கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உளவுத்துறையில் 2000 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021...

 


மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் “சி” பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: இந்திய உளவுத்துறை


மொத்த காலியிடங்கள்: 2000


பணி: Assistant Central Integence Officer, Grade II, Executive


சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400


தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 100 + ஆள்சேர்ப்பு செயலாக்க கட்டணமாக ரூ.500 என மொத்தம் ரூ.600 செலுத்த வேண்டும். பெண்கள், அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021


மேலும் விவரங்கள் அறிய https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற லிங்கில் அறிவிப்பை தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளவும்.

G.O. No.3220 - சமக்ர சிக்ஷா கூடுதல் மாநிலத் திட்ட இயக்குநராக திருமதி.S.அமிர்தாஜோதி IAS அவர்கள் நியமனம்...

 G.O. No.3220, Dated: 24-12-2020 - சமக்ர சிக்ஷா கூடுதல் மாநிலத் திட்ட  இயக்குநராக திருமதி.S.அமிர்தாஜோதி IAS அவர்கள் நியமனம்...



பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இணையதளம் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் (Hi-Tech Labs) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்...

 


பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இணையதளம் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் (Hi-Tech Labs) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 76896 / பிடி1 / இ3/ 2017, நாள்: 22-12-2020...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 76896 / பிடி1 / இ3/ 2017, நாள்: 22-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வித் துறை - 15-03-2020ன் படி இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிலிருந்து உதவியாளர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு...

 

From Junior Assistant/ Typist Post to Assistant Post Promotion Panel as on 15-03-2020 Released...

>>> பள்ளிக் கல்வித் துறை - 15-03-2020ன் படி இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிலிருந்து உதவியாளர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்ஸ்பயர் அவார்ட் - 2020ஆம் ஆண்டு தேர்வான மாணவர்கள் பட்டியல்... ( Inspire Award - 2020 - Selection List)...


 >>> இன்ஸ்பயர் அவார்ட் - 2020ஆம் ஆண்டு தேர்வான மாணவர்கள் பட்டியல்... ( Inspire Award - 2020 - Selection List)...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.12.2020 (வியாழன்)...

 


🌹முடியாதவர்கள் தான் அடுத்தவர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.

முடியும் என நினைப்பவர்கள் அடுத்ததை நோக்கி பயணிப்பார்கள்.!

🌹🌹பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும் 

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள் எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாக.      குடியிருப்பார்கள்.!!

அனைவருக்கும் இனிய   காலை வணக்கம்.   

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                            📕📘டிசம்பர் 16ஆம் தேதி தஞ்சையில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிக்க கூடாது என்று தஞ்சை முதன்மை நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன் மீதான  விசாரணை செவ்வாய்,புதன் ஆகிய இரண்டு நாட்கள்  நடைபெற்றது. 

நேற்று நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின் அடிப்படையில்  இடைக்கால உத்தரவை ரத்து செய்து தஞ்சை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையாளர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

📕📘பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்று அரசு அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 

📕📘தமிழகத்தில் 10ம் வகுப்பு,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜனவரி  4-ஆம் தேதியிலும், மற்ற அனைத்து வகுப்பு களுக்கும், ஜன., 20ம்தேதியும், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள்  அரசிடம்   தெரிவித்துள்ளனர். 

📕📘மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் குறித்துப் பயிற்சி அளிக்க முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை என்று வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

📕📘தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 85,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

📕📘ஜெஇஇ தேர்வு புதிய நடைமுறை விதிகள்: தேர்வு முகமை வெளியிட்டது                                                          

📕📘OMR - விடைத்தாள் அதிரடி மாற்றம்,  டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் இருந்தால் மட்டுமே Hall Ticket கிடைக்கும்.

📕📘எஸ்பிஐ வங்கி - பி.இ. / எம்சிஏ / எம்.எஸ்.ஸி பட்டதாரிகள் - 236 ஐ.டி. பாதுகாப்பு நிபுணர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-01-2020

📕📘கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்: டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம்.                                                                       

📕📘ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அரசு ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

நாளிதழ் செய்தி

📕📘தமிழகத்தில் 40 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கடும் உயா்வு

📕📘2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் – நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு.

📕📘 சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி, தங்குமிடம்: பாரதியார் பல்கலை. அறிவிப்பு

📕📘குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு: ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் சார்பில் நடைபெறுகிறது

📕📘ஆன்லைன் மூலம் வங்கி, நிதிச் சான்றிதழ் படிப்பு: ஐஐடி சென்னையுடன் இன்ஃபாக்ட் புரோ ஒப்பந்தம்

📕📘பல்கலைக்கழகங்கள் காவல் பயிற்சியையும் அளிக்கவேண்டும்: கிரண் பேடி வலியுறுத்தல்

📕📘பள்ளி மேலாண்மை குழு மற்றும் வளர்ச்சிக் குழு இணையதளம் (ONLINE TRAINING ) வழியாக  பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

📕📘தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்?.: ஐகோர்ட் கிளை கேள்வி

📕📘G.O 1470- போராடிய மருத்துவர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து அரசாணை வெளியீடு.

📕📘4 கோடி மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்   

📕📘குரூப்-1 தேர்விற்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில் ஹால் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் தவிப்பு

📕📘தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை 5 ஆண்டுக்கு நீட்டிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

📕📘மின்தடைகளை சரி செய்ய பணியாளர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

📕📘TNPSC-தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய வகையிலான விடைத்தாள்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

📕📘அரசு ஊழியர்களிடம் பிடித்த புதிய பென்சன் திட்ட தொகை ரூ.20 ஆயிரம் கோடி காலி :  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் குற்றச்சாட்டு.

📕📘TN-EMIS ல் கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகையினை சரியாக பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.

📕📘கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தடை விதிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

📕📘மினி கிளினிக்கில் பணிபுரிவதற்கு “நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்” சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை

📕📘உலக அளவில் கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

📕📘துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.                                                               

📕📘தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

📕📘பச்சை துண்டு போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

📕📘கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு  சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் தொடங்கியது.

📕📘இங்கிலாந்தில் வேகமாக பரவும் புது வகையான கொரனா தொற்றை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வரும் 28 ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

📕📘தேர்தலில் ரஜினி, கமலுக்கு விழும் அடி இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் 

-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

📕📘கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 27ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

📕📘சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் தமிழக சட்டமன்ற தேர்தலிலேயே ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த முடியும் 

- இந்திய தேர்தல் ஆணையம்

📕📘அண்ணாத்த திரைப்பட குழுவில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு ரத்து

📕📘டிச. 27ல் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்த ஸ்டிரைக் வாபஸ்

கோரிக்கைகளை அரசு தரப்பு ஏற்பதாக கூறியதையடுத்து ஸ்டிரைக் வாபஸ் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

📕📘12ம் வகுப்பு பயிலும் 9.5 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிலும் வகையில் செல்போன் வாங்க தலா 10000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு திட்டம்

📕📘லோன் ஆப் - ஆர்பிஐ எச்சரிக்கை

ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி

குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் 

- ரிசர்வ் வங்கி

📕📘சென்னையில் குப்பை கொட்ட கட்டணம் என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். குப்பை கொட்ட கட்டணம் என்பதை திரும்பப் பெறாவிடில் திமுக ஆட்சி வந்தவுடன் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

📕📘சொந்த தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே முதலமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லை

சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து சட்டத்திற்கும் அதிமுக ஆதரவு அளித்த‌து

சிவகங்கையில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டத்தில் காணொலி மூலம் ஸ்டாலின் பங்கேற்று பேச்சு

📕📘மேற்கு வங்கத்தை குஜராத் மாநிலத்தைப் போல மாற்ற விடமாட்டோம்

முதல்வர் மம்தா பேச்சு 

📕📘மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே வழிவகுக்கும்

தனியார் மூலம் நியமிப்பதை கைவிட்டு மருத்துவப் பணியாளர் தேர்வு மூலம் மருத்துவர், செவிலியிரை தேர்வு செய்க

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

📕📘கர்நாடகாவில் ஜனவரி முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி

ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும், பெற்றோர் ஒப்புதலுக்குப் பிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனைகள் வெளியீடு

📕📘தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்-ஆப் அடுத்த ஆண்டு சில புதிய வசதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

வாட்ஸ்-ஆப் செயலியின் அடுத்த வடிவத்துடன் புதிய ரகசியக் காப்பு விதிகளையும் அறிவிக்க உள்ளது.

📕📘புரெவி புயல் பாதிப்பை பார்வையிட 28 ஆம் தேதி தமிழகம் வர உள்ள நடுவண் குழுவிடம் பாதிப்புகளை சீரமைக்க ₹1514 கோடி நிதியுதவி கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

📕📘இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், குறைந்தபட்ச ஆதார விலை என சாதித்த திமுக என்றுமே விவசாயிகளின் உற்ற துணையாக நிற்கும்.

திமுக தலைவர் ஸ்டாலின்

📕📘பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு:

ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் 

ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா கோரிக்கை.

பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய மட்டும் இளையராஜா அனுமதி கோரியிருந்தார்.                                                            📕📘அரசு பள்ளி மாணவர்கள், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., போட்டி தேர்வுக்கு தயாராக, இணையவழி பயிற்சி விண்ணப்பங்களை, வரும், 31க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

📕📘2021 ஜேஇஇ தேர்வு குறித்த புதிய விதிமுறைகளைத் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2019-ம் ஆண்டு ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு 2021 ஜேஇஇ தேர்வெழுத அனுமதி கிடையாது 

📕📘அரையாண்டு தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்து, மாணவர்களின்  இறுதியாண்டு தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது' என, கல்வித்துறை விளக்கமளித்துள்ளது 

ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் அரையாண்டு தேர்வுக்கும், மாணவரின் இறுதியாண்டு தேர்ச்சிக்கும் தொடர்பில்லை' என, கல்வித்துறை விளக்கமளித்துள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர்

📕📘CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக , இன்று (22/12/2020) புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து , பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

ADW உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் - 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களின் விவரங்கள் கோருதல் - ஆணையரின் கடிதம்...

 ஆதிதிராவிடர் நல ஆணையரகம் 


விடுநர் 

ஆணையர், 

ஆதிதிராவிடர் நலத்துறை, 

சென்னை-5. 


பெறுநர் 

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள். 


ந.க.எண். 11/ 32202 /2020 நாள். 22.12.2020. 


அய்யா/அம்மையீர், 

பொருள்: 

ஆதிதிராவிடர் நல ஆணையரகம் - ஆசிரியர் பணியமைப்பு தொடக்கப்பள்ளிகள் - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் / இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர்/ உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்கள் - 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களின் விரங்கள் கோருதல் - தொடர்பாக. 


பார்வை: 

1. அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (FR-IV) துறை, நாள்.10.03.2020 

2. அரசாணை (நிலை) எண்.116, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (FR-IV) துறை, நாள்.15.10.2020 பார்வையில் காணும் அரசாணைகளின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அரசுப் பணியாளர்களின் உயர்கல்வித் தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு மற்றும் முன் ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம் மற்றும் இப்பொருள் குறித்துப்பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகள் மற்றும் தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகளில் ( Fudamental Rules) விதி எண்.314-ல் பிரிவுகள் (3) மற்றும் (4) ஆகியவற்றை இரத்து செய்து பார்வை (19ல் கண்டுள்ள அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. 


மேற்கண்ட அரசாணைபத்தி 6(VI)ல் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

(VI) The cases of Government servants who have ecquired higher qualification prior to issue of this general order, and not sanctioned with advance increments be examined separately as per the previous orders issued, if any, by the administrative department concerned and with reference to the posts specified in that order and if he is otherwise qualified, then the advance increment may be sanctioned by the administrative department concerned after obtaining concurrence of Finance department. If no previous orders were issued by any of the department concerned. then they are not eligible for sanction of any advance increments for passing higher qualification irrespective of the post held/degree acquired". 


எனவே, பார்வை(ரில் கண்டுள்ள அரசாணை பத்தி 6(VI)ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 09.03.2020 வரை இந்நேர்வில் தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வினை இதுவரை பெறாத/ பெறவிண்ணப்பிக்காத ஆசிரியர்களின் உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பணிப்பதிவேட்டினை கீழ்கண்ட விபங்களின் அடிப்படையில் நன்கு கூர்ந்தாய்வு செய்து இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் ஒவ்வொரு பதவி வாரியாகத் தனித்தனிப் படிவங்களில் MS Excel மற்றும் Vanavil-awaiyar மொழி வடிவில் தட்டச்சு செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் கையொப்பத்துடன் 10.01.2021-க்குள் ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு அனுப்புவதுடன், அவ்விவரங்களை adwrsec@gmail.com என்ற மின்னஞ்கல் முகவரிக்கும் அனுப்புதல் வேண்டும் எனவும், தகுதியான நபர்கள் எவரும் இல்லை எனில் தவராது இன்னை அறிக்கையினை அனுப்பிவைக்குமாறும் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள், 


1 அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (FR-IV) துறை, நாள்.10.03.2020-க்கு முன்னர் (அதாவது 09.03.2020) வரை) உயர்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


2. அரசாணை (நிலை) எண்.328, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (பணியாளர் A) துறை, நாள்.09.04.1983-ன்படி சம்பந்தப்பட்ட பணியாளர் உயர்கல்வி பயில துறையின் முன் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும். 


3. தொடர்புடைய பல்கலைக்கழகம் பட்டம் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். 


4. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலப்பல்கலைக் கழகங்களில் பெற்ற பட்டயச்சான்றுகளைப் பரிசீலனைச் செய்தல் கூடாது,


5. தொடர்புடைய பட்டம் ஏற்கனவே ஊக்க ஊதியம் அகுமதித்தல் சார்ந்த நடைமுறையில் இருந்த அரசாணையின்படி தகுதி பெற்றதாக இருத்தல் வேண்டும்.


6. ஒரு ஆசிரியரின் மொத்தப் பணிக்காலத்தில் உயர்கல்வி தகுதிகளுக்கு ஏற்கனவே இரு ஊக்க ஊதிய உயர்வுகளை பெற்றிருந்தால் அந்த ஆசிரியரின் பெயரினைப் பரிந்துரைத்தல் கூடாது.


 7. பணி ஓய்வு பெற்ற நாளுக்குப் பின்னர் உயர்கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பெயரினைக் கண்டிப்பாகப் பரிந்துரைத்தல் கூடாது. 


8. உயர்கல்வி இறுதித்தேர்விற்கான கால அட்டவணை, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் உண்மைத்தன்மைச் சான்றுடன் ஒப்பிட்டு சரிபாக்கப்படவேண்டும். 


9. தகுதி பெற்ற எந்தவொரு ஆசிரியர் பெயரும் விடுபடக்கூடாது. எதிர்காலத்தில் அவ்வாறு விடுபட்டது கண்டறியப்பட்டால் அதற்குத் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்/தனிவட்டட்சியர்/ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்ரே முழுப்பொறுப்பேற்க நேரிடும். 


பார்வை (2) கண்டுள்ள அரசாணை (நிலை) எண்.116, பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத் (FRIV) துறை, நாள்.15.10.2020, பார்வை (19ல் கண்டுள்ள அரசாணை வெளியிடப்பட்ட நாளுக்கு முன்னர் (09.03.2020) உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத/ விண்ணப்பிக்காத பணியாளர்களுக்கு 31.03.2021-க்குள் உரிய அனுமதி ஆணை வழங்கப்பட ண்ேடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இப்பொருள் குறித்த விவரங்களை விரைந்து அரசுக்கு அனுப்பவேண்டியுள்ள நிலையில் மறு நினைவூட்டுக்கு இடமின்றி மேற்குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் உரிய விவரங்களை பெற்று அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

இணைப்பு. படிவம்  


ஆதிதிராவிடர் நல ஆணையருக்காக,







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...