கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்கள்... எந்த வேலையும் இனி நிரந்தரம் இல்லை...
அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் எந்த வேலையும் இனி நிரந்தரம் இல்லை...
2 வாரம் நோட்டீஸ் வழங்கி பணி நீக்கம் செய்யலாம்
🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.10.2020 (சனிக்கிழமை)...
🌹உறவுன்னு சொல்லிக்க ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் உணர்வை புரிந்து கொள்ள ஒருத்தராவது இருக்கனும் . அப்போது தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்..!
🌹🌹சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள். உங்கள் கஷ்டங்களை மட்டும் இல்லை. உங்களை கலங்க வைத்தவர்களையும்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑கால்நடைத் துறையில் 1154 மருத்துவர்கள் நியமிக்க ஏற்பாடு - அமைச்சர் தகவல்
⛑⛑கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு
⛑⛑MBBS அகில இந்திய கலந்தாய்வு அக்டோபர் 27ஆம் தேதி தொடங்குகிறது.
⛑⛑இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு.
⛑⛑TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
⛑⛑பெரியார் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு
⛑⛑சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளிகள் மூலமாக மாணவர்கள் எவ்வாறு பெறுவது? முழுமையான விவரம் ( விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி 31.10.2020)
⛑⛑பொதுப்பணித்துறையில் பணி... Diplomo & Engineering மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி 7.11.2020.
⛑⛑உதவிப் பேராசிரியர், நூலகர் பணியிடங்களுக்கு நெட், செட் தேர்ச்சித் தகுதியை நிர்ணயிக்க வலியுறுத்தல்
⛑⛑அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் -சீமான்
⛑⛑மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் ஆகும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளார்.
⛑⛑TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பணிவரன்முறை ஆணைகளின் தொகுப்பு ( 2003 முதல் 2017 வரை ) வெளியிடப்பட்டுள்ளது.
⛑⛑தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர்களின் பணிநியமன ஆணை மற்றும் கல்விச்சான்றிதழ்கள் திடீரென சரிபார்க்கப்பட்டு வருகிறது - நாளிதழ் செய்தி
⛑⛑Para Medical Education 4 ஆண்டு மருத்துவப் படிப்பு - 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் ஆரம்பிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
⛑⛑உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை வழங்கியுள்ளது.
⛑⛑தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழகம் அமல்படுத்தாத சூழ்நிலையில், துணைவேந்தர்களுக்கு நேரடியாக யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. மாநிலப் பட்டியலில் பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில், இது மாநில உரிமையில் தலையிடும் செயல் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை விமர்சித்துள்ளது.
⛑⛑முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம்
⛑⛑தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம் கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
⛑⛑தூத்துக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
⛑⛑ ஊக்க ஊதிய பெறாத ஆசிரியர்களின் விவரங்களை 31.10.2020க்குள் ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
⛑⛑நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 27.10.2020 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - கரூர் முதன்மைக் கல்வி அலுவலர்.
⛑⛑ஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்" -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
⛑⛑விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்! தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திடுக
- மு.க.ஸ்டாலின்
⛑⛑மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
காயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் - ஓபிஎஸ்.
⛑⛑உதவி கணினி அமைப்பு பொறியாளர், உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் பணிகளுக்குச் சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
உதவி கணினி அமைப்பு பொறியாளர், உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பணிகளுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் அடங்கிய உதவி கணினி அமைப்பு பொறியாளர் மற்றும் உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களின் மூலச் சான்றிதழ்களை அக்.27-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவ்விண்ணப்பதாரர்களுக்குக் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று கருதி, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த கூறிப்பாணை மற்றும் இ-சேவை மையங்களின் பட்டியல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
⛑⛑சென்னையில் தீபாவளியை பண்டிகையையொட்டி வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 மாநகரப் பேருந்துகள் இயக்கம்;
தி.நகர்., பெசன்ட் நகர், பிராட்வே, வள்ளலார் நகர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட 25 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்
⛑⛑எந்த சூழ்நிலையிலும் "தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.
⛑⛑ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அரசை குறை கூறுவது பாமக.நிறுவனர் ராமதாசுக்கு வழக்கமான ஒன்று தான் : அமைச்சர் கடம்பூர்ராஜு
⛑⛑10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்:-
👉தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேர்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது ⛑⛑தீபாவளி பண்டிகை முடிந்த பின் நவம்பர் 17ம் தேதி அனைத்து பொறியியல் மற்றும் டிப்ளோமா வகுப்புகள் துவங்கும்.
முதல்வரிடம் நடத்திய ஆலோசனைக்கு பின் கர்நாடகா துணை முதல்வர் அஷ்வத் நாராயணன் அறிவிப்பு.
⛑⛑தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கவுண்டமணி புகார்
⛑⛑புதிய மின் இணைப்புக்கு கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்ற ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
⛑⛑கேரளாவில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப் படுகிறது.
இது மக்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். உணவக உரிமையாளர்கள் இதுபோன்ற விலை உயர்வால் நஷ்டம் அடைவார்கள் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
⛑⛑நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசனை நடைபெறுகிறது. அமைச்சர்களிடமும் 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
ஆளுநர் பன்வரிலால் புரோஹித்
⛑⛑ஊரடங்கால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மேலும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையும் அரசின் நிதிக் கொள்கையும் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஒருங்கிணைந்து வேலை செய்து வருவதாக தெரிவித்தார்.
⛑⛑அதிமுக எடுக்கும் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் .
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்யலாம், தமிழக முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தான் முடிவு செய்யும்
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
⛑⛑பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்
- பிரதமர் நரேந்திர மோடி
⛑⛑மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி தொடர்பாக வெளியான தகவல் போலியானது- சி.பி.எஸ்.இ. விளக்கம்
⛑⛑விலை அதிகரிப்பை தொடர்ந்து மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் வெங்காயம் கையிருப்பு வைத்திருக்க மத்திய அரசு கட்டுப்பாடு.
⛑⛑கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது; தமிழக உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவிப்பு
⛑⛑பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாட்சியமே போதுமானது- உச்சநீதிமன்றம்.
⛑⛑பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதால் பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
⛑⛑தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
⛑⛑அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு ஆனால் சீனா மீது நடவடிக்கை- ட்ரம்ப் எச்சரிக்கை.
⛑⛑நியூசிலாந்து நாடாளுமன்றத் தோதலில் பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னின் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து அவா் 2-ஆவது முறையாக பிரதமராகிறாா். ⛑⛑ஹெச்1பி நுழைவு இசைவின் (விசா) கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ளும் நபா்களுக்கு 'பிசினஸ்' ரக நுழைவு இசைவு வழங்குவதற்குத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
⛑⛑புதுவையில் இலவச இணைய வழிக் கல்வி சேவையைப் பெற 10, 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பொதுத் தேர்வு வரை இம்மாணவர்களுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளனர்.
⛑⛑மருத்துவக் கலந்தாய்வில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
⛑⛑கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி: டெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கபில் தேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தவர்.
⛑⛑சூரரைப்போற்று திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
🍁🍁🍁 மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது...
மின்வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
www.tangedco.org, tantransco.org, tnebltd.org ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. புதிய இணையதள வசதிகளை 28ம் தேதி முதல் மக்கள் பயன்படுத்தலாம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings
மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...