கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 09 [December 09]....

நிகழ்வுகள்

  • 1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
  • 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
  • 1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
  • 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
  • 1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
  • 1922 - போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.
  • 1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன.
  • 1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
  • 1953 - ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
  • 1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
  • 1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
  • 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
  • 1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
  • 1992 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
  • 1995 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, "கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப் பட்டது.
  • 2003 - மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

  • 1946 - சோனியா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்

இறப்புகள்

  • 2006 - சு. வில்வரத்தினம் (சு.வி.) ஈழத்துக் கவிஞர் (பி. 1950)

சிறப்பு நாள்

  • தான்சானியா - விடுதலை நாள் (1961)
  • ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள் 2003

>>>தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகையை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை. மாறாக அயோத்தி குப்பத்தில் உள்ள ஐந்து மீனவர்கள் இதை காப்பாற்ற முடிவெடுத்தனர். ஐந்து முறை இம்மீனை கடலில் ஆழப் பகுதியில் விட்டுவிட முயற்சித்தும் இம்மீன் மீண்டும் கரை ஒதுங்கியது. அதனால் வேறு வழி இன்றி ஒரு அபாயகரமான முடிவை எடுத்தனர் இந்த ஐந்து மீனவர்கள். கடல் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய படகில் இம்மீனை ஏற்றிக் கொண்டு கடலின் ஆழப் பகுதிக்கு துணிந்து சென்று இம்மீனை விட்டு விட்டு வந்தனர் . ஆழமான பகுதியை கண்டதும் இந்த டால்பின் மீன் கடலுக்குள் துள்ளிக் குதித்து சென்று மறைந்தது .

மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டுக் குரிய செயல். டென்மார்க் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த பாலூட்டி மீன்களுக்கு இறக்கம் காட்டுவதில்லை . மிகவும் அறிவு கூர்மையான இந்த மீனை அதிக அளவில் வேட்டை ஆடி வருகின்றனர் . ஆனால் தமிழக மீனவர்களோ இந்த மீனின் தன்மை அறிந்து அதனை காப்பற்றி உள்ளனர்.

படத்தில் : மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்...

தமிழ் மீனவர்களுக்கு நம் வாழ்த்துகளை பகிர்வோம்...!
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகையை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை. மாறாக அயோத்தி குப்பத்தில் உள்ள ஐந்து மீனவர்கள் இதை காப்பாற்ற முடிவெடுத்தனர். ஐந்து முறை இம்மீனை கடலில் ஆழப் பகுதியில் விட்டுவிட முயற்சித்தும் இம்மீன் மீண்டும் கரை ஒதுங்கியது. அதனால் வேறு வழி இன்றி ஒரு அபாயகரமான முடிவை எடுத்தனர் இந்த ஐந்து மீனவர்கள். கடல் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய படகில் இம்மீனை ஏற்றிக் கொண்டு கடலின் ஆழப் பகுதிக்கு துணிந்து சென்று இம்மீனை விட்டு விட்டு வந்தனர் . ஆழமான பகுதியை கண்டதும் இந்த டால்பின் மீன் கடலுக்குள் துள்ளிக் குதித்து சென்று மறைந்தது .

மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டுக் குரிய செயல். டென்மார்க் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த பாலூட்டி மீன்களுக்கு இறக்கம் காட்டுவதில்லை . மிகவும் அறிவு கூர்மையான இந்த மீனை அதிக அளவில் வேட்டை ஆடி வருகின்றனர் . ஆனால் தமிழக மீனவர்களோ இந்த மீனின் தன்மை அறிந்து அதனை காப்பற்றி உள்ளனர். 

படத்தில் : மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்...

தமிழ் மீனவர்களுக்கு நம் வாழ்த்துகளை பகிருவோம்...!

>>>சுயநிதி பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் பதவியை நீட்டிக்க முடிவு?

சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவர் சிங்காரவேலுவிற்கு, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டண நிர்ணய குழுவின் தலைவராக பதவி ஏற்பவர், மூன்று ஆண்டுகள் அப்பதவியை வகிக்கலாம் என்றாலும், ஒட்டுமொத்த குழுவின் பதவி காலம், 6ம் தேதியுடன் முடிவடைந்ததால், தலைவர் உள்ளிட்ட அனைவரது பதவிகளும், முடிவுக்கு வந்தன. இந்நிலையில், குழுவின் பதவி காலத்தை, மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்தும், தற்போதைய தலைவரான சிங்காரவேலு, மூன்று ஆண்டுகள் நிறைவுபெறும் வரை, அப்பதவியில் தொடரலாம் எனவும், தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக, நேற்று மாலை, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், குழுவின் சிறப்பு அலுவலராக இருந்த மனோகரன், அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற, சி.இ.ஓ., முத்துக்கிருஷ்ணன், அப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>பள்ளிகளில் அட்சய பாத்திரம்: மாணவர்கள் பங்களிப்புடன் வைக்க உத்தரவு

மாணவர்களிடம் உள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், பள்ளிக்கூட சத்துணவு மையங்களில், அட்சய பாத்திரம் வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மாணவர்கள் தினமும், ஒரு காய் வீதம் அதில் போடவும், மறுநாள் அதை சமையலுக்கு பயன்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களிடம், சமுதாய ஏற்றத் தாழ்வு நிலவுவதாக, புகார் எழுந்தது. இதை களையும் வகையில், மாணவர்களின் பங்களிப்போடு, சமையல் மேற்கொள்ளும் நோக்கில், கடந்தாண்டு, "அட்சய பாத்திரம்" திட்டத்தை, முதல்வர் அறிவித்தார்.
ஒரு சில பள்ளிகள் மட்டும், சில நாட்களுக்கு இதை செயல்படுத்தின. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், சத்துணவில் புதிய உணவு வகை அமல்படுத்தப்பட உள்ளது. இதில், வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத் உட்பட, 13 வகையான கலவை சாதம் மற்றும் ஐந்து வகை சுவையில், முட்டை இடம் பெறுகிறது.
சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதால், அரசு ஒதுக்கும் நிதிக்குள், தரமான உணவு வழங்குவதில் சிரமம் இருப்பதாக, பணியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசு சார்பில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் இடையே சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், சத்துணவு மையங்களில், "அட்சய பாத்திரம்" திட்டம் அமல்படுத்த வேண்டும்; அந்தந்த பள்ளிகளின் சத்துணவு மையங்களில், இதற்காக பாத்திரம் வைக்க வேண்டும்.
மாணவர்கள், தினமும் வீட்டில் இருந்து, ஏதேனும், ஒரு காய் கொண்டு வந்து, இதில் போட வேண்டும். மறுநாள் சத்துணவு சமையலுக்கு, அதிலுள்ள காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில், எந்த மாணவர், என்ன காய் இட்டுள்ளார் என்பது குறித்த தகவல், ரகசியமாக வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "அடுத்த வாரம் முதல், அனைத்து பள்ளிகளிலும், "அட்சய பாத்திரம்" கட்டாயம் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, அறிமுகப்படுத்தும் புதிய உணவு வகைக்கு, இத்திட்டம் ஏற்றதாக இருக்குமா என்பது தெரியவில்லை"என்றனர்.

>>>பிளஸ் 2 தனித்தேர்வு: 32.10 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 தனித்தேர்வில், 32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 17, 18 மற்றும் 19ம் தேதிகளில், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெறலாம்.
அக்டோபரில் நடந்த தனித்தேர்வை, 47,387 பேர் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இணையதளத்தில், நேற்று வெளியானது. துறை வட்டாரத்தினர் கூறுகையில், "32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். அதாவது, 15,212 பேர், தேர்ச்சி பெற்றனர்" என, தெரிவித்தனர்.
"தத்கல்" திட்டத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் செய்ய, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோருவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை, அக்டோபரில் நடந்த, டி.இ.டி., தேர்வில், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரம்மாண்டமாக நடத்த, தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக, பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விழாவை நடத்த, பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழா ஏற்பாடுகள் :
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், விமரிசையாக விழா நடக்கும் எனவும், இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை துவங்கி வைப்பார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விழா நடக்கும் இடத்தை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நேற்று பார்வையிட்டனர். இந்த இடத்தில், விழா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள், தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக் கல்வித்துறையில் நடக்கும் பணி நியமனங்கள், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள், "ஆன்-லைன்' முறையில் நடந்து வருகின்றன. எனவே, 18 ஆயிரம் பேரும், இதே முறையில், பணி நியனம் செய்ய, துறை திட்டமிட்டுள்ளது.விழாவிற்கு முன்நாளில், கலந்தாய்வு நடத்தி, சில பேரை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்படுபவர்கள், முதல்வர் கையால், பணி நியமன உத்தரவுகளை பெறவும், துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

>>>பயோடெக்னாலஜி படிப்பவர்கள் இனி மருத்துவ படிப்பிலும் சேரலாம்!

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில், மேல்நிலைப் பிரிவில், இக்கல்வியாண்டு முதல் பயோடெக்னாலஜி படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய 2 படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்னர், அவர்கள், பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்திய மருத்துவக் கவுன்சில், 2013-14ம் ஆண்டு முதல், மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க, NEET என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, MCI அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர, ஒரு மாணவர், பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர்தொழில்நுட்பம்(Biotechnology) மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களை, கட்டாயம் படித்து, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில், கூட்டாக 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதைத்தவிர, NEET தேர்விலும், மெரிட் பட்டியலில் வர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த புதிய அறிவிப்பின் மூலமாக, பள்ளிகளில், பயோடெக்னாலஜி படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறையால், பல பள்ளிகளில், பயோடெக்னாலஜி துறையில், கொள்ளளவு எண்ணிக்கையை விட, குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் கற்கிறார்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...