கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...
ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 11.50லிருந்து 11.25 சதவீதமாக குறைப்பு - திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 01-02-2022 (Reduction in interest rates from 11.50 to 11.25 percent on loans to members through Teachers Thrift Co-operative Society - Proceedings of the Managing Director, Tiruchirappalli District Central Co-operative Bank, Date: 01-02-2022)...
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs - Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs - Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...
>>> கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...
கடனை திருப்பி செலுத்தாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று,செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது.
பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.
எனவே, அவ்வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும்ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.
இனிவரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் & அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...
பள்ளிகள் & அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 20438/ சி5/ இ3/ 2021, நாள்: 12-04-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
26-01-2025 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...