கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 CPS திட்டத்தில் அரசின் பங்களிப்புத் தொகையினை 01-04-2019 முதல் 10%லிருந்து 14%ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு பரிசீலனை - RTI Reply...

CPS திட்டத்தில் அரசின் பங்களிப்புத் தொகையினை 01-04-2019 முதல் 10%லிருந்து 14%ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு பரிசீலனை - RTI Reply...

 CPS திட்டத்தில் பணிக்கொடை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பதில்...

RTI - கடித எண்.39105 /நிதி / (PGC-I) /2019, நாள். 13-08-2019...



பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்...

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்...

RTI - அரியலூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் ஓ.மு.எண்.2132 /அ3 /2013, நாள்: 27.06.2013...










🍁🍁🍁 கமலா ஹாரிஸ் குறித்த தகவல்கள்...



கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம்.

கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார் கமலா ஹாரிஸ்.

கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.

கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.

இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கருப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் கமலா தெரிவித்துள்ளார்.

"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகதான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் மாதம் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த அதிபர் வேட்பாளர் போட்டியில் தோல்வி அடைந்தார் நிலையில் தற்போது துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல்கலைக்கழக வாழ்க்கை தனது வாழ்க்கையை செதுக்குவதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது என ஹாரிஸ் குறிப்பிடுவார்.

தனது அடையாளம் குறித்து தனக்கு எந்த ஒரு அசெளகரியமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், எளிமையாக சொல்லவேண்டுமானால் `நான் ஒரு அமெரிக்கர்` என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிடுவார்.

2019ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டுக்கு பேசிய அவர், "நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாக கூடாது. "நான் யாரோ அதில் சிறப்பாக உள்ளேன். உங்களுக்கு தெளிவு தேவைப்படலாம் ஆனால் நான் சிறப்பாக உள்ளேன்," என தெரிவித்திருந்தார்.

துணை அதிபர் போட்டியில் கமலா வெற்றி பெற்றால் 2024ஆண்டுக்குள் அதிபர் போட்டியில் மீண்டும் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்றளவில் அவர் ஜனநாயகக் கட்சியில் எதிர்காலத்திற்கான ஒரு வலுவான சக்தியாக உள்ளார்.

நான்கு வருட ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்புக்கு பின் கமலா கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.

2003ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார்.

அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். மேலும் கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார்.



🍁🍁🍁 மக்களை ஒன்றிணைப்பேன்; பிளவுப்படுத்த மாட்டேன்: ஜோ பிடன் உறுதி...

 


மக்களை ஒன்றிணைப்பேன்; பிளவுப்படுத்த மாட்டேன் என்று உறுதியளிப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த 77 வயதாகும் ஜோ பிடன், அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக வரும் ஜனவரி மாதம் அவா் பொறுப்பேற்கிறார். ஜோ பிடன், பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தவர். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர்  டொனால்ட் டிரம்பை கடுமையாகப் போராடி தோற்கடித்த ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய வெற்றி உரையில், அமெரிக்க மக்கள் தெளிவான மகத்தான வெற்றியை தந்துள்ளனர். 

"மக்களை பிளவுப்படுத்தாமல், ஒன்றிணைக்க முற்படும் அதிபராக நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்; சிவப்பு மாகாணங்கள், நீல மாகாணங்கள் என பிரித்துப் பார்க்கமாமல்,  ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் சேவை செய்வோம். இனி நிற பேதமில்லா அமெரிக்காவை மட்டுமே பார்க்கப்போகிறோம்" என்று உறுதியளிக்கிறேன்.

"அமெரிக்காவை குணப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது." அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது.  "நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால் நான் வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றியின் மூலம் தங்களது குரலை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை பெறாத வெற்றியை பெற்றிருக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அதிக வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக பெருமைக்கொள்கிறோம். இதைவிட சிறந்நாள் வரும் என்று நம்பிக்கையுடன் தனக்கு வாக்கு அளித்திருக்கிறீர்கள்.

"" அமெரிக்காவின் ஆத்மாவை மீட்டெடுப்பதற்கும், இந்த தேசத்தின், நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், உலக அரங்கில் மீண்டும் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்துவதற்கும் உழைப்போம்".

அதிபர் டிரம்பிற்கு வாக்களித்த அனைவருக்கும், இன்றிரவு ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கிறேன். இப்போது நாம் அனைவரும் கடுமையான சொல்லாட்சியைத் தள்ளி வைத்துவிட்டு, நோய்த்தொற்றை விரட்டவும், தேசத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வெப்பநிலையைக் குறைக்கவும், மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடுவதற்கான இந்த தருணத்திற்காக ஒற்றுமையாக உழைப்போம் என்று ஜோ பிடன் கூறினார். 

🍁🍁🍁 ஜோ பைடன் - வாழ்க்கை வரலாறு...

ஜோ பைடன் கடந்த 1942-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் ஸ்கர்டன் நகரில் ஜோ பைடன் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் பைடன், பழைய கார்களை வாங்கி விற்று வந்தார். தாய் கேத்தரின் ஜுன், அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

குடும்பத்தின் மூத்த மகனான ஜோ பைடன், ஒரு தங்கை, 2 தம்பிகளுடன் நடுத்தர குடும்ப பின்னணியில் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் மிகவும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். கடந்த 1965-ல் வரலாறு, அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். 1968-ம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரின் சட்ட ஆலோ சகராக பணியைத் தொடங்கிய பைடன், 1970-ல் ஐனநாயக கட்சியில் இணைந்தார். முதலில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 1972-ம் ஆண்டில் டெலவர் செனட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 29 வயது. மிக இளம்வயதில் செனட் அவைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 எம்.பி.க்களில் பைடனும் ஒருவர்.

கடந்த 1966-ம் ஆண்டில் நீலியா ஹண்டரை, ஜோ பைடன் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் பிறந்தனர். 1972 டிசம்பரில் நேரிட்ட விபத்தில் அவரது மனைவி நீலியா ஹண்டரும் மகள் நவோமியும் உயிரிழந்தனர். 2 மகன்கள் படுகாயங் களுடன் உயர் தப்பினர். மகன்களை கவனித்துக் கொள்வதற்காக செனட் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் ஆலோசனையால் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். அதன்பின், 1977-ம் ஆண்டில் மருத்துவர் ஜில் ஜேக்கபை, பைடன் 2-வது திருமணம் செய்தார். அவருக்கு ஆஸ்லே என்ற மகள் உள்ளார்.

ஒட்டுமொத்தமாக 6 முறை செனட் அவைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தார்.

மூத்த மகன் மரணம்

ஜோ பைடனின் மூத்த மகன் பவ் பைடன், ராணுவத்தில் இணைந்து இராக் போரில் பங்கேற்றார். 2015-ம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக பவ் பைடன் உயிரிழந்தார். இதுவும் ஜோ பைடனின் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மூத்த மகனின் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த பைடன், தற்போதைய அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டினார்.

ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான அவர், அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது. இந்திய, ஆப்பிரிக்க வம்சாவளி யைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக பைடன் தேர்வு செய்தார். கமலா வின் பூர்வீகம் குறித்து பைடன் பலமுறை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

டெலவரில் உள்ள ஜோ பைடனின் அலுவலகம் மற்றும் துணை அதிபராக அவர் பதவி வகித்த போது இந்திய வம்சாவளி அதிகாரிகளே அவருடன் இணைந்து பணியாற்றினர். இதை அவரே பெருமையாக கூறியுள்ளார்.

‘‘அமெரிக்க அதிபராக பதவி யேற்ற பிறகு கரோனா வைரஸ், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன். அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவேன்" என்று பைடன் அறிவித்திருப்பது அமெரிக்கர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

🍁🍁🍁 அமெரிக்க அதிபர் தேர்வு நடக்கும் விதம்...

அமெரிக்காவில் மக்கள் அனைவரும் அதிபர் வேட்பாளருக்கே நேரடியாக வாக்களிக்கிறார்கள். ஆனால், நாடு முழுவதும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்தல் சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும்.

ஒரு மாநிலத்தில் ஒரு அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அந்த மாநிலத்துக்குரிய தேர்தல் சபை உறுப்பினர் வாக்குகள் முழுவதும் அவருக்கு சென்றுவிடும்.

இப்படி தேர்வு செய்யப்படும் 538 தேர்தல் சபை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் மாநிலத் தலைமையகத்தில் டிசம்பர் 14ம் தேதி கூடி யார் அதிபர் ஆகவேண்டும் என்று வாக்களிப்பார்கள். எந்த கட்சிக்கு அதிக தேர்தல் சபை வாக்குகள் உள்ளனவோ அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இதன் மூலம் அதிபர் ஆவார்.

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அதிகாரபூர்வ முடிவுகள் இந்த டிசம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக வழங்கப்படவேண்டும்.

ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கவேண்டும். அதற்கு முன்னதாக அவர்களுக்கு அமைச்சர்களை நியமித்துக்கொள்ளவும் திட்டங்களைத் தீட்டிக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்படும்.

பொறுப்புகளை புதிய அதிபரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு பதவியேற்பு விழாவில் இடம் பெறும். இந்த நிகழ்வு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் பில்டிங்கின் படிகளில் நடக்கும்.

இதற்குப் பிறகு பதவியேற்ற அதிபர் நேராக வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

🍁🍁🍁 CPS குளறுபடிக்கு குரல் கொடுத்து போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது? தற்கொலை செய்துகொண்டவரின் மரண வாக்குமூலம்...

 கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து வந்தார். அவரது மனைவி உமா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தனபால் அவிநாசி சாலை, அண்ணாசிலை அருகே உள்ள ஓர் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

தற்கொலை

அதில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, லட்சகணக்கான பணத்தை இழந்துள்ளார். இதனால், விரக்தியில் இருந்த தனபால், நேற்று காலை அந்த நிறுவனத்தின் அருகே சென்று, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பிறகு அதில் ஏறி அமர்ந்து பெட்ரோல் ஊற்றி, தீவைத்து தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு தனபால் மரண வாக்குமூலத்தை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் தனபால்,“எனது பிசினஸுக்காக மனைவி பெயரில் ரூ.14 லட்சம் (60 தவணைகள்) பர்ஸ்னெல் லோனாக வாங்கியிருந்தேன். கொரோனா பயம் காரணமாக, பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்தாண்டு ரூ.20 லட்சத்தை இழந்துவிட்டேன். மத்திய அரசு அறிவித்த கடன் ஒத்திவைப்பு திட்டத்தைப் பயன்படுத்தி, ஏப்ரல் – ஆகஸ்ட் 5 மாதங்கள் தவணை கட்டுவதைத் தள்ளிப்போட்டேன். அந்த 5 மாதங்கள் சலுகையை பயன்படுத்தியதற்காக கூடுதலாக 4 மாதங்கள் தவணை கட்டச் சொல்கின்றனர்.

தற்கொலை வாக்குமூலம்

கஷ்டப்பட்டு செப்டம்பர், அக்டோபர் மாதத் தவணைகளை கட்டிவிட்டேன். 20 நாள்களுக்கு முன்பு என் மாமனார் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ் (பங்களிப்பு ஓய்வூதியம் பிடித்தம்) தொகை சரியாக வரவு வைக்கவில்லை. கட்டிய பணத்தையே சரியாக வரவு வைக்காத நிர்வாகம், பின்னாளில் அதை எப்படி மொத்தமாக கொடுக்கும்?



சி.பி.எஸ்ஸில் லட்சகணக்கில் பணம் இருந்தும் என் மாமனார் இறந்தபோது, மனைவி பணத்துக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை என்னால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. சி.பி.எஸ்ஸில் உள்ள அரசு ஊழியர்கள், கொஞ்சம் உங்களது பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள்

சி.பி.எஸ் குளறுபடிக்கு குரல் கொடுத்து, போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது?

எனது மரணத்துக்குப் பிறகாவது உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் கடன் ஒத்திவைத்து வட்டி ஏற்றிய வழக்கில், நீதிபதிகள் ஒரு நல்ல தீர்ப்பைத் தருவார்கள் என்று நம்புகிறேன். என் மனைவி மற்றும் மகனுக்கு தீராத துன்பத்தைத் தந்துவிட்டு அவர்களை நட்ட நடு வீதியில் தவிக்கவிட்டு செல்லும் இந்த பாவி..” என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாள்களாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வடவள்ளி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் (கணவன், மனைவி, மகள்) தற்கொலை செய்தனர். அந்த சோகம் அடங்குவதற்குள், தற்போது அடுத்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...