கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விண்ணப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விண்ணப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...



>>> தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...


தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) தென்னை நடவு மானியம்  

நெட்டை கன்றுகளுக்கு 1 ஹெக்டேர் பரப்பில் புதியதாக தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகள் ரூபாய் 6500/-

நெட்டை× குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரூபாய் 6750/-

குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரு7500/- மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தகுதியுள்ள விவசாயிகள் மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

மேலும் 10 ஏக்கர் பரப்பு (4 ஹெக்டேர்) வரை உள்ளவர்கள் மட்டுமே மேற்படி மானியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.



ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model Application for Annual Increment)...



ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model Application for Annual Increment)...


அனுப்புநர்:



பெறுநர்: 

வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள், 

வட்டாரக் கல்வி அலுவலகம்,

------------ ஒன்றியம்.


வழி : 

தலைமையாசிரியர் அவர்கள்,

         --------------------------------


மதிப்பிற்குரிய ஐயா/அம்மா, 


பொருள்: ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிட வேண்டுதல் - தொடர்பாக



வணக்கம். அரசாணை எண். 90 நிதித்துறை நாள்: 26.02.2021- ல் Creation of additional cells in Pay level என Pay matrix level நீட்டிப்பு செய்தும் Levels of pay திருத்தியமைக்கப்பட்டும் வெளிவந்த பின்னரும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு என சொல்லப்பட்டு வந்ததால், இதுபற்றி தெளிவுபெற பெறப்பட்ட RTI தகவலில், ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை எண். 90 நிதி(ஊ.பி)த்துறை நாள்: 26.2.21 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை 10 - ல் தளம் 40 - ஐ (ரூ.65500) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



     அரசாணை எண்: 303 நிதித்துறை நாள்: 11.10.2017 - ன் schedule 1 மற்றும் III, அரசாணை எண். 90 நிதித்துறை, நாள்: 26.2.2021 ன் மூலம் மாற்றியமைக்கப்பட்டு ( substituted ) உள்ளதால், அதனைப் பரிசீலித்து அதனடிப்படையில் எனக்கு ஆண்டு ஊதிய உயர்வை ஆண்டுதோறும் வழங்கிட வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


       நன்றி. 


                       

                            தங்கள் உண்மையுள்ள

                ----------------------------

நாள்: 

இடம்: 


இணைப்பு:

1. RTI தகவல் கடித எண்.19861 / நிதி(சிஎம்பிசி)த்துறை, 2022 / நாள் : 05.05.2022

பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 03.01.2022 முதல் 05.01.2022க்குள் ஒப்படைக்க வேண்டும் - திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Applications requesting to participate in general transfer counselling should be submitted between 03.01.2022 to 05.01.2022 - Proceedings of Thirupatthur Chief Educational Officer)...



>>> பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 03.01.2022 முதல் 05.01.2022க்குள் ஒப்படைக்க வேண்டும் - திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Applications requesting to participate in general transfer counselling should be submitted between 03.01.2022 to 05.01.2022 - Proceedings of Thirupatthur Chief Educational Officer)...

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு(Duty Exemption to Differently Abled Teachers) அளிக்க கோரும் விண்ணப்ப (Application) மாதிரி...



அனுப்புனர்;


______________ஆசிரியர், 

__________________.பள்ளி,

____________

____________மாவட்டம்.


பெறுநர்;

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்,

 முதன்மைக் கல்வி அலுவலகம் ,

_____________மாவட்டம்.


வழி:

 தலைமை ஆசிரியர்,

_________________.பள்ளி,

 _________________.


பொருள்:

        மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க  கோருதல் சார்பு..


ஐயா/அம்மா,

        நான் ______________ ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மாற்றுத்திறனாளியான எனக்கு, பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண் 004010/ஜெ1/2020, நாள் 26/7/21 இன் படி, மேற்குறிப்பிட்டுள்ளவாறு 02/08/2021 இருந்து பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                  நன்றி

                                                 இப்படிக்கு,

                                     தங்கள் உண்மையுள்ள

                                          _____________________


இணைப்பு:

1) மாற்றுத்திறன் அடையாள அட்டை நகல்.


தேதி:     /08/2021

இடம்:

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...