கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 தோட்டக்கலை துறை சார்பில் ஏற்காட்டில் சாக்லேட் தயாரிப்பு கூடம்...
தோட்டக்கலை துறை சார்பில் ஏற்காட்டில் சாக்லேட் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டார்க் சாக்லேட் மில்க் சாக்லேட் என இரண்டு வகையான சாக்லேட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரசாயன பொருட்கள் எதுவும் சேர்க்க படுவதில்லை. முன்பதிவு செய்து சாக்லெட்டுகளை மொத்தமாக பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஏற்காடு தோட்டக்கலை உதவி இயக்குனரை 7358785872 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். hortichoco@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
💐விவசாயிகள் நேரடியாக தோட்டக்கலை அலுவலரை (9159456932) தொடர்பு கொண்டு தாங்கள் உற்பத்தி செய்த கோகோ, பீன்ஸ்களை விற்பனை செய்யலாம்...
🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 02.11.2020 (திங்கள்)...
🌹எத்தனை நாட்களுக்கு பிறகு பேசினாலும் சிலரிடம் மட்டுமே அதே உரிமை குறையாத பாசம் வெளிப்படும். அப்படி பட்ட உறவு கிடைப்பது எல்லாம் வரமே.!
🌹🌹மகிழ்ச்சி என்பது,
வாழும் இடத்தில் இல்லை.
வாழும் விதத்தில்தான் உள்ளது.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை கூடுதலாக ஒதுக்கீடு.
⛑⛑தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்.
⛑⛑கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-11-2020.
⛑⛑ நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்.
⛑⛑30.11.2020 வரை நீட்டிக்கப்பட்ட, பள்ளி திறப்பு உள்ளிட்ட தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கான அரசாணை எண்.613, நாள்: 31-10-2020 வெளியீடு.
⛑⛑மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்னை மாணவர் முதலிடம்
⛑⛑பள்ளி, கல்லூரிகளில் 30% கட்டணம் குறைக்கப்படுமா? ஆந்திராவை போல தமிழக அரசும் செயல்பட பெற்றோர்கள் கோரிக்கை
⛑⛑சி.ஏ., தேர்வில் பங்கேற்க 'ஹால் டிக்கெட்' வெளியீடு
⛑⛑ஒவ்வொரு பள்ளியிலும் கரோனா தடுப்பூசி முகாம் மத்திய சுகாதாரத்துறை திட்டம்
⛑⛑ரூ.7700 தொகுப்பூதியத்துடன் 10 கல்வி ஆண்டுகளாக பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனுக்கள் மீது தமிழகஅரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர் - நாளிதழ் செய்தி
⛑⛑2 .8 .2018 மற்றும் 4.8.2018 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
⛑⛑இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்களுக்கு உதயவியாளராகப் பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தேர்ந்தோர் பட்டியல் மற்றும் இயக்குநரின் செய்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
⛑⛑அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஒரு UGC அங்கீகாரம் பெற்ற மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழக கல்விக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு UGC விதிமுரைப்படி நடத்தப்படுகிறது எனவே முழுநேர ( Full - Time ) மற்றும் பகுதிநேர ( Part - Time ) கல்வி முறையில் M.Phil பயிலுவதற்கு தமிழக அரசு மற்றும் UGC தனித்தனியே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என RTI-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⛑⛑தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
⛑⛑பெற்றோர்களின் பொருளாதார சிக்கலை சற்று குறைக்கும் வகையில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தில் 30% ரத்து செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
⛑⛑ஐபிஎல்லில் இருந்து ஒய்வு இல்லை. டோனி அறிவிப்பு.
⛑⛑பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
⛑⛑மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் நம்தே பெயரில் யூடியூப் சேனல் ஒன்று இயங்கி வருகிறது. இதனை சுமார் 73,000 பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் சிறுமி தனது அழகிய குரலில் வந்தே மாதரம் பாடலை அருமையாக பாடும் வீடியோ அவரது யூடியூப் பக்கத்தில் வெளியானது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
👉அதில், ‘நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம். அன்பு, அக்கறை உள்ளிட்டவைகளின் தளமாக இந்தியா விளங்குகிறது. பன்முகத்தன்மை இருக்கும் போதிலும், நம் தாய்நாட்டிற்கு நல்ல மகன்களாகவும், மகள்களாகவும் ஒன்றிணைந்து நிற்போம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
👉மிசோரம் முதல்வர் சோரம்தங்கா இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனை பிரதமர் மோடி ஷேர் செய்துள்ளார். வீடியோ பிரமிக்கும் வகையில் இருப்பதாகவும், சிறுமி எஸ்தரை நினைத்து பெருமை கொள்வதாகவும் பாராட்டியுள்ளார்
⛑⛑நாடு முழுவதும் அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.1,05,155 கோடி
கடந்தாண்டு அக்டோபரை விட இந்தாண்டு அக்டோபரில் ஜி.எஸ்.டி வரி வசூல் 10% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தகவல்.
⛑⛑லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் தேர்வில் விதிமீறல் இல்லை; இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
👉தமிழக லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் தேர்வு விதிமுறைப்படியே நடந்துள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு.
⛑⛑தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி; 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.
⛑⛑சென்னையில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் காலியாக உள்ள பேராசிரியர், பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி 12-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து. விண்ணப்பித்தவர்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். - அம்பேத்கர் சட்டப் பல்கலை., அறிவிப்பு.
⛑⛑கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கேரளாவில் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
⛑⛑ஐரோப்பாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
⛑⛑ஐபிஎல் போட்டியில், பெங்களூருவை வீழ்த்தியது ஹைதராபாத் அணி; பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
⛑⛑காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைமைத் தளபதியான சைபுல்லாவை ராணுவம், காவல்துறை மற்றும் CRPFன் கூட்டு முயற்சியால் சுட்டுக் கொலை.
பாதுகாப்பு படையினருக்கு இது பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
⛑⛑உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நவம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
⛑⛑ஐபிஎல் 2020: டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு நவம்பர் 15ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
👉நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் அனுமதி.
👉டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை மகரவிலக்கு பூஜைக்கு நடை திறந்திருக்கும்.
👉டிசம்பர் 26ம் தேதி தங்க அங்கியுடன் மண்டல பூஜை.
👉ஜனவரி 14ம் தேதி மகரவிலக்கு பூஜை என தேவசம்போர்டு அறிவிப்பு.
👉வாரத்தின் முதல் 5நாட்கள் 1000 ஐயப்ப பக்தர்கள் அனுமதி.
👉சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2ஆயிரம் பக்தர்கள் அனுமதி.
👉கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்.
👉சபரிமலையில் பணியாற்றும் அனைவருக்கும் கோவிட்-19 சான்றிதழ் கட்டாயம்.
👉சிறிய வாகனங்கள் பம்பா வரை அனுமதி.
👉பெரிய வாகனங்கள் நிலக்கல் வரை அனுமதி.
👉நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய இடங்களில் குளியலறை மற்றும் கழிப்பறை ஏற்பாடு.
👉பம்பா நதியில் குளிக்க அனுமதி இல்லை, பக்தர்கள் செயற்கை மழையில் குளிக்க ஏற்பாடு.
👉சன்னிதானத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
👉கோவிட் 19 முழுமையான விதிமுறைகளை பின்பற்றப்படும்..
👉திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு.
⛑⛑அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தின் இலவச பாடப்புத்தகங்கள் இன்று வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
⛑⛑ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி மையம் நடத்தும், சி.ஏ., தேர்வில் பங்கேற்போருக்கு, இன்று, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது.
⛑⛑ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
⛑⛑மாற்று திறனாளி மாணவர்களுக்கு, பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க, பள்ளி கல்வித் துறை செயலர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
🍁🍁🍁 UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி - வெ.இறையன்பு I.A.S...
UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி - 03.11.2020 (செவ்வாய்) மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்...
வெ.இறையன்பு I.A.S...
🍁🍁🍁 உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை கூடுதலாக ஒதுக்கீடு...
முதல்வரின் பரிந்துரையை ஏற்று உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்தார் ஆளுநர்.
🍁🍁🍁 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து...
பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அறிவிப்பாணையை ரத்து செய்து பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...