கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

HOUSING LOAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HOUSING LOAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply (Can Government Employees and Teachers get Income Tax deduction for home loan principal and interest paid by them in case of taking home loan without permission? - CM CELL Reply)...

 

 

>>> அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM SPECIAL CELL Reply (Can Government Employees and Teachers get Income Tax deduction for home loan principal and interest paid by them in case of taking home loan without permission? - CM CELL Reply)...


அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலாது என்பதற்கான அரசாணைகள் ஏதும் பெறப்படவில்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல்கள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


>>> பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம் (Home loan principal, interest and house rent can be deducted while calculating income tax - Clarification received through RTI)...

 

>>> வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம் (Home loan principal, interest and house rent can be deducted while calculating income tax - Clarification received through RTI)...


அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...



>>> அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற வீட்டுக் கடன்களை மாநில அரசு வழங்கும் கடன் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு (Migration) கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு...

 Housing and Urban Development Department,

Secretariat, Chennai-9.

Letter (Ms.) No.73 dated.11.O3.2O21.


  • Housing and Urban Development Department, Principal Secretary Letter (Ms.) No.73 dated.11.O3.2O21.

  • APPLICATION FORM FOR THE GRANT OF AN ADVANCE FOR MIGRATION OF LOAN FROM OTHER FINANCIAL INSTITUTIONS UNDER THE RULES REGULATING THE GRANT OF ADVANCES TO GOVERNMENT SERVANTS FOR BUTLDING ETC., OF HOUSES.

  • CHECK-SLIP FOR SCRUTINISING THE APPLICATION FOR SANCTION OF HOUSE BUILDING ADVANCE


>>> வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற வீட்டுக் கடன்களை மாநில அரசு வழங்கும் கடன் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு (Migration) கூடுதல் அறிவுரைகள் - அரசுக் கடிதம்  (Letter (Ms.) No.73 dated.11.O3.2O21) மற்றும் விண்ணப்பப் படிவங்கள்...


அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை...

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021...

அரசு கடிதத்தில் வீடு கட்டும் முன்பணம் கோரும் அரசு ஊழியர்கள் . வீடு கட்டும் மனை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பித்து வீடு கட்டும் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் , சொத்து அமைந்துள்ள இடத்தை தேவைப்படும் போது ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கோரும் அதிகாரம் முன்பணம் ஒப்பளிப்பு அளிக்கும் அதிகாரிக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு சிறப்பு காவல் - 8 ம் அணி , வான்தந்தி குழுமம் , திகார் சிறை வளாகம் , புதுதில்லியில் அவில்தாராக பணிபுரியும் திரு . எம் . மூவேந்தன் , ( 1463 ) , என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வீடு கட்ட உள்ளதாலும் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ளதாலும் , அவருக்கு வீடு முன் பணம் அனுமதிப்பது குறித்த தெளிவுரையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் வேறு மாவட்டங்களிலும் இருக்கலாம் என்பதால் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ள தமிழக அரசு ஊழியர்கள் , வீடு கட்டும் முன்பணம் பெற்று தமிழ்நாட்டில் வீடு கட்ட உத்தேசித்தால் , அவ்வூழியர்கள் எந்த மாவட்டத்தில் வீடு கட்ட உத்தேசித்துள்ளனரோ அந்த மாவட்ட ஆட்சித் தலைவரே வீடு கட்டும் முன்பணம் வழங்க ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

>>>  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வீட்டுக்கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்து கொள்ளலாமா - RTI மூலம் பெறப்பட்ட தகவல்...

 வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளலாமா என சென்னை வருமான வரித்துறை ஆணையர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டது.  வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் வருமான வரிச்சட்டம் பிரிவு 24 ம் மற்றும் பிரிவு 10(13A)ன் படி கழித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.



மேற்கண்ட HRA & Housing loan deduction ன் விளக்கம் - Loan வாங்கியிருக்கும் வீடு ஒரு ஊரிலும் தற்போது  வாடகையில் குடியிருக்கும் வீடு ஒரு ஊரிலும் இருக்கும் பட்சத்தில் வாடகை வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கான receipt with his PAN Number பெற்று சமர்பித்தால் மட்டுமே HRA & House loan இரண்டையும் கழித்துக் கொள்ள முடியும்.  Housing Loan பெற்ற வீட்டிலேயே  வசித்தால் இந்த பயனை பெற முடியாது.

வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை – வருமான வரித்துறை அறிவிப்பு...

 


ரூ.2 கோடி வரையிலான மதிப்பில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு சலுகை தொகுப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் உள்ளன. இத்தகைய வீடுகளை விற்பனை செய்ய ஏதுவாக மத்திய அரசு ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சலுகை தொகுப்பு திட்டங்கள் அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறையினரும், வீடு வாங்குவோரும் பயன்பெறும் வகையில் வருமான வரிச்சட்டம் பிரிவு 43 சிஏ மற்றும் வருமான வரிச்சட்டம் 56(2)(எக்ஸ்) ஆகியவற்றின் படி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ.2 கோடி வரையிலான மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனையை வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கு 20 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதித்து ரியல் எஸ்டேட் துறையினர், வீடு வாங்குவோர் வரிச்சலுகை பெறும்வகையில் வருமான வரி சட்ட விதிகள் தளர்த்தப்படுகின்றன.

அரசின் வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே ஏற்கனவே இருந்து வந்த 5 சதவீத வித்தியாசம் 10 சதவீத வித்தியாசமாக உயர்த்தப்பட்டு வரிச்சலுகை அனுமதிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ.2 கோடி வரை மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனைக்கு இந்த வித்தியாசம் 20 சதவீத அளவுக்கு தளர்த்தப்படுகிறது. இது  ஜூன் மாதம் 30-ம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

இதன்மூலம் வீடு வாங்குவோர் குறைவான வரி செலுத்தினால் போதும். இந்த சலுகை வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்துக்கு உதவும். இதற்காக வருமான வரி சட்டத்தில் உரிய நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன..?

 


கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா? 

7 வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு.

கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் எதில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும் என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அதாவது, பொதுத்துறை வங்கிகள்தான் எனப் பலரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில் சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்.

அது மட்டுமல்ல, கடந்த அத்தியாயத்தைப் படித்த மதுக்கூர் மணி என்பவர் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது...

கடன் வாங்கினேன், திரும்பக் கட்ட முடியவில்லை...

``நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது தனியார் வங்கியில் எனது பெயரில் சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்த பிணையும் வைக்காமல் தனிநபர் கடன் வாங்கினேன். தற்போது கொரோனாவின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதமாக வேலையின்றி இருக்கிறேன். இந்த நிலையில, கடன் தவணையைக் கட்ட வேண்டும் என்று வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்று கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்...

6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, கடன் தவணை தள்ளிவைப்பு (Loan Moratorium) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா பிரச்னையின் காரணமாக அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாத காலம் மாதத் தவணைகளை தள்ளி செலுத்தும் வசதியைக் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு சலுகையாக வழங்குகிறது. இது கொரோனா காலத்துக்கு முன்பு தாங்கள் கடனை ஒழுங்காக செலுத்தி இருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகள் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே நான் அவருக்கு அளிக்கும் பதில்.

ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவு வட்டி?

சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில் தனிநபர் கடன் ரூ.2 லட்சத்துக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம் 24% எனில் (தற்போதைய சூழ்நிலையில் தனிநபர் கடன் வட்டி விகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரை தரப்படுகிறது), நம்மில் பலர் மாதம் இரண்டு வட்டி என்ற முறையில் நம்மிடம் வட்டி பணம் வசூலிக்கிறது என்று நினைக்கிறார்கள்.

அதாவது, வருடத்துக்கு 24% வட்டி என்றால் மாதத்துக்கு 2% வட்டி என்று கணக்கிடுகிறார்கள். இது தவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்கு மூன்று வருடங்களுக்கு மாதாந்தரத் தவணை ரூ.7,847 என்று வரும். அப்படி மூன்று வருடங்களுக்குச் செலுத்தினால், மொத்த வட்டி செலுத்திய தொகை ரூ.82,476 என்று வரும்.

இதுவே நாம் நடைமுறையில் பேசும் இரண்டு வட்டி என்று கணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை மூன்று வருடங்களுக்கு ரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாத வட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்து நாம் சாதாரணமாக வட்டி கணக்கிடுவதற்கும் வங்கிகள் வட்டி கணக்கிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.

கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி

இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போது வேண்டுமானாலும் பகுதி பகுதியாகவோ, மொத்தமாகவோ செலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறு பகுதி பகுதியாகச் செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறு வட்டித் தொகை குறையும். இத்தகைய கடன் திட்டம் பெரும்பாலும் தங்க நகைக் கடன்களில் வழங்கப்படுகிறது.


ஒரே விதமான கடனுக்கு, வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு இடையே மாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல் வருமானம், சொத்து மதிப்பு, கடன் தகவல் அறிக்கையில் எந்த பாதகமான விஷயங்களும் இடம்பெறாதது ஆகியவற்றைக் கொண்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!

மேற்சொன்ன அம்சங்கள் மட்டுமல்லாமல், இப்போது வந்திருக்கும் ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் தங்களின் சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன் அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள், கடன் தேவையின் அவசரம் ஆகியவற்றைக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் அளவையும் வட்டி விகிதத்தையும் தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள் எந்த வங்கியிலோ, வங்கிசாரா நிதி நிறுவனத்திலோ கடன் வாங்குவதற்கு முன்னால், அந்த வட்டி விகிதம்தான் தங்களுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த வட்டி விகிதம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ் மூலம் கடன் தரும் நிறுவனங்களிலிருந்து முடிந்தவரை கடன் பெறாமலே இருப்பது நல்லது.

இப்போது மாதாந்தரத் தவணை கணக்கீட்டு முறையையும் வட்டி விகிதங்கள் பற்றியான தகவல்களையும் பற்றி ஓரளவுக்கு தெளிவடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: விகடன்

வீட்டுக் கடன் வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI-ல் தத்தளிப்பவர்களுக்கு- சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்...


 வீட்டுக் கடன் வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMIல்  தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக்கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1)

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி...

(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வது மாதத்திலே முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.(பார்க்க : அட்டவணை 2)

(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய தவணையை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டு தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 3)



(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்

வீட்டுக் கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159-வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 4)

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...