ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி செல்லா மாணவர்களைக் கண்டறியும் வகையில் பிரத்யேக ‘சர்வே ஆப்’ மூலம் கணக்கெடுக்கும் பணி மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது.
கோவிட் -19 பெருந்தொற்று காரணமாகக் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு, கூடுதல் கவனத்துடன் 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இன்று முதல் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆக.10-ம் தேதி முதல் ஆக.31-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் ஆலோசனையின்படி இன்று முதல் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் 2,280-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பள்ளி செல்லா மாணவர்கள் பற்றிக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ’சர்வே ஆப்’ மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பள்ளி செல்லா மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - கரூர் மாவட்டம்
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகள்
பிறப்பிப்பவர் : திருமதி. கே.பி மகேஸ்வரி,
எம். ஏ., பி.எட்.,
ந.க.எண்.170/பசெகு/ஒபக/2021-22, நாள்: 05.08.2021
பொருள் : கரூர் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2021-22 - EER பதிவேடு பராமரித்தல் மற்றும் பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிதல் - கள ஆய்வு மேற்கொள்ளுதல் - சார்பு.
பார்வை: மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை - 6, அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்:6834/ஆ 1/பசெகு/ஒபக/2021 நாள்: 29.07.21.
>>> மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகள்...
பார்வையில் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர், அவர்களின் கடிதத்தில், ஆரம்பக்கல்வி பதிவேடு (EER) புதுப்பித்தல் சார்ந்த தெளிவுரைகளும், 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் பணியினை 10.08.2021 முதல் 31.08.2021 வரை மேற்கொள்வதற்கான தெளிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பார்வைக்கடிதத்தின்படி,
1. EER பதிவேடுகள் பராமரித்தல்:
EER பதிவேடுகள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களும் உறுதி செய்யவேண்டும். சென்ற ஆண்டு வரை, இப்பதிவேடு 6 - 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ( 8 ம் வகுப்பு வரை) தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வந்தது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, 2021-22 ம் ஆண்டு முதல் 19 வயது வரையுள்ள மாணாக்கர்களுக்கும் பராமரிக்க வேண்டும்.
குடியிருப்பு வாரியாக ஒவ்வொரு மாணாக்கரும் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை கற்பதை EER பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். இதற்கான தரவுகளை குடியிருப்பு பகுதிகள் மற்றும் அருகாமையிலுள்ள உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து பெற்று ஆரம்பக்கல்வி பதிவேட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். ஆரம்பக்கல்வி பதிவேட்டில் பதிவு மேற்கொள்ளுதல் தொடர்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ வேண்டும்.
ஆய்வு அலுவலரான வட்டாரக்கல்வி அலுவலர் பள்ளியினை ஆய்வு செய்யும்போது, ஆரம்ப கல்வி பதிவேடு (EER) புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதி செய்து அப்பதிவேட்டில் மேலொப்பமிட வேண்டும்.
EER விவரங்களை, பள்ளி வாரியாக குறுவளமைய அளவில் தொகுத்து, வட்டார வளமையத்தில் தொகுப்பினை வைத்திருத்தல் வேண்டும். அத்தொகுப்பிலும் வட்டாரக்கல்வி அலுவலரின் கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்.
EER பதிவேடுகள் மூலம் கல்வியை தொடராத மாணாக்கர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்விகற்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு:
10.08.21 முதல் 31.08.2021 வரை 6 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இப்பணியில், அனைத்து ஒன்றியங்களிலும் வீடு வீடாக சென்று மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும்.
அதன் முதற்கட்டமாக ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை உள்ள மாணாக்கர்களில் இதுநாள்வரை பாடப்புத்தகங்களை பெற பள்ளிக்கு வராத மாணாக்கர்களின் பட்டியல் சேகரிக்க வேண்டும். (ஜூன் 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை. அம்மாணவர்களை பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பின் போது கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின்/ குடும்பங்களின் குழந்தைகளில் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் உள்ள குழந்தைகளை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இக்கணக்கெடுப்பில் அனைத்து தொடக்க / நடுநிலை! உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஈடுபடவேண்டும்.
சம்மந்தப்பட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர்பயிற்றுநர்கள் கணக்கெடுப்பு நடைபெறும் பகுதி, நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்களை (Tentative List) வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு தெரிவித்து அவர்களுடன் இணைந்து கணக்கெடுப்பு பணியினை சிறப்பாகவும், எந்தவித புகாருக்கு இடமளிக்காவண்ணமும் நடத்திட வேண்டும்.
அனைத்து தொடக்க / நடுநிலை! உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆகியோர் மேற்குறிப்பிட்ட அனைத்து தெளிவுரைகளையும் சிறப்பாக பின்பற்றி EER பதிவேடுகள் பராமரித்தல் பணியினையும் மற்றும் பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியினையும் சிறப்பாக நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: COVID-19 தொடர்பாக அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.
கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்
ஒருங்கிணைந்த கல்வி,
கரூர்.
பெறுநர்:
அனைத்து தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்
அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ)
நகல்:
மாவட்டக்கல்வி அலுவலர்கள், கரூர் மற்றும் குளித்தலை.
>>> மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகள்...
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...