கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Budget 2021 : 15 ஆண்டுகள் நிறைவடைந்த வர்த்தகரீதியான வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கும் கொள்கை...

 


வர்த்தகரீதியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களையும், தனி நபர்கள் பயன்படுத்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களையும் அழிக்கும் அல்லது பயன்பாட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.


மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார்.


கரோனா வைரஸ் பரவல், தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சிக் குறைவு, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் அமைந்துள்ளது.

 

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

 

”காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்கும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன்படி தனிநபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அதற்கு தகுதிச்சான்று பரிசோதனை செய்யவேண்டும்,


அதேபோல, வர்த்தகரீதியான வாகனங்கள் 15 ஆண்டுகளை நிறைவடைந்திருந்தால், அதற்கு தகுதிச்சான்று பெற வேண்டும். பழைய வாகனங்களைத் திரும்பப்பெற்று புதிய வாகனங்கள் சாலையில் ஓட்டும்போது, எரிபொருள் மிச்சமாகும், காற்று மாசு குறையும், சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாமல் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.


முன்னதாக, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ பொதுத்துறை நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்.


இது 2022, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்தத் திட்டம் மத்திய அரசு, மாநில அரசு வாகனங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், இந்தியா மிகப்பெரிய வாகனமுனையாக மாறும். வாகனங்களின் விலையும் குறையும். பழைய வாகனங்களில் இருந்து மறு சுழற்சிக்காக எடுக்கப்படும் பாகங்கள் மூலம் வாகனங்களின் விலை குறையும் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏற்றுமதியாகும்’ எனத் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2021 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?



 நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது – நிர்மலா சீதாராமன்


*மத்திய அரசு மே மாதத்தில் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ தொகுப்பை அறிவித்தது – நிர்மலா சீதாராமன்


மத்திய பட்ஜெட் 2021 – வருமான வரி குறித்து அறிவிப்பு இல்லை 


கொரோனா தடுப்பூசிக்காக ₨35,000 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 3,500 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்


*’ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்’ 130 கோடி இந்தியர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு 


*பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம், ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் ஆகியவை 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமம் 


*11ஆயிரம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும்


*நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்


*நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும் 


*2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்


*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்


*காற்று மாசுவை தடுக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்


இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன – நிர்மலா சீதாராமன்


மேலும் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு


*சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்


*விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது


*வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய அரசு திட்டம்


*Rs.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்


*கடந்த 6 ஆண்டுகளில் மின் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது


*மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்


உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்


சென்னையில் ரூ.63,000 கோடி செலவில் மெட்ரோ 2ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன்


இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்


”2022-க்குள் ஏர் இந்தியா பங்குகள் விற்கப்படும்”


*2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும் – நிர்மலா சீதாராமன்


பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி 


*துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு/49 % இருந்து 74%ஆக உயர்த்தி அறிவிப்பு


*பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு


*இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட திட்டம்


*மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு


2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின்மயமாக்கப்படும்


63,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ இரண்டாம் அலகு திட்டம் செயல்படுத்தப்படும்


* மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்


* பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18,000 கோடி ஒதுக்கீடு


* 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின் மயமாக்கப்படும் 


* கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும் 


* ஜம்மு – காஷ்மீருக்கு பிரத்தியேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும் 


* ரயில்வே துறை – ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு


* இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு


* உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு


* ஆரோக்கியமான இந்தியா


* நல்லாட்சி


* இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு


* அனைவருக்கும் கல்வி


* பெண்களுக்கான அதிகாரம்


* ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய எட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


*மேலும் பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்


*நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.


*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை உருவாக்கப்படும்.


* 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் துவங்கப்படும்.


* நாடு முழுவதும் ஊட்டச்சத்து மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும்.


* அரசின் சொத்துகள் மூலம் வருவாயை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


* இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை துவக்கப்படும்


* 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும்


* பழைய வாகனங்களை திரும்ப பெறும் புதிய கொள்கை


* பழைய மோட்டா் வாகனங்கள் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் காற்று மாசை குறைக்க திட்டம்


* நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப்பணிகள் நடந்து வருகின்றன.


* மேலும், 11,500 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் துவங்கும்


* தமிழகத்தில் 3,500 கி.மீ., புதிய சாலை திட்டத்திற்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு


* தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சாலை திட்டங்கள்


* மதுரையில் இருந்து கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை


* கன்னியாகுமரி – கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை


* மூலதன செலவினங்களுக்காக மாநில அரசுகள், அதிகார அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு


* மும்பை – குமரி இடையே புதிய வழித்தடம் அமைக்க திட்டம்


*பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்தாண்டு ஜூன்22ல் முடிவடையும்


* 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்


* கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டு பணிக்கு ரூ.1,900 கோடி ஒதுக்கீடு


* மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.95 லட்சம் கோடி ஒதுக்கீடு


* எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டம் மேலும் 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்


* மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்


* நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023க்குள் மின்மயமாகும்.


* மின்சார விநியோக்தில் போட்டியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்


* சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 137 சதவீதம்


* பங்குச்சந்தைகளை ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்


* வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு


* காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்கிறது


* அரசு வங்கிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு


* வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ஆக அதிகரிப்பு


* கப்பல் துறையில் உலக நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் போட்டி போட நடவடிக்கை


* பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை


*எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்


* 2 பொதுத்துறை, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும்


* பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது


* வரும் நிதியாண்டில் 100 சைனிக் பள்ளிகள் துவங்கப்படும்


* நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50 சதவீதம் என கணிப்பு


* அடுத்த நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக குறையும்


* அடுத்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.34.50 லட்சம் கோடியாக உயரும்


* சந்தைகளில் இருந்து ரூ.12 லட்சம் கோடி கடன் பெற இலக்கு


* தங்கத்திற்கு இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு


* கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.


* ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்


* உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


* உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்


* செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்


* ரோபோடிக் துறையை மேம்படுத்த திட்டம்


* கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்யேக தளங்கள் உருவாக்கப்படும்


* காஷ்மீருக்கு பிரத்யேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும்.


* நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டம்.


* அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.


* பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.


* லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.


* புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம்.


* சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.


பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் 


நிர்மலா சீதாராமன்

Budget 2021: இந்திய பட்ஜெட் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ..!

 


இந்திய பட்ஜெட் உலகின் மிகப்பெரிய பட்ஜெட். நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை தயாரிக்கிறது.


மத்திய பட்ஜெட் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்


பட்ஜெட் தகவல் 1: மொரார்ஜி தேசாய் பாராளுமன்றத்தில் (Parliament) 10 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். ஒரு நிதி அமைச்சர் தாக்கல் செய்த மிக அதிக அளவிலான பட்ஜெட் எண்ணிக்கை. அடுத்தபடியாக, ப.சிதம்பரம் ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்


பட்ஜெட் தகவல் 2: பட்ஜெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் சிறிய பை என்று பொருள்படும் ‘bougette’ என்பதிலிருந்து உருவானது.


பட்ஜெட் தகவல் 3: முதல் இந்திய பட்ஜெட்டை ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் 1860 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார்


பட்ஜெட் தகவல் 4: சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை திரு.ஆர்.கே.சண்முகம் செட்டி என்பவர் 1947, நவம்பர் 26, அன்று வழங்கினார்.


பட்ஜெட் தகவல் 5: ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட் ஆகியவை 2017 வரை தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன, அதன் பிறகு அவை ஒன்றாக தாக்கல் செய்யப்பட்டன.


பட்ஜெட் தகவல் 6: 2001 இல், அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ​​பட்ஜெட் தாக்கலை காலை 11 மணிக்கு மாற்றினார். 2000 ஆம் ஆண்டு வரை, பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது


பட்ஜெட் தகவல் 7: 2014 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (Arun Jaitely) மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்- 2 1/2 மணி நேரம் உரை நிகழ்த்தினார்.


பட்ஜெட் தகவல் 8: 1955 வரை, மத்திய பட்ஜெட் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. அந்த ஆண்டுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பட்ஜெட் ஆவணங்களை இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் அச்சிட முடிவு செய்தது.


பட்ஜெட் தகவல் 9: 2019 ஆம் ஆண்டில், சீதாராமன் பாரம்பரியமாக பட்ஜெட் ஆவணங்களை பிரீஃப்கேஸில் எடுத்து வருவதற்கு பதிலாக, ரிப்பனால் கட்டப்பட்ட தேசிய சின்னத்துடன் கூட ஒரு சிவப்பு பாக்கெட்டில் கொண்டு வந்தார்.


பட்ஜெட் தகவல்10: பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண்மணி நிதி மந்திரி இந்திரா காந்தி ஆவார். 1970 ஆம் ஆண்டு, அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

BUDGET 2021 : 72 முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு...

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு:

  1. தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படும் (ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம்). தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்
  2. ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும்.
  3. நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.
  4. காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  5. கொரோனா தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது.
  6. சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  7. காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.
  8. ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம்.
  9. வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  10. ரயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  11. முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு.
  12. தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
  13. சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.
  14. இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
  15. அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்.
  16. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 1,18,101 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  17. பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம். இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும்.
  18. நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.
  19. 139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  20. முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  21. பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
  22. வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  23. உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  24. குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது.
  25. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.
  26. நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது.
  27. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளவும், குறைகளைத் தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  28. கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  29. இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன.
  30. எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.
  31. மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்.
  32. அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும்.
  33. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.
  34. விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
  35. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  36. நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
  37. வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு.
  38. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன.
  39. தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  40. வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி
  41. அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
  42. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
  43. அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  44. சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  45. 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
  46. லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.
  47. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.
  48. அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  49. ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.
  50. தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு.
  51. இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.
  52. 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.
  53. ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  54. தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  55. தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
  56. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
  57. நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  58. வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  59. 2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம்.
  60. வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம்.
  61. நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம்.
  62. 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  63. பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
  64. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  65. தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
  66. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.
  67. கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
  68. வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும்.
  69. புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.
  70. பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.
  71. பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு
  72. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு

இன்றைய (02-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். பொழுதுபோக்கு விஷயங்களின் மூலம் கவனச்சிதறல் உண்டாகும். வாகனம் மற்றும் வீடு மாற்றங்கள் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். வேளாண்மையில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : கவனம் வேண்டும்.


பரணி : சிந்தனைகள் தோன்றும்.


கிருத்திகை : இலாபம் உண்டாகும். 

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

எடுத்த காரியங்களில் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். மனைகளில் வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாளுவதன் மூலம் இலாபம் அடைவீர்கள். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் காரியசித்தி உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.


ரோகிணி : எண்ணங்கள் கைகூடும்.


மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் ஏற்படும். கால்நடைகளின் மூலம் இலாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். தானியங்களின் மூலம் பொருள் வரவு மேம்படும். உறவினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும். 


திருவாதிரை : முன்னேற்றமான நாள்.


புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

கடிதப் போக்குவரத்தின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் சில மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூசம் : பொறுமை வேண்டும். 


ஆயில்யம் : தடைகள் நீங்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். எதிர்வாதங்களால் மதிப்புகள் உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.


பூரம் : கவனம் வேண்டும். 


உத்திரம் : மேன்மை உண்டாகும். 

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலில் அபிவிருத்தி செய்வீர்கள். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் : தெளிவு பிறக்கும். 


அஸ்தம் : ஒற்றுமை மேலோங்கும். 


சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும். 


சுவாதி : அனுகூலமான நாள். 


விசாகம் : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். செய்தொழிலில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வசதிகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : ஆதரவான நாள்.


அனுஷம் : மரியாதைகள் அதிகரிக்கும்.


கேட்டை : இலாபம் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஆதாயமான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : தடைகள் குறையும்.


பூராடம் : ஆதாயமான நாள்.


உத்திராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். பயணங்களால் மதிப்புகள் அதிகரிக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். 


திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும். 


அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

உடனிருப்பவர்களை பற்றி நன்கு புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் புதிய முடிவுகளை நிதானமாக எடுக்கவும். எதிர்பார்த்த தனவரவுகளில் இழுபறிகள் உண்டாகும். புதுவிதமான அஞ்ஞான எண்ணங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



அவிட்டம் : புரிதல் ஏற்படும்.


சதயம் : அனுசரித்து செல்லவும்.


பூரட்டாதி : இழுபறிகள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 02, 2021


தை 20 - செவ்வாய்

வெளியூர் தொழில் வாய்ப்புகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய தேடல் உண்டாகும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். தவறிய பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும். 


உத்திரட்டாதி : தேடல் உண்டாகும்.


ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து -அரசு அறிவிப்பு...



அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்:

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.

ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் 
அனைத்தையும் அரசு கைவிடுகிறது - முதலமைச்சர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 
ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் வைத்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை.


இன்றைய செய்திகள் தொகுப்பு... 01.02.2021(திங்கள்)...

🌹மறைத்து பேசுபவரை  நல்லவராகவும்

மனதில் பட்டதை பேசுபவரை கெட்டவராகவும் சித்தரிக்கிறார்கள் இவ்வுலகில்.!

🌹🌹நல்லதே செய் நல்லதே நடக்கும் இது பழமொழி

நல்லதே செய் கெட்டதே நடக்கும் இது புதுமொழி.!!

🌹🌹🌹நம்மை மதிக்காதவர்களை நாமும் மதிக்கக்கூடாது.

அதற்கு மற்றவர்கள் வைக்கும் பெயர் தலைக்கணம் என்றால்,

நாம் வைக்கும் பெயர் தன்மானம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑நேற்று திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்ட முடிவுகள்:

👉1) பிப்ரவரி மாதம் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் மட்டும், 8-02-2021, 9-02-2021, 10-02-2021 ஆகிய மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் ( 72 மணி நேரம்)

👉2)8-02-2021, 09-02-2021, 10-02-2021 ஆகிய மூன்று நாட்களும் அந்தந்த மாவட்டங்களில் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

⛑⛑பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

⛑⛑GO NO : 8 பள்ளிக் கல்வித் துறையில் 4 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

⛑⛑PGTRB - வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம்

⛑⛑131 பணியிடங்களுக்கு 57 ஆயிரம் பேர் போட்டி சி.எம்.டி.ஏ., வேலைக்கு ஏராளமானோர் மோதல்

⛑⛑TNPSC மருத்துவ ஆய்வாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு

⛑⛑தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குப்பதிவு மையம்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

⛑⛑9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் – அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை

⛑⛑நீட் தேர்வில் 75% கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

⛑⛑TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு (முதுகலை ஆசிரியர் – பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

⛑⛑பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் வயது தளர்வாணை  பெற்று தேர்வு எழுதலாம்-திருச்சி CEO PROCEEDINGS

⛑⛑ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கடந்த  நவம்பர் மாதம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன

⛑⛑நடப்பாண்டிற்கான எம்.டெக்., தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக்., பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப் படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

⛑⛑ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாததால் அரசு தொடக்க,  நடுநிலைப்  பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அவதி 

⛑⛑தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை 

⛑⛑தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநிற்றல் மாணவா்களுக்கு மீண்டும் சோ்க்கை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

⛑⛑வாக்குப் பதிவின் போது வாக்குச் சாவடி வாரியாக விவரங்களை தெரிவிக்க தனி செயலி: தோ்தல் ஆணையம் ஏற்பாடு

⛑⛑கல்வி நிறுவனங்கள் திறப்பது உள்பட கொரோனாவை குறைக்காமல் கூடுதல் தளர்வுகள் கூடாது:  கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை                                                                 

⛑⛑ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் "கலை ஆசிரியராக"- பணி மாறுதல் வழங்குதல் 01.01.2021 அன்றைய நிலவரப்படி பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

⛑⛑வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம்

தமிழக அரசு குழுவுடன் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை

சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறும்

பாமக சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்.

பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அரசியல் முடிவை அறிவிப்போம்

பாமக

⛑⛑செய்தது எல்லாம் தவறு என வருத்தம் தெரிவித்து, டி.டி.வி.தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரை அண்ணா தி.மு.க. வில் இணைக்க பரிசீலனை செய்யப்படும்.

கே.பி.முனுசாமி அறிவிப்பு

⛑⛑அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான்,அதனால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது.

சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது,  அதில் எந்த சர்ச்சையும் இல்லை.

அதிமுகவை மீட்டெடுக்க தான் அமமுக தொடங்கப்பட்டது.

டிடிவி தினகரன்.

⛑⛑மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒருவாரம் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்த பிறகு சசிகலா சென்னை திரும்புவார்

டிடிவி தினகரன்

⛑⛑தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்,எங்களது மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்-சரத்குமார்.

⛑⛑தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டுயானைக்குக் காட்டக்கூடாதா? - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி

⛑⛑சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக தொடருகிறது

மதுரை பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு.

⛑⛑ஆறு மாதங்களில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டாம் – இந்திய தேர்தல் ஆணையம்

⛑⛑வரும் 14ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் தமிழக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

⛑⛑அதிமுக - பாஜக கூட்டணி உறுதி. 

நாங்கள் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளோம் நகை எவ்வளவு என பேசி முடிவு செய்வோம்.

- இல.கணேசன் பாஜக மூத்த தலைவர்.

⛑⛑தமிழக அரசால் 14 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

முதல் கட்டமாக 700 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

கரூர், திருச்சி, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் இத்திட்டத்தால் பயன்பெறும்

⛑⛑தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமனம் 

சண்முகம் ஓய்வுபெற்ற நிலையில் ராஜிவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

⛑⛑200 தொகுதிகளை இலக்காக வைத்தேன் தற்போது சூழ்நிலையைப் பார்த்தால் 234 தொகுதிகளும் நாம்தான் வெற்றி பெறுவோம்

பூந்தமல்லியில் நடைபெற்று வரும் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

⛑⛑தமிழகத்தில் பிப்.28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு; பிப்.8 முதல் இளநிலை முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் தொடங்க தமிழக அரசு அனுமதி.

பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகள் மற்றும் விடுதிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

⛑⛑தமிழகத்தில் பிப்.28 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

👉பிப்.8 முதல் அனைத்து கல்லூரி  வகுப்புகள் துவங்க அனுமதி

👉பிப்.8 முதல் 9,11 வகுப்புகள் துவங்க அனுமதி

👉பெட்ரோல் பங்குகள் நேரக் கட்டுப்பாடு இன்றி இயங்கலாம் 

👉நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி

👉திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி.

⛑⛑ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் சண்முகத்துக்கு அரசு ஆலோகசகராக புதிய பதவி நியமித்து அரசாணை வெளியீடு.

⛑⛑அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும்; இது சட்டத்திற்குப்  புறம்பானது.                      - மாண்புமிகு அமைச்சர் திரு.  ஜெயக்குமார் அவர்கள்.

⛑⛑எல்லா சாதியும் இட ஒதுக்கீடு கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும், இதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

-பிரேமலதா பேட்டி

⛑⛑இந்தியாவில் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்குகிறது 14வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

⛑⛑அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது.பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் 

- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

⛑⛑கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் 

- விழுப்புரத்தில் அமைச்சர் CV.சண்முகம் பேச்சு.

⛑⛑அதிமுகவிற்கு தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் தேவை சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் - கே.சி.பழனிசாமி

⛑⛑பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

⛑⛑யூ.டி.எஸ்.(UTS) செயலி மூலம்  டிக்கெட் எடுக்கும் முறை சென்னை புறநகர் ரயில்களுக்கு  இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது

⛑⛑திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நினைவுப் பரிசாக வேல் மற்றும் முருகன் சிலை வழங்கப்பட்டது.                                                                 

⛑⛑தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசாக, திமுக அரசு விரைவில் அமைந்திடும்; தேர்தல் பரப்புரையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.

⛑⛑தேமுதிக இடம்பெறும் அணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்; கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்.

⛑⛑சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக

நடத்துவது குறித்த அரசியல் கட்சிகளின்

கோரிக்கை; தேர்தல் ஆணையம் முடிவு

செய்யும் என சத்யபிரதா சாகு தகவல்.

⛑⛑வரலாற்றிலே முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

⛑⛑அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

⛑⛑ஜனவரி மாத இறுதி வரை, சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி வசூல் ரூ.119847 கோடியை தாண்டியுள்ளது.

⛑⛑சையது முஸ்தாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு.

இறுதிப்போட்டியில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்று இரண்டாவது முறை கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு அணி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...