கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7.5% இடஒதுக்கீடு: மருத்துவ இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் - தேசிய மருத்துவ ஆணையம்...

 தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சீட் பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

நிரந்தர பணி - அரசு உதவி பெறும் கல்லூரியில் உதவி பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் பணி...



 தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி,

 தஞ்சாவூர் -613 002 . 

( அரசு உதவி பெறும் கல்லூரி - பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது.)

தொலைபேசி : 04362-250349 

கீழ்காணும் நிரந்தர பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கவும்: 

பணியிடத்தின் பெயர்  

1.தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்  - 3 பணியிடங்கள்

இடஒதுக்கீடு: BC - 01,BC ( Muslim ) -01 , SC -1


2. கணிதத்துறை உதவிப் பேராசிரியர் - 01 

இடஒதுக்கீடு: MBC-01 

ஊதியவிகிதம் : பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு உட்பட்டது . 


பணியிடத்தின் பெயர். 

ஆய்வக உதவியாளர்- 01 இடஒதுக்கீடு: GT - 01  

( S.S.L.C. கல்வித்தகுதி , வயது , ஊதிய விகிதம் : தமிழ்நாடு அரசு விதிகளுக்கு உட்பட்டது . 

விண்ணப்பங்களை ( இட ஒதுக்கீடு குறிப்பிட்டு ) 24.12.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பவும்.

முகவரி:

செயலாளர் , தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி , தஞ்சாவூர் - 613 002 என்ற முகவரிக்கு அனுப்பவும் . 


திருமிகு ச.இராமநாதன் 

 14.12.2020 செயலாளர் .

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்வர் ஆணைக்காக காத்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை...

 


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே,  பள்ளிகள் திறப்பு திறப்பு குறித்த  முதல்வர் ஆணைக்காக பள்ளிக் கல்வித் துறை காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கிய பின் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் - உயர்நீதிமன்றம்...

 


கணினி ஆசிரியர்கள் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு என புகார் - விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு; 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள116 தேர்வு மையங்களில் தேர்வாகியவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடையில்லை .

கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்...

* விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வி - Fit India Movement - பதிவு செய்த பள்ளிகள் போக மீதம் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 பள்ளிக் கல்வி - Fit India Movement - பதிவு செய்த பள்ளிகள் போக மீதம் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி - IIT/JEE போன்ற தொழில்நுட்பக் கல்விக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க 11&12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்...

 


பள்ளிக் கல்வி - IIT/JEE போன்ற தொழில்நுட்பக் கல்விக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க 11&12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


Safety and Security பயிற்சியில் கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளின் தொகுப்பு...


 >>> Safety and Security பயிற்சியில் கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளின் தொகுப்பு - இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...