கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) 2021 ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் தகவல்...
மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) 2021 ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் தகவல்...
2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி விவரங்கள் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர் பாலு கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பதில்:
நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது 16-வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். பொதுவாக இதன் முதற்கட்ட பணிகள் ஏப்ரல் 2020 முதல் துவங்கி செப்டம்பர் 2020 முடிய நடைபெறும். இரண்டாம் கட்டப் பணி மற்றும் இறுதி கட்டப் பணிகள் 2021-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 9 முதல் 28 முடிய நடைபெறும். முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணிகளும் சேர்த்து மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், தொலைபேசி எண் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படும்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிவாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என, மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளில் தொடரும் சட்ட சிக்கல்களை சரி செய்ய, மத்திய அரசால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்தார்.
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். அதில், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, மத்திய அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும், மக்கள் தொகைக்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்பு & கல்வி நிறுவனங்களிலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இடஒதுக்கீட்டிலும், கணக்கெடுப்புகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் வரும் சட்ட சிக்கல்களுக்கும் தீர்வுகள் காண்பதற்கு, மத்திய அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District
நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம் List of Selected Candidates ...