கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஜோ பிடன் அமெரிக்க அதிபரானது - இந்தியாவுக்கு கெட்டது, பாகிஸ்தானுக்கு நல்லது; இது கட்டுக்கதையா... உண்மையா...?

 


ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடன் அமெரிக்காவின் புதிய அதிபராக வருவதை விட டொனால்டு டிரம்ப் வந்தால் இந்தியாவுக்கு சிறந்ததாக இருந்திருக்கும் என்று பல இந்தியர்கள் நம்புகிறார்கள், அவரைப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பராக பலர் பார்க்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி இந்தியர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதுஇல்லை. ஏனெனில் அவர் டிரம்ப்பைப் போலவே இந்தியாவுக்கு நல்லவராக இருப்பார், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையிலான வலுவான உறவுகளை பாதிக்காது. எவ்வாறாயினும், பிடனின் நியமனம் இந்தியாவுக்கு சில விஷயங்களை மாற்றக்கூடும் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சீனாவுடனான தற்போதைய எல்லை பதற்றத்தின் போது டிரம்ப் இந்தியாவை ஆதரித்தார் என்ற உண்மையை  மறுக்கவில்லை, ஆனால் 77 வயதான பிடன் இந்தியா மற்றும் சீனாவை  பேச்சுவார்த்தை அட்டவணையில் கொண்டுவர முயற்சிக்கக்கூடும்.டிரம்ப்பை போலவே இந்தியாவை நேரடியாக  ஆதரிக்கமாட்டார்.

ஒரு விஷயம் என்னவென்றால், டிரம்ப்பைப் போலவே, பிடனும் சீனாவுக்கு அண்டை நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை நிறுத்த நேரடியாக அழுத்தம் கொடுக்க மாட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றை பிடன் மறுத்துவிட்டார் என்பதையும், 370 வது பிரிவை ரத்து செய்வது குறித்து துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸின் வார்த்தைகளும் இந்தியா மறக்க முடியாத ஒன்று என்பதை நினைவு கூரவேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றை பிடென் மறுத்துவிட்டார் 

காஷ்மீரிகள் உலகில் தனியாக இல்லை என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். கோரிக்கை வைத்தால் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது, ”என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், பிடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு இந்த பிரச்சினைகளை எழுப்ப விரும்ப மாட்டார் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், அமெரிக்காவின் புதிய அதிபராக பிடன் உறுதிமொழி எடுக்கிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் மகிழ்ச்சியடைகிறது என்று பரவலாக கூறப்படுகிறது. பிடன் ஒரு முன்னாள் தூதர் மற்றும் பாகிஸ்தானுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார், அதுதான் பாகிஸ்தான் அவருக்காக பிரார்த்தனை செய்கிறது.

2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கவுரவ 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' விருது வழங்கியது. ஜோ பிடன் மற்றும் செனட்டர் ரிச்சர்ட் லுகர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு 1.5 பில்லியன் டாலர் இராணுவமற்ற உதவிகளைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை முன்வைத்தனர்.

ஜனாதிபதியாக பிடென் இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய தூதரக சகாப்தத்தை திருப்பித் தருவார் என்று பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2011 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் உலகின் மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் கொன்றபோது, பிடன் பாகிஸ்தான் பிரதேசத்தில் அமெரிக்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை விமர்சித்து இருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

இந்தியாவுடன் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அடுத்து அதிபராக உள்ள ஜோ பிடன் எந்த வகையில் இந்தியாவுடன் உறவைக் கையாள்வார் என அமெரிக்கத் தேர்தலில் இல்லினோய் மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி பதில் அளிக்கும் போது

ஜோ பிடனும் இந்தியாவின் நெருங்கிய நண்பர்தான். அவர் செனட் உறுப்பினராக இருக்கும்போதுதான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள கமலா ஹாரீஸ் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரும் இந்தியாவுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். ஆகையால் ஜோ பிடன் அதிபராகும்போது இந்தியாவுடனான நட்பு மிகவும் நெருக்கமாகவே இருக்கும் என கூறினார்.

மேலும் அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தகத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். இரண்டு நாடுகளிடையே முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலும், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலும் தொழில் தொடங்க முன்வர வேண்டும். ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிகம். இவர்களுக்கு கிரீன்கார்டு கொடுத்து அமெரிக்காவில் தொழில் தொடங்க அனுமதிக்கலாம் எனதெரிவித்து உள்ளார்.

🍁🍁🍁 அரசு பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை பயில வைப்பது அவர்களது விருப்பம் - அமைச்சர் செங்கோட்டையன்...


 

🍁🍁🍁 பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் செங்கோட்டையன்...

விரைவில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்கள் உள்ளனர். பள்ளிகளில் நாளை முழு பாதுகாப்புடன் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்.

🍁🍁🍁 மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு...

 


🍁🍁🍁 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

 


தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் விழாவில் பங்கேற்க நேற்று ( 07-11-2020 ) மதுரைக்கு வருகைபுரிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு K.A.செங்கோட்டையன் அவர்களிடம் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் தங்களது TET விலக்கு தொடர்பான கோரிக்கைகளை, நினைவூட்டல் மனுவாக முன்வைத்தனர்.

அதன்படி, ஏற்கனவே TET நிபந்தனைகளுடன் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணியில் உள்ள ஆசிரியர்களைக் காத்து, அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்காதபடி தாய்மை உள்ளத்துடன் தற்போதைய அம்மா அரசு என்றும் துணை நிற்கும் என ஏற்கனவே தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உறுதியளித்தையும் அவர்கள் அமைச்சரிடம் நினைவூட்டினர்.

23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் TET நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெற்றவர்களுக்கு 16/11/2012 க்குப் பிறகே முன்தேதியிட்டு TET

கட்டாயம் என்ற நிபந்தனைகளுக்குக் கீழே இந்த வகை ஆசிரியர்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றமும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாதவாறு முடிவுகளை எடுக்க ஏற்கனவே பலமுறை தமிழக அரசினை அறிவுறுத்தியும் உள்ளது.

ஆகவே 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதுமாக விலக்கும், அதற்கு மாற்றாக புத்தாக்கப் பயிற்சியும் அளிக்க பலமுறை வேண்டுகோள்கள் விடுத்து வந்தோம். எங்கள் நியாயமான கோரிக்கையை கருணை உள்ளத்தோடு இந்த தமிழக அரசு நிறைவேற்றித்தரும் என்று எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த கோரிக்கை அடங்கிய மனுக்கள், அவ்விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழக வருவாய் / பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ஆர். பி. உதயகுமார் அவர்கள் மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். எஸ். சரவணன் ஆகியோரின் மேலான கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

🍁🍁🍁 அமெரிக்காவின் 46-ஆவது அதிபர் ஆகிறார் ஜோ பைடன்...

 






🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 08.11.2020(ஞாயிறு)...

 🌹யாரையும் காயப்படுத்தவோ குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள்.

இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம்

.ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

காலம் உங்களைக் காட்டிலும் பலம் வாய்ந்தது.!

🌹🌹சூழ்நிலை மாறும் போது 

சிலரது வார்த்தைகள் மாறும்

ஏன் பலரது முகங்கள் கூட மாறும்.!!

🌹🌹🌹பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும்,

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள் எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாக குடியிருப்பார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                                  

🌈🌈அமெரிக்காவின் 46வது அதிபராகிறார் ஜோ பைடன் 

👉அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுகிறார் கமலா ஹாரீஸ்.

🌈🌈இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 17 முதல் 21ம் தேதி வரை ஆன்லனில் மறுதேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி.இ. மாணவர்களுக்கான இறுதித்தேர்வு இனையக்கோளாறு போன்ற காரணங்களால் பலர் எழுதமுடியாமல் போனது.

🌈🌈மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் - குடும்ப நலத்துறை இயக்குநர்

🌈🌈ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கு :தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு 

🌈🌈அனைத்து பள்ளிகளிலும் EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை சரிபார்க்க உத்தரவு

🌈🌈ஆசிரியர் நியமனம் பதவி உயர்வு ஒளிவு மறைவின்றி நடக்கிறது: அமைச்சர் செங்கோட்டையன்                                                                                                                                                      🌈🌈சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; ஜனவரியில் நுழைவுத் தேர்வு: அறிவிப்பு வெளியீடு

🌈🌈அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஞ்சாயத்து கட்டிடங்களை தடுப்பூசி மையங்களாக பயன்படுத்த, மத்திய அரசு திட்டம் 

🌈🌈தமிழகத்தில் இந்த ஆண்டு 15,497 அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க திட்டம்

🌈🌈ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்! தபால்துறை சிறப்பு ஏற்பாடு

🌈🌈நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டும்- டி.என்.பி.எஸ்.சி:                                                                                                                                                            🌈🌈யு.பி.எஸ்.சி., பிரதான தேர்வு அட்டவணை வெளியீடு

🌈🌈தமிழகத்தில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். 

🌈🌈தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 11ல் முதல்வர் அறிவிப்பு 

🌈🌈தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்குப்பின் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் விரைவில் முடிவை அறிவிப்பார் என்று மாநில பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். 

🌈🌈மருத்துவக் கலந்தாய்வுக்கு 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரசு ஒதுக்கீடுக்கு இதுவரை 17,239 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8494 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

🌈🌈இந்தியா முழுவதுமுள்ள 33 சைனிக் பள்ளிகளில் அடுத்த வருடம்( கல்வியாண்டு 2021-22) 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத்தேர்வு 2021, (ஏஐஎஸ்எஸ்ஈஈ) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🌈🌈நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கெடுக்கும் வகையில் வரும் ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ மாற்றக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

🌈🌈அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

🌈🌈அண்ணா பல்கலை., பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

🌈🌈தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது.

🌈🌈நீதிமன்ற வழக்குகள் காலதாமதம் - சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளரிடம் நிதி இழப்பு வசூலிக்கப்படும். மேலும் ஒவ்வொரு வழக்கிற்கும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரே முழு பொறுப்பாகும் - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் உத்தரவு.

 🌈🌈SBI இணையவழிச் சேவை நாளை (08-11-2020) ஒரு நாள் மட்டும் தடை ஏற்படும் எனத் தகவல்.

🌈🌈விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசுக்  கட்டுப்பாடு வாரியத்தின் வேண்டுகோள்.

🌈🌈அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  அறிவிப்பு - 18004252911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

🌈🌈அரசு ஊழியர்கள்/ அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் துறையின் ஓர் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அல்லது அதே துறையில் ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு ஒரு வழி மாறுதலில் செல்லும் பொழுது பணிமூப்பு இழக்கத் தேவையில்லை என்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை வெளியீடு

🌈🌈பட்டாசு தடையை நீக்க வேண்டும் அல்லது தொழிலாளர் நலனுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், தொழில்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமாருக்கும்  டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என டி.ஆர்.பாலு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.                                                                   

 🌈🌈அரசு அறிவித்தபடி நவம்பர் 10ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களுடன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

   என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...