கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சீர்காழி அருகே 3 மாதம் சம்பளம் வழங்காததால் அரசு பள்ளி ஆசிரியர் தர்ணா...

 

சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தைரியநாதன் (48). இவருக்கு அரசு வழங்கக்கூடியது பணப் பயன்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களாக வழங்கக்கூடிய மாத சம்பளம் ஆகியவற்றை வழங்காமல் பள்ளி தலைமையாசிரியர் பழிவாங்குவதாக ஆசிரியர் தைரியநாதன் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தைரியநாதன் நேற்று பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்பொழுது கொரோனா காலத்தில் தனக்கு சம்பளம் வழங்காததால் தன் குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமல் பள்ளி பூட்டியே கிடப்பதால் தான் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பள்ளி வாசலில் உட்கார்ந்து செல்வதாகவும் ஆசிரியர் தைரியநாதன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தலைமையாசிரியர் மீதுள்ள புகார் மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆசிரியருக்கு அவருக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்...

 தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு திட்டம் கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன், அவர்கள் குறிப்பிடும் தேதியில் பத்திரம் பதிய பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பத்திரம் பதிவு செய்தவுடன் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக 70 % ஆவணங்கள் மட்டுமே திருப்பி தரப்பட்டன. ஆனால், 30% ஆவணங்கள் பத்திரப்பதிவு செய்தவுடன் அவை திருப்பி தருவதில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சீராய்வுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ஐஜி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பத்திரம் பதிவு செய்த அன்றே பத்திரத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சங்கர் தினமும் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். ஆவணங்களை திருப்ப ஒப்படைப்பதை கம்ப்யூட்டரில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கண்காணித்து உரிய உத்தரவுகளை வழங்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (27.11.2020) பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கக்கூடிய 15,433 ஆவணங்களில் 14,591 ஆவணங்கள் அன்றைய தினமேதிரும்ப வழங்கப்பட்டன. இது பதிவு செய்த ஆவணங்களில் 94 % ஆகும். இதன் மூலம் பொதுமக்கள் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணங்கள் திரும்ப பெற வரவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தலைவர் சங்கர் தெரிவித்தார்.

கோவிசீல்டு மருந்தைச் சோதனைக்குச் செலுத்தியதில் கடும் பக்கவிளைவு - ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்...

 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியைச் சோதனை முறையில் போட்டுக்கொண்டவர் கடுமையான பக்க விளைவுக்கு ஆளானதாகக் கூறி 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 40 வயதானவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனேக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தான கோவிசீல்டைச் சோதனை முறையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடலில் செலுத்திக் கொண்டார்.

அதன்பின் 14 நாட்களுக்குக் கடுமையான தலைவலி இருந்ததாகவும், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்குப் பக்க விளைவு ஏற்பட்டதற்கு இழப்பீடாக 5 கோடி ரூபாயை 2 வாரங்களில் வழங்கவும், கோவிசீல்டு மருந்தை மேற்கொண்டு சோதிக்கத் தடை விதிக்கவும் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவானது கொரோனா வைரஸ் - சீனா குற்றச்சாட்டு...

 


இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவானது கொரோனா வைரஸ் - சீனா குற்றச்சாட்டு...

கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவின் உகான் நகரில் கொரொனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  தற்போது கொரோனா வைரஸ்  உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் ஆக உள்ள நிலையில், இன்னும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  தடுப்பூசிகளும் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் வைரசை பரப்பிய சீனாவில் இந்த கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6.19  கோடியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை   4,27,66,954- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால்  14,48,183- பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உகானில் தொற்று பரவுவதற்கு முன்னர், இந்த தொற்று இத்தாலி உள்பட உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியதாக சீன அரசு கூறி வந்தது . தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து உலகிற்கு முதன்முறையாக பரவியதாக இப்போது சீன விஞ்ஞானி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 

சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு கூறி உள்ளதாவது:-

கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 கோடையில் தோன்றியிருக்கலாம். கொரோனா வைரஸ் விலங்குகளால் அசுத்தம் செய்யப்பட்ட நீர் மூலம் மனிதர்களுக்குள் நுழைந்தது . கொரோனா வைரஸ் இந்தியாவிலிருந்து  உகானை அடைந்தது என்றும் அங்கு அது அடையாளம் காணப்பட்டது . 

உகானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு உண்மையான வைரஸ் அல்ல . விசாரணையில் வங்காளதேசம் , அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷியா அல்லது செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பலவீனமான பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால், அங்கு முதல் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

தண்ணீர் இல்லாததால், குரங்குகள் போன்ற காட்டு விலங்குகள் பெரும்பாலும் தண்ணீருக்காக கடுமையாக போராடுகின்றன. இது நிச்சயமாக மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு அபாயத்தை அதிகரிக்கும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவது அசாதாரண வெப்பத்தால் என்று நாங்கள் கருதுகிறோம்.  இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக, இந்த நோய் பல மாதங்களாக கண்டறியப்படாமல் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸின் மூலத்தை தீர்மானிக்க சீன குழு பைலோஜெனடிக் பகுப்பாய்வை (கொரோனா வைரஸ் பிறழ்வு பற்றிய ஆய்வு) பயன்படுத்தியது.

இதற்கிடையில், சீன விஞ்ஞானிகளின் இந்த தவறான கூற்று மற்ற விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டேவிட் ராபர்ட்சன் டெய்லி மெயிலிடம் சீன ஆராய்ச்சி அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் குறித்த நமது புரிதலை சிறிதும் மேம்படுத்தவில்லை என்றும் கூறினார். கொரோனா வைரஸ் உகானில் தோன்றியதை மறைக்க சீனாமற்ற நாடுகளை நோக்கி கையை நீட்டுவது இது முதல் முறை அல்ல.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு  தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாக உலக சுகாதார அமைப்பு சான்றுகள் காட்டுகின்றன. உலக சுகாதார அமைப்பு  தனது விசாரணைக் குழுவை சீனாவுக்கு அனுப்பி உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வு - 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பிரதமர் மோடி பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு - விஞ்ஞானிகளுக்கு பாராட்டு...

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வு - 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பிரதமர் மோடி பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு - விஞ்ஞானிகளுக்கு பாராட்டு...

நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு நடத்த 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு மேற்கொண்டார் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார் 

முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு  இன்று காலை நேரில் சென்றார்.  அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.          

டெல்லியிலிருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி காலை 9.00 மக்கு அகமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சாங்கோதர் தொழிற்பூங்காவில் இருக்கும் ஜைடல் கெடிலா நிறுவனத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.


ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரி்க்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பிபிஇ ஆடை அணிந்து, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்பு பணிகள், பரிசோதனையின் கட்டம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேதகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கெடிலா நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் கெடிலா நிறுவனத்தில் இருந்த பிரதமர் மோடி காலை 11.30 மணிக்கு அங்கிருந்து ஐதராபாத்துக்குப் புறப்பட்டார். 

அதன்பின் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா பயோடெக் பார்க் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே டிஏன்ஏ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன்.

இந்த பணிக்கு பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த மருந்து தயாரிக்கும் குழுவின் பயணத்துக்கு அரசு தேவையான உதவிகளை அளித்து துணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து அவரது டுவிட்டரில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதுவரை சோதனைகளில் வெற்றிகண்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். விரைவான முன்னேற்றத்தை எளிதாக்க அவர்களின் குழு இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சிலுடன் நெருக்கமாக செயல்படுகிறார்கள் என கூறி உள்ளார்.

ஐதராபாத்தில், சுமார்  ஒரு மணி நேர ஆய்வுக்குப் பிறகு, பிரதமர், புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்குச் சென்றார்.அகமதாபாத், ஐதராபாத்தை தொடர்ந்து புனே வந்தடைந்தார் பிரதமர் மோடி; அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது ஆஸ்ட்ராசெனகா மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து ஒரு கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்தும், எப்போது முறையாக தடுப்பூசி வழங்கல் தொடங்கப்படும் எனவும் பிரதமர் அங்கு கேட்டறிந்தார்.

முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


 

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Minister Anbil Mahes paid tribute to murdered teacher Ramani and condoled with her family.

  தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது க...