கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதுகலை ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதுகலை ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

New Teachers Joining on 16-02-2026 - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்


 புதிய ஆசிரியர்கள் 16-02-2026 அன்று பணி ஏற்பு - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்


New teachers to take up duties on 16-02-2026 - Activities to be carried out


நண்பர்களே வணக்கம் 🙏

 

புதிய முதுகலை ஆசிரியர்கள் 16-02-2026 திங்கள் கிழமை பணி ஏற்பு செய்ய உள்ளார்கள் 🙏


 *அது சார்ந்த பதிவுகள்* ...


1) தங்களின் பள்ளியில் *காலிப் பணியிடங்கள்* இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


2) *மருத்துவ தகுதிச் சான்றிதழ்* கொண்டு வருவார்கள் 


3) இவர்கள் அனைவரும் *TRB exam* மூலம் தான் நியமனம்..

சான்றிதழ்களை TRB / CEO office verify செய்து இருக்கும்...

இருப்பினும்...

( நியமன ஆணையில் சார்ந்த தலைமை ஆசிரியர் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள் என்று இருக்கும்) 

 


4) பணி ஏற்கும் போது *appointment order, joining request letter போதும்*

( அனுப்புநர்


பெறுநர்

தலைமை ஆசிரியர்...


பொருள்...

பணி ஏற்க அனுமதி....


Etc...


கையால் எழுதினால் கூட போதும்)


மாதிரி இணைத்துள்ளேன் 😊


5) joining report JD HS முகவரிக்கு  இருக்க வேண்டும் *joining report நீங்க CEO office அனுப்ப வேண்டும்*  (இரண்டு நகல்) ...  அவர்கள் மொத்தமாக தொகுத்து JD office அனுப்பி விடுவார்கள் 


முதல் நாளில் இது மட்டும் போதும்..


6) ஒன்றுக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பின்...

வர வர அவர்களின் பெயரை எழுதிக் கொள்ளலாம்..

முதலில் பணி ஏற்பவர் தான் senior என கிடையாது...


( TRB ranking படி தான் seniority) 

( different subjects ஆக இருந்தாலும்)


அடுத்த மாதம் சரி செய்து எழுதி விடலாம்... 

PG/PD/Computer instructor Gr 1 எல்லாம் ஒரே தொகுதி தான்... 


தற்போதைக்கு இவை மட்டுமே...


 *இனி வரும் நாட்களில்* ...


7) IFHRMS ID create செய்ய வேண்டும்...

தற்போது IFHRMS ID create செய்யும் போதே CPS number generate ஆகி விடும் ( தனியே CPS விண்ணப்பிக்க தேவையில்லை).

( ஏற்கனவே அரசு பணியாளர் எனில் அதே number பயன்படுத்தி கொள்ளலாம்) 


8) Bank account வேண்டும் ( GOVT MOU signed bank ( SBI/BOB/ IOB / canara Bank/ etc.. ) ஆக இருப்பது நன்று.. insurance coverage கிடைக்கும் ... 

Front page xerox copy needed.


9) PAN , Aadhar, family details, nominee, education qualification details... Xerox copy வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ( IFHRMS I'd create செய்ய தேவைப்படும்)


10) spouse already govt employed எனில் NHIS deduction வேண்டாம்... 


இல்லை என்றால் NHIS deduction IFHRMS இல் செய்து விடலாம்.

New card க்கு கருவூலத்தில் விண்ணப்பிக்க வேண்டும் ( பிடித்தம் இப்போதே செய்யலாம் NHIS Card/number வந்த பிறகு தான் பிடித்தம் என்று இல்லை)


11) pay பெற்றுத்தர தனி order எதுவும் வராது... 

16/2/26 முதல் ஊதியம் பெற்று வழங்கலாம்...


12) தொழில் வரி இந்த முறை (2025-26) வேண்டாம்...


13) 18/2/26 சென்னை induction programme உள்ளது...


SR opening...

Genuineness....

IFHRMS new ID creation... 

சார்ந்த பதிவுகள் ஒவ்வொன்றாக வரும் நாட்களில் பகிர்கிறேன் 😊



சிலருக்கு ஏற்கனவே பள்ளி சூழல் தெரிந்து இருக்கும்...

பலருக்கு இது முதல்/ *புதிய அனுபவமாக* இருக்கலாம்...


அரசுப் பணி பல்வேறு கனவுகளுடன் *அவர்கள் *பணி ஏற்பு* செய்கிறார்கள் 💐💐💐..


புதிய சூழ்நிலையில் அவர்கள்....


அவர்களுக்கு 

வழிகாட்டி நல்வழியில் அன்புடன் கொண்டு செல்வது நமது அனைவரின் கடமையாகும் 👍🙏...


தீபாவளிக்கு / ஊர் திருவிழாவிற்கு மட்டுமே புத்தாடைகள் பெறும்

பல  குழந்தைகளைப் போல..

🤪


பல பள்ளிகளில் புதிய " *நியமனம்* " என்றால் மட்டுமே எங்களுக்கு 

ஆசிரியர்கள் கிடைப்பார்கள்

என *ஏங்கிய* 

நமது குழந்தைகளுக்கு


 *புதிய ஆசிரியர்கள்* கிடைத்து உள்ளார்கள் 🤗...


 *வாழ்த்துகள்* .....


நாம் அவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டுவோம்

அவர்கள் நமது குழந்தைகளை " *சிறப்பாக வழி* *நடத்துவார்கள்* "...


 *அதிகாரம்* மிகக் குறுகிய எல்லை உடையது...


ஆனால் *அன்பு*  எல்லை அற்றது 😊


மகிழ்வுடன்....

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

14/2/26


PG Assistant Vacancies as on 07.02.2026


07-02-2026 அன்று முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வில் காலிப் பணியிடங்கள்


07.02.2026 அன்று முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு காண்பிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள்


Vacant Places displayed for Tamil, English, Mathematics, Physics, Chemistry and Economics subjects in the Postgraduate Teacher Recruitment Counselling on 07.02.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 


முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 02-02-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


PGTRB 2025 - Provisional Selection List

 

 

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் 2025 - தற்காலிக தெரிவுப் பட்டியல் (Provisional Selection List) வெளியீடு


DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANT / PHYSICAL DIRECTOR GRADE-I / COMPUTER INSTRUCTOR GRADE-I – 2025. 

PUBLICATION OF PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION - Press News.. 


PGTRB 2025 - Provisional Selection List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

 

TRB PG Selection List Published.. 

👇👇👇


https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-995&language=LG-1




>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ் (Earbuds)...



12-10-2025 அன்று நடைபெற்ற PGTRB தேர்வு முடிவுகள் வெளியீடு

 

 


கடந்த மாதம் 12-10-2025 அன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் PGTRB தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகை செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TRB PG 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு - வலைதள முகவரி...


https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-986




>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


PGTRB - உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் ஆட்சேபனை தொடர்பாக பத்திரிக்கைச் செய்தி

 


PGTRB - உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பத்திரிக்கைச் செய்தி



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Direct Recruitment for PG Assistant / Physical Director Grade – I / Computer Instructor Grade – I (02/2025) - Release of Tentative key with Objection Tracker.


https://trb1.ucanapply.com/login



PGTRB Hall Ticket குறித்த குறைகள் - TRB செய்தி வெளியீடு


முதுகலை ஆசிரியர் தேர்வுக் கூட நுழைவு சீட்டு : ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு 


PGTRB Hall Ticket குறித்த குறைகள் - TRB செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


திட்டமிட்டபடி அக்டோபர் 12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - TRB அறிவிப்பு

 


திட்டமிட்டபடி அக்டோபர் 12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - டிஆா்பி அறிவிப்பு


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்டோபர் 12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (TRB) தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி எழுத்துத்தோ்வு அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவு பெற்றது.


இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் 3 வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினா். அதைத்தொடா்ந்து, முதுநிலை ஆசிரியா் தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை ஆசிரியா் தோ்வு வாரியத்தில் நடந்தது. வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தோ்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள பெரும்பாலான தோ்வா்களும் தோ்வு தேதி தள்ளிவைக்கப்படுமா என எதிா்பாா்த்து வந்தனா். ஆனால், அது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.


இந்நிலையில், தோ்வா் ஒருவா் முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைக்கக்கோரி தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தாா். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணை இயக்குநா் முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலருக்கு அனுப்பியுள்ள விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:


ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, ஒரு தோ்வுக்கான அறிவிப்புக்கும் தோ்வு தேதிக்கும் இடையே 60 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும். இருப்பினும் முதுநிலை ஆசிரியா் தோ்வில் தோ்வா்களின் நலன் கருதி 90 நாள்களுக்கு மேல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை ஆசிரியா் தோ்வு அக்டோபர் 12-ஆம் தேதியன்று நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது


முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு : Hall Ticket வெளியீடு



 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு : தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2025ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அக்டோபர் 12ம் தேதி நடத்தப்பட உள்ளது.


இத்தேர்வினை எழுத 236,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


- ஆசிரியர் தேர்வு வாரியம்.




முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் & ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல்

 

முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய 3 மண்டலங்களில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் & ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


PG TRB Exam Date Announced

 


முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் தேதி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 


PG TRB Exam Date Announced 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Reduction of 10% Reservation to Secondary Grade Teachers in Appointment of Post Graduate Teachers to 8% - DSE Proceedings, Dated: 21-01-2025 - Attachment: G.O. (Ms) No: 261, Dated : 09-12-2024

 

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8% ஆகக் குறைப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 21-01-2025 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 261, நாள் : 09-12-2024


Reduction of 10% Reservation to Secondary Grade Teachers in Appointment of Post Graduate Teachers to 8% - Proceedings of the Director of School Education, Dated: 21-01-2025 - Attachment: Ordinance G.O. (Ms) No: 261, Dated : 09-12-2024


அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடு அடிப்படையில் முதுகலை ஆசிரியராக பணி வழங்கப்படும் நடைமுறையில் `விதித்திருத்தம் செய்யப்பட்ட விவரம்` - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 21-01-2025 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 261, நாள் : 09-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - Annexure 1 - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE 2 - Appointment Details படிவங்கள்


 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - Annexure I - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE II - Appointment Details படிவங்கள்


Post Graduate Teacher Promotion - Annexure I - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE II - Appointment Details Formats



>>> Click Here to Download - Annexure 1...



>>> Click Here to Download - Annexure 2...



01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்...

 

 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர்  பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்...


As on 01.08.2024 Post Graduate Teacher Post Vacancies Based on Students Strength - DSE Proceedings...





தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.06.2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்...


தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.06.2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பிற மாவட்ட விவரங்கள் கிடைத்தவுடன் பகிரப்படும்...

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு 20.11.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 049174/ டபிள்யு2/ இ3/ 2023, நாள்: 16-11-2023 (Surplus Counselling on 20.11.2023 for Post Graduate Teachers working in Government Schools - Proceedings of Director of School Education Rc.No: 049174/ W2/ E3/ 2023, Dated: 16-11-2023)...


 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு 20.11.2023 அன்று பணிநிரவல்  கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 049174/ டபிள்யு2/ இ3/ 2023, நாள்: 16-11-2023 (Surplus Counselling on 20.11.2023 for Post Graduate Teachers working in Government Schools - Proceedings of Director of School Education Rc.No: 049174/ W2/ E3/ 2023, Dated: 16-11-2023)...





முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மதிப்பூதியம் நாள் ஒன்றுக்கு ரூ.1000, பங்கேற்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் சிற்றுண்டி செலவினம் ரூ.150, போக்குவரத்துப் படி ரூ.100 - மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.6400/எஃப்‌4/2023, நாள்‌: 26.10.2023 (Post Graduate Teacher Training - Remuneration Rs.1000 per day for District Resource Persons, Food and refreshments Rs.150 for all participating teachers, Transport Allowance Rs.100 - State Council of Educational Research and Training Director's Proceedings No.6400/F4/2023, Dated: 26.10.2023)...

 

முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மதிப்பூதியம் நாள் ஒன்றுக்கு ரூ.1000, பங்கேற்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் சிற்றுண்டி செலவினம் ரூ.150, போக்குவரத்துப் படி ரூ.100 -  மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.6400/எஃப்‌4/2023, நாள்‌: 26.10.2023 (Post Graduate Teacher Training - Remuneration Rs.1000 per day for District Resource Persons, Food and refreshments Rs.150 for all participating teachers, Transport Allowance Rs.100 - State Council of Educational Research and Training Director's Proceedings No.6400/F4/2023, Dated: 26.10.2023)...


மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-06.


ந.க.எண்‌.6400/எஃப்‌4/2023, நாள்‌. 26.10.2023.


பொருள்‌ : பயிற்சி - முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி - உயர்‌ மற்றும்‌ மேல்நிலை வகுப்புகளுக்கான இயற்பியல்‌, வேதியியல்‌, கணிதம்‌ மற்றும்‌ உயிரியல்‌ பாடம்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில்‌ பயிற்சி வழங்குதல்‌ - முதன்மைக்‌ கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில்‌ 06.11.2023 & 07.11.2023 மற்றும்‌ 16.11.2023 முதல்‌ 18.11.2023 முடிய நடைபெறுதல்‌ - பங்கேற்பாளர்களை பணிவிடுவிப்பு செய்ய கோருதல்‌ - தொடர்பாக.


பார்வை 1. சென்னை-06, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்ககத்திடமிருந்து பெறப்பட்ட நிதி ஒதுக்கீடு


2. இந்நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.6400/எஃப்‌4/2023 நாள்‌.26.09.2023


2024-2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு மாணவர்‌ மைய கற்றல்‌ அனுபவங்களை வழங்கும்‌ விதமாக திறன்வளர்ப்‌ பயிற்சியை மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள்‌ மற்றும்‌ விரிவுரையாளர்களுடன்‌ அனைத்து மாவட்டங்களில்‌ பணிபுரியும்‌ முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கிட முதன்மைக்‌ கருத்தாளர்களுக்கான பயிற்சியினை சென்னையில்‌ நடத்திட மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ திட்டமிடப்பட்டுள்ளது.


இப்பணிமனையில்‌ மேல்‌நிலை வகுப்‌புகளுக்கான (11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை) இரண்டாம்‌ கட்டமாக வணிகவியல்‌/ கணக்கு பதிவியல்‌, ஆங்கிலம்‌, பொருளியல்‌, வரலாறு மற்றும்‌ தமிழ்‌ பாடங்களை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும்‌ வழங்கிடும்‌ வகையில்‌ முதன்மைக்‌ கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில்‌ 06.11.2023 & 07.14.2023 மற்றும்‌ 16.11.2023 முதல்‌ 18.11.2023 முடிய திறன்வளர்ப்‌ பயிற்சியாக DPI வளாகத்தில்‌ உள்ள SIEMAT HALL -இல்‌ கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. 








TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022ல் பணி நியமனம் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to issue a general Regularisation order to Post-Graduate Teachers of Mathematics, Physics, Chemistry, Botany and Zoology selected by TRB and appointed in October 2022 from the date of joining) ந. க. எண்: 63773, 63774, 63775, 63776, 63777 & 63778 / டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 16-10-2023...


 TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022ல் பணி நியமனம் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to issue a general Regularisation order to Post-Graduate Teachers of Mathematics, Physics, Chemistry, Botany and Zoology selected by TRB and appointed in October 2022 from the date of joining) Rc.No: 63773, 63774, 63775, 63776 & 63777 / W2/ E1/ 2023, Dated: 16-10-2023...




முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான உள் மாவட்டக் கலந்தாய்வின் பிந்தைய திருப்பூர் & கன்னியாகுமரி மாவட்ட காலிப் பணியிடங்கள் விவரங்கள் (Tirupur & Kanyakumari District Vacancy Details after Inter District Counseling for Post Graduate Teachers)...


 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான உள் மாவட்டக் கலந்தாய்வின் பிந்தைய திருப்பூர் & கன்னியாகுமரி மாவட்ட காலிப் பணியிடங்கள் விவரங்கள் (Tirupur & Kanyakumari District Vacant Places Details after Inter District Counseling for Post Graduate Teachers)...



முதுநிலை ஆசிரியர்களுக்கான உள் மாவட்டக் கலந்தாய்வின் பிந்தைய திருப்பூர் மாவட்ட காலிப் பணியிடங்கள் விவரங்கள்

 *பாடம் :தமிழ்- மொத்த காலிப் பணியிடங்கள் 13.* 


1.அரசு மேல்நிலைப்பள்ளி கருவலூர் -1

2.கே எஸ் சி அரசு மேல்நிலைப்பள்ளி திருப்பூர் -1,

3. அரசு மேல்நிலைப்பள்ளி மங்கலம் -2

4.அரசு மேல்நிலைப்பள்ளி பெரியாயிபாளையம்-1

5. வி கே அரசு மேல்நிலைப்பள்ளி அய்யன்காளிபாளையம் -2

6. சின்னச்சாமி அம்மாள் நகரவை மேல்நிலைப்பள்ளி திருப்பூர் -1

7.நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்-1,

8. அரசு மேல்நிலைப்பள்ளி தெக்கலூர்-1,

9. அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அவிநாசி-1,

10. நகரவை மேல்நிலைப்பள்ளி குமார் நகர் -1,

11. அரசு மேல்நிலைப்பள்ளி இராமச்சந்திராபுரம் -1


 **பாடம் :* 

 *ஆங்கிலம்** 

1. அரசு மேல்நிலைப்பள்ளி உத்தமபாளையம் -1

 2.நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் -1


 **பாடம்* 

 *வேதியியல்** 

 *மொத்த காலிப்பணியிடங்கள் 3** 

1. ஜெய்வாபாய்  மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்

2. அரசு மேல்நிலைப்பள்ளி கணபதிபாளையம்

3. நகரவை மேல்நிலைப்பள்ளி குமார் நகர்.


 **பாடம்:* 

 *இயற்பியல்* 

 *மொத்தக் காலி* *பணியிடங்கள் 3** 

1. அரசு மேல்நிலைப்பள்ளி இடுவம்பாளையம் 2.நகரவை மேல்நிலைப்பள்ளி குமார் நகர்

 3.ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்.


 *பாடம்- வரலாறு* 


 *மொத்த காலி பணியிடங்கள்-4* 

1.ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்

2. அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அவிநாசி

3. அரசு மேல்நிலைப்பள்ளி மொரட்டுப்பாளையம் 4.அரசு மேல்நிலைப்பள்ளி சேயூர்.


 *பாடம்:* 

 *கணிதம்* 

 *மொத்தக் காலிப் பணியிடங்கள் -13* 

1.நகரவை மேல்நிலைப்பள்ளி குமார்நகர்

2. வி கே அரசு மேல்நிலைப்பள்ளி

அய்யன் காளிபாளையம் 

3.அரசு மேல்நிலைப்பள்ளி மொரட்டுபாளையம்


4. நகரவை மேல்நிலைப்பள்ளி பத்மாவதிபுரம்

5.ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் (2)

6.அரசு மேல்நிலைப்பள்ளி இடுவம்பாளையம்(2)

7. சின்னசாமி அம்மாள் நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்

8. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெருமாநல்லூர் 

9.அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குன்னத்தூர் 


10.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேவனூர்புதூர்.


11. பழனியம்மாள் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்



 **பாடம்-* 

 *வணிகவியல்** *மொத்தக் காலிப்பணியிடங்கள்* *2* 

1.நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்

2. அரசு மேல்நிலைப்பள்ளி அனுப்பர்பாளையம்.


 *பாடம்* 

 *பொருளியல்* 

 *மொத்த காலி* *பணியிடங்கள்- 6* 1.நகரவை மேல்நிலைப்பள்ளி குமார் நகர் திருப்பூர்.

2. சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் 

3.அரசு மேல்நிலைப்பள்ளி சரவணபுரம்

4. அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குன்னத்தூர்

5. அரசு மேல்நிலைப்பள்ளி மொரட்டுபாளையம். 

6.அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளகோயில்.


*கன்னியாகுமரி மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்


*தமிழ்*


பளுகல்

கருங்கல்

ஏழுதேசப்பற்று

வடசேரி

மத்தி கோடு

மார்த்தாண்டம் (ஆண்கள்)

அருமனை

முஞ்சிறை


*ஆங்கிலம்*


கொட்டாரம்

திட்டுவிளை

பூதப்பாண்டி

ஆரல்வாய்மொழி

வல்லன் குமாரவிளை

K. தோப்பூர்


*கணிதம்*


கல்குளம்

அருமநல்லூர்

ஒற்றையால் விளை

மாதவலாயம்

கருங்கல்

தோவாளை


*வணிகவியல்*


மத்தி கோடு

அருமனை

அகஸ்தீஸ்வரம்

பூதப்பாண்டி


*பொருளியல்*


முஞ்சிறை


*வேதியியல்*


முஞ்சிறை

தேங்காய் பட்டணம்


*இயற்பியல்*


பூதப்பாண்டி

முஞ்சிறை


*தாவரவியல்*


தோவாளை

அருமனை

தேங்காய் பட்டணம்

வடசேரி

திட்டு விளை


*விலங்கியல் (Zoology)*


முஞ்சிறை


*உயிரியல் (Biology)*


ஆனைக்குழி

கண்ணாட்டு விளை


*வரலாறு*


இல்லை


*இதர பாடங்கள் ஏதும் காலிப்பணியிடம் இல்லை*


*TNHSPGTA*

*குமரி மாவட்டம்*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்