கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Diwali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Diwali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தீக்காயங்கள் இல்லாத பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டம்

 தீக்காயங்கள் இல்லாத பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டம்


தீக்காயங்கள் இல்லாத 

பாதுகாப்பான தீபாவளியை 

சொந்தங்கள் அனைவருக்கும் 

வேண்டியவனாக இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.


தீக்காயங்களைத் தவிர்க்கும் வழிகளை முதலில் கூறிவிடுகிறேன். 


- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெடி / மத்தாப்பு கொளுத்தும் இடங்களில் இல்லாமல் இருப்பது நல்லது. 


முதல் காரணம் 

வெடி மத்தாப்பில் இருந்து வரும் புகை அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம்


இரண்டாவது காரணம் 

ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் துருதுருவென ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் 

தன்னை அறியாமல் பட்டாசின் மீது கால் வைத்தோ கை வைத்துத் தொட்டோ தீக்காயம் ஏற்படலாம். 


பட்டாசு மத்தாப்பு வைக்கும் நேரத்தில் பெரியவர்களின் கவனம் அவர்கள் மீது குறையும் வாய்ப்பு உள்ளது


- ஒரு நேரத்தில் வலப்பக்கம் புஸ்வானம் இடப்பக்கம் மற்றொரு புஸ்வானம் என்று இரு மத்தாப்புகளை வைப்பது ஆபத்து

ஒரு நேரத்தில் ஒரு மத்தாப்பு அல்லது வெடியை வைப்பதே சரி


- நீண்ட ஊதுபத்தி வைத்து வெடிகளை வைப்பதே சரி. 


- புதிதாகத் திருமணமாகி தலை தீபாவளி கொண்டாடும் மாப்பிளைகளே,  தங்களது வீரத்தைப் பரைசாற்றும்  விதமாக கையில் வெடி வைத்து வெடிக்க வேண்டாம்.

பாதுகாப்பாக வெடி வெடிக்கவும். 


- வெடிக்காத மத்தாப்பு அல்லது வெடிகள் இருப்பின் அதன் மீது மண் அல்லது நீரை ஊற்றி விடவும். 

- எப்போதும் வெடி மத்தாப்பு வைக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் 

- எளிதில் தீப்பற்றும் 

பட்டு உடைகள்/ ஜரிகை உடைகள் / ஷால்கள் / லுங்கிகள் அணிந்து மத்தாப்பு வெடி வைக்க வேண்டாம்.


- குழந்தைகளை பெரியவர்கள் மேற்பார்வையின்றி வெடி மற்றும் மத்தாப்பு வைக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அவர்கள் வெடி மருந்துகளை வைத்து ஆல்ப்ரெட் நோபல் போல ஆராய்ச்சி செய்து பெரிய பிரளயத்தையே கிளப்பி விடுவார்கள் ஜாக்கிரதை. 


- வெடியை அடுத்தவர் மீதோ- நாய் உள்ளிட்ட மிருகங்கள் மீதோ வீசி வதை செய்வது தவறு. 

நாம் அவ்வாறு வெடியை வீசும் போது நாய் தறிகெட்டு ஓடி பைக் ஓட்டி வருபவரை கீழே தள்ளி விட வாய்ப்புண்டு. 


- வெடிக்காத வெடியை கையில் ஒருபோதும் எடுக்காதீர்கள். நீங்கள் கையில் எடுக்கும் பொன்னான தருணத்தில் படார் என்று வெடிக்கக் காத்திருக்கும்.


இத்தனை விஷயங்களுக்குப் பின்பும் 

வெடி மத்தாப்பினால் தீக்காயம் பட்டு விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? 


தீக்காயம் ஏற்பட்ட பகுதியை உடனே 

குழாய் நீரைத் திறந்து விட்டு அதில் காட்ட வேண்டும். சுமார் இருபது நிமிடங்கள் தொடர்ந்து தீக்காயம் பட்ட இடத்தை குளிர்விக்க வேண்டும். 


தீக்காயம் என்பது உஷ்ணத்தால் ஏற்படும் காயமாகும். 

அதை எவ்வளவு விரைவில் குளிர்விக்கிறோமோ... 

எவ்வளவு நீண்ட நேரம் குளிர்விக்கிறோமோ...

அவ்வளவு நல்லது


கம்பி மத்தாப்பு பத்த வைக்கும் போது சுமார் 2000 டிகிரி செல்சியஸை எட்டுகிறது. இத்தகைய வெப்பம் தோலில் படும் போது உடனே தீக்காயம் உண்டாகி விடும்

 

எனவே தீக்காயம் பட்ட இடத்தை 

உடனே குழாய் நீரைத் திறந்து விட்டு காட்டி இருபது நிமிடங்கள் குளிர்வியுங்கள். 


தீக்காயங்கள் மீது 

டூத் பேஸ்ட் 

மை 

க்ரீம்

வெண்ணெய் 

உள்ளிட்ட எதையும் பூசக் கூடாது. 

இது எதுவும் தீக்காயம் குணமாக உதவாது. இன்னும் பிரச்சனைகளையே வரவழைக்கும். 


தீக்காயத்தின் மீது துணியை வைத்து சுற்றுவது,  

பேண்டேஜ் வைற்று சுற்றுவது, 

கட்டு போடுவது இவையனைத்தும் தவறு. 


மருத்துவரை சந்திக்கும் முன் 

தீக்காயத்தின் மீது சுத்தமான ப்ளாஸ்டிக் பை வைத்து மூடிக்கொள்ளலாம். ப்ளாஸ்டிக் பை 

தீக்காயத்தில் ஒட்டாது. மற்ற அனைத்தும் புண்ணுடன் ஒட்டிக் கொண்டு அவற்றை எடுக்கும் போது தீக்காயம் இன்னும் மோசமாகும். 


தீக்காயம் மீது ஐஸ் கட்டி வைப்பது 

ஐஸ் தண்ணீரை ஊற்றுவது தவறு. 

ஐஸ் மூலம் கிடைக்கும் அதீத குளிர்ச்சி தீக்காயத்தை இன்னும் பிரச்சனையாக்கும். 


தீக்காயங்கள் மீது ஒட்டியிருக்கும் துணியை ஒருபோதும் எடுக்க முயற்சிக்க வேண்டாம். அது காயத்தின் ரணத்தை இன்னும் அதிகமாக்கி விடும்.

அந்தத் துணியுடன் சேர்த்தே நீரில் குளிர்விக்க வேண்டும். 


கண்களில் மத்தாப்புத் துகள் வெடியின் துகள் விழுந்து விட்டால் ஒரு போதும் கண்களைக் கசக்கக் கூடாது. 

மேற்கூறியது போலவே நீரை கண்களில் ஊற்றி குளிர்விக்க வேண்டும். 

ஐஸ் ஒருபோதும் உபயோகிக்கக் கூடாது. 

காயம்பட்ட கண்களின் மீது சுத்தமான துணியை வைத்துக் கொண்டு 

உடனே கண் நல மருத்துவரை சந்திக்க விரைந்திட வேண்டும். 


மேற்கூறிய

பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றி மத்தாப்பு வெடிகளை வெடித்து

தீக்காயங்களற்ற 

பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகையை அனைவரும் கொண்டாடிட வேண்டுகிறேன் 


நன்றி 


அனைவருக்கும் எனதினிய

தீபாவளி நல்வாழ்த்துகள் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



தீபாவளி பண்டிகையின் பொழுது சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்



தீபாவளி பண்டிகையின்போது சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் வேண்டுகோள்.


 தீபாவளி பண்டிகையின்போது சென்னையிலிருந்து காரில் சொந்த ஊர் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர், செங்கல்பட்டு ( அ) வண்டலூர் வெளிவட்ட சுற்றுச்சாலை வழியாக பயணம் மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேண்டுகோள்.


போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தல்.


தீபாவளி பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன..?


What are the restrictions imposed on bursting Diwali firecrackers..?


தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி: கட்டுப்பாடுகள் என்னென்ன..?


தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. 


கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


*கட்டுப்பாடுகள் என்னென்ன..?


1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.


2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.


*தவிர்க்க வேண்டியவை.


1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.


2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.


தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் (Wishing you and your family a very Happy Diwali)...

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்...


விளக்கேற்றி வழிபடுவது இதற்காகத்தான்...

 தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை! முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அப்படி வழிபடுவதே உத்தமம்!

அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம். இதன் அடிப்படையில் தீபாவளித் திருநாளில் விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடவேண்டும்.



தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்ககம் - தீபாவளி 2023 - விபத்தில்லா தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - இயக்குநரின் கடிதம், நாள்: 01-11-2023 (Directorate of Fire and Rescue Services - Diwali 2023 - Accident Free Diwali - Fire Safety Precautions - Director's Letter, Dated: 01-11-2023)...


பாதுகாப்பான தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீப்பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் - தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் (Diwali Safety Instruction - Taking Fire Safety Precautions - Fire Safety Propaganda - Letter to Tamil Nadu Fire Rescue Department Director of Education)...


 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்ககம் - தீபாவளி 2023 - விபத்தில்லா தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - இயக்குநரின் கடிதம், நாள்: 01-11-2023 (Directorate of Fire and Rescue Services - Diwali 2023 - Accident Free Diwali - Fire Safety Precautions - Director's Letter, Dated: 01-11-2023)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தீபாவளி பண்டிகை - செவ்வாய்க்கிழமை (25.10.2022) பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை - ஈடு செய்ய 19-11-2022 அன்று வேலைநாள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1859, நாள்: 23-10-2022 (Diwali Festival - Tuesday (25.10.2022) Holiday for all Educational Institutions including Schools, Colleges - Working Day on 19-11-2022 to Compensate - Tamil Nadu Government Press Release No: 1859, Date: 23-10-2022)...


>>> தீபாவளி பண்டிகை - செவ்வாய்க்கிழமை (25.10.2022) பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறை - ஈடு செய்ய 19-11-2022 அன்று வேலைநாள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1859, நாள்: 23-10-2022 (Diwali Festival - Tuesday (25.10.2022) Holiday for all Educational Institutions including Schools, Colleges - Working Day on 19-11-2022 to Compensate - Tamil Nadu Government Press Release No: 1859, Date: 23-10-2022)...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





பாதுகாப்பான தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீப்பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் - தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் (Diwali Safety Instruction - Taking Fire Safety Precautions - Fire Safety Propaganda - Letter to Tamil Nadu Fire Rescue Department Director of Education)...


>>> பாதுகாப்பான தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீப்பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் - தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் (Diwali Safety Instruction - Taking Fire Safety Precautions - Fire Safety Propaganda - Letter to Tamil Nadu Fire Rescue Department Director of Education)...




தீபாவளிக்கு அடுத்த நாள் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அரசாணை (1டி) எண்: 454, நாள்: 30-10-2021 வெளியீடு...



 தீபாவளிக்கு அடுத்த நாள் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அரசாணை (1டி) எண்: 454, நாள்: 30-10-2021 வெளியீடு...


அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20-11-2021(மூன்றாம் சனிக்கிழமை ) பணிநாளாக அறிவிப்பு...


>>> அரசாணை (1டி) எண்: 454, நாள்: 30-10-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...