *தேர்வு நடைபெறும் நாள்:* 19/03/23.


👉 *நேரம்:* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (இந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம்)


👉 *தேர்வு நடைபெறும் இடம்:* 

அந்த அந்த பள்ளியில் அல்லது பொதுஇடம் அல்லது கற்போரின் இல்லம்.


👉 *வினாத்தாள்*  ( தலைமையாசிரியர் வினாத்தாளை வட்டார வள மையத்தில் சனிக்கிழமை மாலை(18/03/23) 2 மணியளவில் பெற்று கொண்டு பாதுகாப்பாக பள்ளியில் வேண்டும்).


👉 *மையத்தின் வகுப்பறை(hall suprindentant) கண்காணிப்பாளர்:* தன்னார்வலர் ஆவர்.


👉 *ஒட்டுமொத்த பொறுப்பாளர்:* தலைமையாசிரியர் ஆவர் 


👉 ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை  தலைமையாசிரியர் பதிவு செய்ய வேண்டும்.


👉தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளை ஞாயிறு அன்றே  வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.


நன்றி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தறிவித்தல் இயக்கம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஷ்...



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ட்வீட்டர் பதிவு:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம், கே. கள்ளிக்குடியில் 100% கல்வி என்ற இலக்கை நோக்கி எழுத்தறிவு இயக்கத்தின் தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தேன். 


ஒவ்வொரு இடத்திலும் கற்பிக்கும் பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்த உள்ளனர்.


மணிகண்டம் ஒன்றியத்தில் 2021-யின் மக்கள் தொகையின் கணக்கின்படி 14,89,977 நபர்கள் உள்ளனர். 


அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கே எழுத்தறிவு இல்லாதவர்கள் 4599 நபர்கள் பெண்கள் 3576, ஆண்கள் 913 பேர் உள்ளனர். முதலில் அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும் பின்னர் படிக்கவும் 69 நாட்களில் இலக்காகக் கொண்டு செயல்படுத்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சுமார் 1 கோடி நபர்கள் இவ்வியக்கத்தினால் பயன்பெற இருக்கிறார்கள். இதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ஆவண செய்துள்ளோம். 


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக் கல்வி அரசு அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.




செய்தி:

திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். 


இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-


பணியிடமாறுதல் கலந்தாய்வு 


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். அதன்படி அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறேன். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிநிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற வேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்த முடியவில்லை. 


முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று விரைவில் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ, அது சரி செய்யப்படும். 


கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும், விரிவுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் உள்ளன. கொரோனா பரவலால் பள்ளிகள் செயல்படாமல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பயன்பாடின்றி உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.


அக்டோபரில் தேர்வு 


பிளஸ்-2 வில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம். கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.  தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின்போது, பள்ளியில் சிலம்பம் சுற்றி அசத்திய 2 மாணவிகளை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார்.


எழுத்தறிவித்தல் இயக்கம்


இதையடுத்து திருச்சி மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சியில் 100 சதவீதம் எழுத்தறிவித்தல் இயக்கத்தை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், அஞ்சலை என்ற பெண்ணுக்கு அவர் எழுத்து பயிற்சி அளித்தார். அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், "கிராமப்புறங்களில் கைரேகை வைக்கும் சூழல் இன்றளவும் உள்ளது. கல்வியறிவு இல்லாத முதியவர்களுக்கு எழுத்தறிவித்தல் திட்டத்தின் கீழ் கையெழுத்திடும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு கல்வியறிவில் 81 சதவீதம் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் கல்வியறிவில் தமிழகம் 100 சதவீதம் இருக்கும் வகையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.


100 சதவீதம் கல்வியறிவு 


ஏற்கனவே உள்ள இந்த திட்டத்தை மெருகேற்றும் வகையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கையெழுத்து போட தெரியவில்லை. தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தறிவித்தல் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 69 நாட்களில் எழுத பழக்கி விடுவோம்" என்று கூறினார். 


இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் சிவராசு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக்க நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

 தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக்க நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...