கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க - வீடு தேடி வரும் சிலிண்டர் - இண்டேன் அறிவிப்பு...


மிஸ்டு கால் கொடுத்தால் போதும் வீடு தேடி சமையல் எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) பதிவு செய்யும் வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்து, பின்னர் ரெக்கார்ட் வாய்ஸ் மூலம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும்.


தற்போது குறிப்பிட்ட எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால் போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தானாக பதிவு செய்யும் வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தியுள்ளார்.


84859 55555 என்ற எண்ணுக்கு அழைத்தால் அதன் மூலம் எரிவாயு சிலிண்டரை பதிவு செய்யலாம், மேலும் புதிய இணைப்பு பெறுவதற்கும் மிஸ்டு கால் வசதியை பயன்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்த சேவையை அறிமுகப்படுத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள் எளிய முறையில் இனி சிலிண்டர் எரிவாயுவை பெறலாம் என்றும், இந்த மிஸ்டு கால் வசதி உதவும் என தெரிவித்துள்ளார்.

7 வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இந்த மாதம் மீண்டும் கொடுக்கப்பட வாய்ப்பு...

நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முன்னேற்றம் காணப்படுவதால், 7 வது ஊதியக் குழு தொடர்பாக மத்திய அரசு சில நல்ல செய்திகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.


அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்கான காத்திருப்பு எதிர்பார்த்ததை விட விரைவில் முடியும் என்று பல தகவல்கள் கூறுகின்றன. இந்த மாதத்திலேயே டி.ஏ. மீண்டும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2021 ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின் படி இருக்கும்.


மார்ச் 2020 இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (டிஏ)  ஆகியவற்றை ஜனவரி 1, 2020 முதல் அமல்படுத்த ஒப்புதல் அளித்தது.


விலை உயர்வுக்கு ஈடுசெய்ய அடிப்படை ஊதியம் / ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஏ மற்றும் டிஆரின் விளைவாக கருவூலத்தின் தாக்கம் ஆண்டுக்கு ரூ .12,510.04 கோடியாகவும், 2020-21 நிதியாண்டில் ரூ .14,595.04 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (2020 ஜனவரி முதல் 2021 பிப்ரவரி வரை 14 மாத காலத்திற்கு).


இது சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். 7வது ஊதியக்குழு தொடர்பான மற்றொரு வளர்ச்சியாக, சேவை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் இயலாமை இழப்பீட்டை நீட்டிக்கவும் அரசாங்கம் முடிவு செய்தது. இந்த முடிவு விரிவுபடுத்தப்படும், குறிப்பாக மத்திய ஆயுத போலீஸ் படையில் (சிஏபிஎஃப்), பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், பிஎஸ்எஃப் போன்றவர்களுக்கு நிவாரணம் வழங்கும். " புத்தாண்டு முடிவில், அனைவருக்கும்" இயலாமை இழப்பீடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் தங்கள் சேவையைச் செய்யும்போது பாதிக்கப்பட்டால் மற்றும் இன்னும் பணியில் தக்கவைக்கப்பட்டால் இயலாமை இழப்பீடு பெறலாம்.

1.1.2004 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்களும், என்.பி.எஸ். இன் கீழ் வந்தவர்களும் இதில் அடங்குவர் "என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்." 


என்.பி.எஸ் தொடர்பான முடிவு ஊழியர்களுக்கும் பயனளிக்கும், மேலும் அரசு ஊழியர்களுக்கும் மேலாக, ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் அல்லது மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் என்று அவர் கூறினார். 


இதற்கு முன்பு, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்) கீழ் நியமிக்கப்பட்ட அந்த அரசு ஊழியர்களுக்கு அத்தகைய இழப்பீடு கிடைக்காது என்று 2009 உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - மத்திய அரசு.

 


ஜனவரி 17 முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.


மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு -மத்திய சுகாதார அமைச்சகம்.


கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருத்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள் தொகுப்பு...11.01.2021 (திங்கள்)...

 


🌹தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால் தான் எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளது கடிகாரம்.!

🌹🌹மதிக்காதவர்களிடம் பணிவை காட்டிவிடாதீர்கள் ஏனெனில் அது உங்கள் அடிமைத்தனத்தை காட்டும்.

மதிப்பவர்களிடம் உங்கள் கோபத்தை காட்டிவிடாதீர்கள் ஏனெனில் அது உங்கள் அதிகாரத்தைக் காட்டும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன  

🎀🎀வட்டார வாரியாக, அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிட்டு, கூடுதலாக தேவைப்படுவோர் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது 

🎀🎀ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் காலியாக உள்ள ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் நிரப்பிட கலந்தாய்வு.

🎀🎀புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதியும் தோல்வி அடைந்ததால், தங்களது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரி மாணவிகள் 3 பேர், புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனிடம்  மனு அளித்தனர்.

🎀🎀மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி போன்றவற்றில் பயிலும் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ரூபாய் 2 லட்சம் வரையிலான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துளார்.

🎀🎀அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சம்பளம் சார்ந்த முக்கிய செய்தி - IFHRMS - ESR பரிமாற்றத்தை நிறைவு செய்தல் மற்றும் செயல்பாட்டில் கொண்டு வருதல் - அனைத்து DDOவிற்கும் கொடுக்கப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🎀🎀CPS திட்டத்தை ரத்து செய்வது குறித்து வல்லுநர் குழு பரிந்துரைகள் படி பரிசீலனை செய்து நடவடிக்கை - CM CELL REPLY

🎀🎀அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் முயற்சியை கைவிடவில்லை- மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டி                                       

🎀🎀அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும்.

இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும்.

அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர்.

-தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

🎀🎀புலம்பெயர் குழந்தைகளை அடையாளம் காணுதல், பள்ளிகளில் சேர்த்தல் மற்றும் அவர்களது தொடர் கல்வி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

🎀🎀01-01-2021 நிலவரப்படி பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களின் பெயர் மற்றும் பதவி பட்டியல் வெளியீடு

🎀🎀11 அரசு ஓட்டுநர் பணிகளுக்கான விளம்பர அறிவிக்கை -விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-01-2021

🎀🎀ஜம்மு காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நவ்ஷேரா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்திய படைகள் பதிலடி

🎀🎀இந்த ஆட்சியை மாற்ற மக்கள் தயாராகிவிட்டனர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🎀🎀தற்போது சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது - திமுக சட்டத்துறை கருத்தரங்கில் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🎀🎀கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

🎀🎀பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி, 

திமுக மகளிரணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

🎀🎀சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் 

-பாமக நிறுவனர் ராமதாஸ்

🎀🎀தமிழகம் வெற்றி நடை போட்டிருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம் - கமல்ஹாசன்

🎀🎀தை பிறந்தவுடன் நல்ல நாளில் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறேன்.

- எஸ்.ஏ.சி பேட்டி.

🎀🎀இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.  

இந்தோனேசியாவுடன் இத்துயரமான சமயத்தில் இந்தியா துணை நிற்பதாக பிரதமர் மோடி ட்வீட்.

🎀🎀இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையை (NDRF) ஐநாவின் சர்வதேச பேரிடர் மீட்புப் படையின் ஒரு பகுதியாக விரைவில் அங்கீகரிக்கப்பட உள்ளதாக தகவல் உலகில் எங்கு பேரிடர்கள் ஏற்பட்டாலும் ஐ.நா சார்பாக NDRF செயல்படும் என கூறப்படுகிறது.

🎀🎀உலகில் அதிகம் பேர் ட்விட்டரில் பின்தொடரும் அரசு தலைவராக முதலிடத்தில் பிரதமர் மோடி.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கணக்கு முடக்கப்பட்டதால் முதல் இடத்திற்கு முன்னேறினார் மோடி

🎀🎀புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பிப்ரவரி 1ம் தேதி உண்ணாவிரதம்.

ஜனவரி 22ம் தேதி கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். 

- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிà

🎀🎀பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஐ.சி.சி -க்கான பிசிசிஐ யின் பிரதிநிதியாக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

🎀🎀ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் கர்நாடகாவின் 1,100 விவசாயிகளுடன் நெல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒரு குவிண்டாலுக்கு ₹1,950 வீதம், அரசின் குறைந்த பட்ச ஆதார விலையை விட 100 ரூபாய் உயர்த்தி வாங்க உள்ளதாக தகவல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - கவின் கையேடு (தமிழ் வழி)...

 


10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்  - கவின் கையேடு (தமிழ் வழி)...

>>> கையேடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF ECONOMICS POST GRADUATE ASSISTANTS - 2018 - 2019 - CV LIST...


 TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF ECONOMICS POST GRADUATE ASSISTANTS  - 2018 - 2019...

>>> CLICK HERE TO DOWNLOAD CV LIST...


TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF ECONOMICS POST GRADUATE ASSISTANTS - 2018 - 2019 - MARK LIST...


 TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF ECONOMICS POST GRADUATE ASSISTANTS  - 2018 - 2019...

>>> CLICK HERE TO DOWNLOAD MARK LIST...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.E.O. celebrated his birthday by cutting a cake in a government school

அரசுப்பள்ளியில் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வட்டாரக்கல்வி அலுவலர் Block Education Officer celebrated his birthday by cutting a cake ...