கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NILP - 2024-25 - Conduct of Final Basic Literacy Test - Activities - Issuance of Guidelines - Proceedings of the Director

 

புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ - 2024-25ஆம்‌ ஆண்டு செயல்பாடுகள்‌ - இறுதி அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துதல்‌ - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ - பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌:065/ஆ2/2024, நாள்‌: 23.10.2024


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு தேதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. NILP திட்ட கற்போருக்கான தேர்வு (10.11.24) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது...



New India Literacy Program - Activities for the year 2024-25 - Conduct of Final Basic Literacy Test - Activities to be undertaken - Issuance of Guidelines - Proceedings of the Director of Non-School and Adult Education No:065/A2/2024, Dated: 23.10.2024



பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

முன்னிலை: முனைவர்‌.சு.நாகராஜ முருகன்‌

ந.க.எண்‌:065/ஆ2/2024, நாள்‌: 23.10.2024


பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்ககம்‌ - புதிய. பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-27 - நடப்பு 2024-25ஆம்‌ ஆண்டு செயல்பாடுகள்‌ - திட்ட முதற்கட்ட கற்போருக்கு 10.11.24அன்று இறுதி அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துதல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ - சார்பு.


பார்வை: 1, 2024-25ஆம்‌ ஆண்டிற்கான புதிய பராத எழுத்தறிவுத்‌ திட்ட ஏற்பளிப்புக்‌ குழு கூட்ட (PAB) நாள்‌ 22.03.24

2, அரசாணை நிலை எண்‌.159, பள்ளிக்‌ கல்வித்(எம்‌எஸ்‌) துறை, நாள்‌: 09.07.24

3, இவ்வியக்கக செயல்முறைகள்‌ ந.க.எண்‌.065/ஆ2/2024, நாள்‌: 09.07.24


தமிழ்நாட்டில்‌, 15வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத்‌ தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வி வழங்கிடும்‌ வகையில்‌ புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ கடந்த 2022-23 ஆம்‌ ஆண்டு முதல்‌ அனைத்து 38 மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்‌, 2022-23ஆம்‌ ஆண்டு முதல்‌ 2024-25ஆம்‌ ஆண்டு வரை 16 இலட்சம்‌ பேர்‌ பயனடைந்துள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்‌.


பார்வை-3இல்‌ காணும்‌ செயல்முறைகளின்படி, 2024-25ஆம்‌ ஆண்டில்‌ அனைத்து எழுதப்படிக்கத்‌ தெரியாதோர்‌ அனைவரையும்‌ 100% கண்டறிந்து, அவர்கள்‌ அனைவருக்கும்‌ அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வி கற்கும்‌ வாய்ப்பை வழங்கிடும்‌ வகையில்‌ திட்டச்‌ செயல்பாடுகளை இரண்டு கட்டங்களாகப்‌ பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதன்‌ அடிப்படையில்‌, திட்ட முதற்கட்டத்தில்‌ விரிவான கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள 6.14இலட்சம்‌ நபர்களுள்‌, 5.09இலட்சம்‌ நபர்கள்‌ அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளி வளாகங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள 30,113 கற்போர்‌ எழுத்தறிவு மையங்களில்‌ சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 30,113 தன்னார்வலர்களின்‌ உதவியுடன்‌ 200 மணி நேரக்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ கற்றல்‌ செயல்பாடுகள்‌ 2024-ஜுலை மாதம்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்ட இரண்டாம்‌ கட்டம்‌ 2024-நவம்பர்‌ மாதம்‌ முதல்‌ 2025-மார்ச்‌ மாதம்‌ வரை செயல்படுத்தப்படும்‌.


தற்போது, திட்ட முதற்கட்டத்தின்கீழ்‌. விரிவான கணக்கெடுப்பின்‌ மூலம்‌ கண்டறியப்பட்டு, அனைத்து 38 மாவட்டங்களிலும்‌ இணைப்பில்‌ கண்டுள்ளபடி எழுத்தறிவு மையங்களில்‌ சேர்க்கப்பட்டுள்ள 5,09,459 கற்போருக்கு வருகின்ற 10.11.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்குப்‌ பின்வருமாறு வழங்கப்படுகிறது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns