இன்று முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்க்கான அவகாசம் பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையை மாற்றவும், விரைவில் பணம் வசூல் செய்யப்பட்டு செல்வதற்கு பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டது. இதற்கான அவகாசம் இன்றுடன் முடியவுள்ள நிலையில், பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கு அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வருகின்ற, பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கான கால அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சுங்க சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாகனங்களில் பாஸ்டேக் அட்டை உள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
CBSE - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு...
- பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் தொடங்கும்.
- பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே 4 முதல் தொடங்கும்.
தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தி மிரட்டி பணம் வசூலித்த சி.இ.ஓ - லஞ்ச ஒழிப்பு விசாரணையில் பரபரப்பு தகவல்...
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருப்பவர் உஷா. இவர் பள்ளிகளின் உரிமம் புதுப்பித்தலுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதைதொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், புத்தாண்டு பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்...
அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (டிச.30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.
இதற்கு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர்கள் அரசுக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்தனர். பல ஆண்டுகளாகக் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளுடன் காத்திருந்தவர்களின் பணி வாய்ப்பும் கேள்விக்குறியானது.
இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றி வரும் உபரி ஆசிரியர்களுக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
“அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றும், 59 உபரி ஆசிரியர்களை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி அளிப்பதற்கு உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகிறோம்.
இதற்காக வேளாண்மைப் பல்கலைக்கழகத் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை, உயர் கல்வித்துறை கோரியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்புக்காக சுமார் 2,500 பேர் காத்திருக்கிறோம். குறைந்த ஊதியத்தில் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறோம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு அளிக்க உள்ள வாய்ப்பு எங்களுக்கானது. உயர் கல்வித்துறையின் இந்த முடிவால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரிப் பேராசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் முடிவைக் கைவிட்டு, அப்பணியிடங்களுக்குத் தகுதியுள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தப்பட வேண்டும்’’.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தரப்பில், “அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு, இப்பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்குவது குறித்து அரசிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. உங்கள் பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டவுடன், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
NMMS தேர்வுக்கு 05.01.2021 முதல் 12.01.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு...
NMMS தேர்வுக்கு 05.01.2021 முதல் 12.01.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு ந.க.எண். 027369 /NMMS /2020, நாள் : 30-12-2020...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
People living in low-lying areas are advised to stay safe as flooding is possible
வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் People living in low-lying areas are advi...