கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து 94.5% பயனுள்ளதாக உள்ளது...
தாங்கள் கண்டறிந்துள்ள கரோனா தடுப்பு மருந்து 94.5% பயனுள்ளதாக உள்ளது என்று அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா திங்கட்கிழமை தனது மருத்துவப் பரிசோதனையின் முடிவை வெளியிட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் 30,000க்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்துள்ளனர் என்றும், இவர்களுக்கு நான்கு வார இடைவெளியில் இரண்டு முறை கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என்றும் மாடர்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாடர்னா நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் பன்சல் கூறும்போது, “எங்களது கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவு 94.5% பயனுள்ளதாக வந்துள்ளது. இது சிறந்த நாள்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருந்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கி இருக்கிறது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும், தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.
லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.
🍁🍁🍁 ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை...
பெயர் | K.R.RAMESH | ||
கோரிக்கை எண் | 2014/802851/AI | கோரிக்கைத் தேதி | 15/09/2014 |
முகவரி | 32 A3, SITHAVEERAPPA CHETTI STREET, DHARMAPURI, VIRUPAKSHIPURAM, DHARMAPURI TALUK, DHARMAPURI - 636701. TAMILNADU . | ||
கோரிக்கை | பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல் சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன . தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014 நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால் செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014 நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள் தேர்வு நிலை வழங்கப்படாமல் திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்காண் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் | ||
கோரிக்கை வகை | SERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYME | கோரிக்கை நிலவரம் | Accepted |
தொடர்புடைய அலுவலர் | SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN | ||
பதில் | ஏற்கப்பட்டது - பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014 | ||
🍁🍁🍁 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியக்கட்டில் தர ஊதியம் ரூ.5400 அனுமதிக்கலாம் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியக்கட்டில் தர ஊதியம் ரூ.5400 அனுமதிக்கலாம் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 13944 /சி2 /2019, நாள்: 21-11-2019...
🍁🍁🍁 அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் "பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு & கோவிட் 19 விழிப்புணர்வு" ரூ.500 நிதி ஒதுக்கீடு மற்றும் ஒரு நாள் பயிற்சி – இயக்குநரின் செயல்முறைகள்...
பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை
பள்ளி திறப்பதற்கு முன் :
1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் .
2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிகள் திறந்த பின் :
1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் – 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
4. கோவிட் – 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned
முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் Joint Director Mr. Pon K...