ஜனவரியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய செய்திகள் தொகுப்பு... 21.12.2020 (திங்கள்)...
🌹நம்மை தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல்
நம்மை அவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகிவிடுவதே சிறப்பான பதிலடியாகும்.!
🌹🌹இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள்
முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள்.!!
🌹🌹🌹முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை விட
இரக்க குணத்தால் ஏமாந்தவர்களே இன்று அதிகம்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📚📚சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
📚📚தேவையில்லாமல் விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும் கல்வி இயக்குநரகம் உத்தரவு
📚📚தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர்: 484 ஆசிரியரல்லா பணிகள் உருவாக்கம்
📚📚RTI கட்டணத்தை பதிவு செய்ய வேண்டும்: அனைத்து துறை செயலாளர்களுக்கு உத்தரவு
📚📚School Safety and Security பயிற்சியை ஆண்டு ஜனவரி 31 வரை (31.01.2021) மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு
📚📚கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலையோரம் வசித்த 71% குழந்தைகள் கல்வியை இழந்தனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
📚📚தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), டிசம்பர் 2020 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
📚📚ஜேஇஇ மெயின் தேர்வுக்கு பொதுத்தேர்வில் 75% மதிப்பெண் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்க கோரிக்கை
📚📚முதன்முறையாக கல்வித்துறை சார்பில் தொகுதிக்கு ஒரு தேர்தல் தொடர்பு அதிகாரி நியமனம்.
📚📚அரசு உதவிபெறும் கல்லூரி - உதவிப் பேராசிரியர்கள் பணி - விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2021.
📚📚விவசாயிகள் போராட்டங்களை கைவிட
வேண்டும் என மத்திய வேளாண்துறை
அமைச்சர் தமிழில் எழுதிய கடிதத்தை
ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி
📚📚காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்; கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி.
📚📚காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தவர்கள் உள்பட மூத்த தலைவர்கள் 29 பேருடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மீண்டும் ராகுல் காந்தியே கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
📚📚வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை ஆலோசனை நடைபெற்றது.
📚📚மேற்கு வங்கத்தில் பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும்: அமித்ஷா நம்பிக்கை.
📚📚கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
📚📚இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வைரஸ் பரவலை தடுக்க நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் புதிய வைரஸ் பரவுவதாக கிடைத்த தகவலையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
📚📚விடியலை நோக்கி என தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடக்கும் முன்பு, வரும் 23ஆம் தேதி முதல் திமுக சார்பில் மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
📚📚புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற பிப்ரவரி 2 முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
📚📚டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவர்கள்: பிரதமர் மோடிக்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு கடிதம்
📚📚மேற்கு வங்க ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூவர் மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், ஆதரவாக குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பாணர்ஜி நன்றி
📚📚சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.
மிஷன் 200 என வைத்து கொள்வோம்.
200 தொகுதிகளில் ஒரு தொகுதி அல்ல, ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது.
- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
📚📚'ஒன்றினைவோம் வா' என்ற தலைப்பில் கொரானா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்; இந்த நாட்டிற்கு தற்போது தேவையானது ஒன்றிணைதல் மட்டுமே - திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேச்சு
📚📚ஜெருசலமுக்கு புனிதப் பயணம் செல்ல வழங்கப்படும் மானியம் ₹20,000ல் இருந்து, ₹37 ஆயிரமாக உயர்த்தப்படும் - அதிமுக சார்பில் நடக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
📚📚வேட்பாளர்கள், தொகுதி குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள்.
வெற்றி பெறுபவர்தான் வேட்பாளர்.
எந்த வாக்குப் பெட்டியை திறந்தாலும் அதில் உதயசூரியன்தான் உதிக்க வேண்டும்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
📚📚"உட்பகை" நீக்கி ஆறு மடங்கு அயராது உழைக்க வேண்டும். குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
📚📚கேரள உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சபரிமலையில் தினமும் 5000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதி - கொரோனா நெகடிவ் சான்றிதழ், முகக்கவசம் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு
📚📚நான் எம்ஜிஆரின் நீட்சிதான் - காந்தியின் பேரனும் நான்தான்; நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்ஜிஆரின் வாரிசுதான்
- மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு
📚📚பொருளாதாரத்தில் பின்தங்கிய 700க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர் கல்விக்காக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ரூ.1.26 கோடி நிதியுதவி
📚📚78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் தேர்வு
📚📚நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
பண பரிவர்த்தனை ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதலாக 150 ஊழியர்கள்
கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளில் ரசீது வாங்குவதால் காலவிரையம் & போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை
📚📚நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள்: ஸ்டாலின்
திமுகவுக்கு இரண்டு பலம் உள்ளது; ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர்; தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள்.
திமுக வச்சக் குறி தப்பாது என நிருபிப்போம் எனவும் கூறினார்
📚📚TN EMIS கைபேசி வாயிலாக "கற்போம் எழுதுவோம் இயக்கம்” - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் Director Proceedings வெளியீடு
📚📚அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும்: கல்லூரி இயக்ககம் அதிரடி
📚📚நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வலியுறுத்தல்
📚📚எல்லைப் பிரச்சினையால் மருத்துவ இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர் பாதிப்பு; ஆசிரியர் சங்கம் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.12.2020 (ஞாயிறு)...
🌹அடிபடும் போது தான்
நிதானம் வருகிறது.
வாகனத்திலும் சரி
வாழ்க்கையிலும் சரி.!
🌹🌹நிம்மதி வேண்டுமெனில்
சில நேரங்களில் குருடாகவும்,
பல நேரங்களில் செவிடாகவும் இருக்க வேண்டும்.!!
🌹🌹🌹பணம் இன்று வரும் நாளை வந்த வழி சென்றுவிடும்.
ஆனால் பாசம் என்றும் நிலையானது.
எனவே பணத்துக்காக பாசத்தை விற்று விடக்கூடாது மீண்டும் கிடைப்பது கடினம்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📕📘வரும் ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கபடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
📕📘6- 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.
📕📘NTSE தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
📕📘மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு (G.O.No 125 dated 16.12.2020)
📕📘ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க, முன்னேற்பாடு பணிகள் துவக்கம். முதற்கட்டமாக, மாணவர்களை கையாள்வது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும், ஆசிரியர்களுக்கு பயிற்சி துவங்கியுள்ளது.
📕📘உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியர்களுக்கு AICTE சார்பில் விருது அறிவித்துள்ளது.
📕📘2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📕📘1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
📕📘தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் தேதி 24.5.2021 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
📕📘புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய ஆரம்பப் பள்ளிகள் சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📕📘சட்டப் படிப்புகளுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு - சட்டப் பல்கலைக்கழகம்
📕📘கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வியை எளிதாக்கும் வகையில்,அரசு பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 1,75,443 மாணவர்களுக்கு பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரண்டாம் கட்டமாக 80,000 பேருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.
📕📘அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது
📕📘தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பவர்கள், தாங்களாகவே மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
📕📘இந்தியாவில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.
📕📘G.O 185- DATE -15.12.2020- பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு - நாள்: 15.12.2020
📕📘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
📕📘பொருளாதாரத்தில் முன்னேற கல்வியால் தான் முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
📕📘''பள்ளிகள் திறப்பை விட, மாணவர்களின் உயிர் தான் முக்கியம்'' - அமைச்சர் செங்கோட்டையன்
📕📘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜன.4-ல் இலவச JEE தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
📕📘ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு தீவிரம்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடும் கண்டனம்
📕📘கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய போகிறேன் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்
📕📘ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று அரசால் நிராகரிக்கப்பட்ட வெயிட்டேஜ் முறையினால் 2013 ஆம் ஆண்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற பாதிக்கப்பட்ட நபர்கள் முதல்வரை சந்திக்க சேலம் வருகை
👉2013ஆம் ஆண்டுஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீட்டின் முன்பு நீண்ட வரிசையில் மனு கொடுக்ப்பதற்கு 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு.
📕📘கால்நடைகளுக்கான கொட்டகைகள் அமைக்க 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
📕📘கொரோனா கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது - நடிகர் விவேக்
📕📘தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்
தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
📕📘தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி
📕📘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், வரும் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை சமர்பிக்க உத்தரவு; பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை
📕📘கர்நாடகத்தில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
📕📘டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் 10 பேர் டெல்லி புறப்பட்டு சென்றனர்
📕📘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்களோடுதான் அதிமுக கூட்டணி அமைக்கும்
- செல்லூர் ராஜு
📕📘பொங்கல் பரிசு அறிவித்தது சுயநலம் அல்ல, கடந்த ஆண்டு மக்கள் நன்றாக இருந்ததால் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தோம், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.2,500 தருவதாக அறிவித்துள்ளோம்.
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு சேலத்தில் முதல்வர் பழனிசாமி பதில்..
📕📘அதிகமாக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை.
மருத்துவ விடுப்பு, கொரோனா விடுப்பு தவிர அதிகமாக விடுப்பு எடுக்கும் அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மீது நடவடிக்கை.
-கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை.
📕📘வேதியியல் பாட ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
📕📘இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் இந்திய திரைப்படங்களின் பட்டியலை தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேக்கர் வெளியிட்டுள்ளார்.
இதில் அசுரன், தேன் ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்கள் உட்பட 23 இந்திய மொழிகளின் திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
📕📘வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை தவறாக வழிநடத்தாதீர்; எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்.
📕📘மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 25ஆம் நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்.
📕📘சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் நாளை சென்னை வருகை.
📕📘சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது, சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
📕📘தெலுங்குதேசம் முன்னாள் எம்.பி. ஒருவரை நிர்வாகியாகக் கொண்ட, டிரான்ஸ்ட்ராய் என்ற நிறுவனம் கனரா வங்கிகளில் 7 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
📕📘தைத்திருநாளை சிறப்பாக கொண்டாட இந்த ஆண்டு ரூ.1000 என்பதை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வருகிற 2021 ஜனவரி 4 முதல் இந்த தொகை வழங்கப்படும்
👉பொங்கல் பரிசு
ஒரு கிலோ அரிசி
ஒரு முழு கரும்பு
ஒரு கிலோ சர்க்கரை
திராட்சை, வெல்லம்..
👉2 கோடியே 6 லட்சம் அட்டைதார்ர்களுக்கு வழங்கப்படும்
-முதல்வர் அறிவிப்பு
📕📘தமிழகத்தில் தற்போது தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது
இங்குள்ள தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது - திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின்
📕📘தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுயநலத்துக்காக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா?" - மு.க.ஸ்டாலின்
📕📘மினி கிளினிக்குகள் கவுண்டமணி வாழைப்பழம் காமெடி போல இருக்கிறது- ஸ்டாலின் பேச்சு*
ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் என்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்*
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை மினி கிளினிக்கிற்கு நியமித்து பெயிண்ட் அடித்துள்ளார் முதல்வர்
📕📘"புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணத்தை வழங்காமல் பொங்கல் பரிசாக ரூ.2500 அறிவித்திருப்பது சட்டமன்ற தேர்தலுக்காக" - முத்தரசன்
📕📘தமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தமிழக அரசியல் கட்சிகளும் தங்களது சார்பில் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ளன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் கடிதத்தில்,
தமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது.
தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் அவரது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
முதன்முறையாக கல்வித்துறை சார்பில் தொகுதிக்கு ஒரு தேர்தல் தொடர்பு அதிகாரி நியமனம்...
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன மேற்பார்வையிடவும், இதை கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் சம்பந்தமான பணிகளுக்கும் சிறப்பு தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலும் ஓட்டுச்சாவடியின் தலைமை மற்றும் இதர அலுவலர் பணிகளில் ஆசிரியர்களேஈடுபடுத்தப்படுவர்.
ஊதியத்தின் அடிப்படையில் பொறுப்பு வழங்கப்படும் என்பதால் தற்போது ஆசிரியர்கள் பெறும் ஊதியம், புகைப்படம், வாக்காளர் பட்டியலின் பாக எண் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதை கண்காணிக்க கல்வித்துறை சார்பில் தொகுதிக்கு முதன்முறையாக ஒரு அதிகாரி நியமனம். செய்யப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முந்தைய தேர்தல்களில் தாசில்தாரே பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அரசாணை எண்:242, நாள்: 18-12-2012 - பத்தாம் வகுப்பிற்கு பின் படிக்கும் படிப்புகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் - பொதுப் பணிகளில் பணி நியமனம் / பதவி உயர்வுக்கு அனுமதி...
அரசாணை எண்:242, நாள்: 18-12-2012 - பத்தாம் வகுப்பிற்கு பின் படிக்கும் படிப்புகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் - பொதுப் பணிகளில் பணி நியமனம் / பதவி உயர்வுக்கு அனுமதி...
>>> அரசாணை எண்:242, நாள்: 18-12-2012 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...