கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 TNPSC அறிவிப்பு - கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 5-ம் தேதியும், தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளானது, ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் கீழ்க்கண்ட நாள்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
>>> சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திய ஆசிரியர்கள்...
சிவகங்கை மாவட்டம் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு ஆசிரியர்கள் கவுரவப்படுத்தினர்.
திருப்பத்தூர் அருகே சேவினிப்பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி முருகேசன், ராதிகா. இவர்களது மகள் சத்யபிரியா அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தார்.
இவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் நடந்த தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வை எழுதினார்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் மாணவி சத்யபிரியா மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தார்.
மேலும் இச்சாதனையை ஊக்குவிக்கும் விதமாக, ஆசிரியர்களின் முயற்சியால் மாணவி சத்தியபிரியாவின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல்தலையை அஞ்சல்துறை வெளியிட்டது.
மேலும் அந்த மாணவியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டினர்.
இதுகுறித்து சத்யபிரியா கூறுகையில்,‘‘ நான் இதுவரை தேசத்தலைவர்களின் அஞ்சல்தலையை தான் பார்த்துள்ளேன். தற்போது என்னுடைய புகைப்படமே அஞ்சல் தலையில் வெளியிட்டுள்ளது எனக்கு மிகுந்த கவுரமாக உள்ளது. தேர்வில் வெற்றி பெற ஊக்குவித்த பெற்றோருக்கும், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்,’’ என்று கூறினார்.
>>> 11,741 தமிழ்நாடு சீருடை பணி காலிப் பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் (முழு விவரம்)...
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 24 வயதிற்கு மேற்படாதவர்களாகவும் இருக்கவேண்டும்.
01.07.2002க்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...
>>> Click here to Download Notification, Brochure, Medical Norms & Application...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...