கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தடுப்பூசிக்கு கட்டாயப்படுத்த கூடாது ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்...

 


தேர்தல் பணி விலக்கு கோரும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் அணுகலாம்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு...

 


தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்ட் - கலெக்டர்கள் நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி...

 தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 26. தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.



இதனால் அனைத்து  மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வருவாய் துறை அலுவலர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில் காலி பணியிடம், பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவாற்றல் தேர்தல் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள எண்ணிக்கையில் ஒப்பந்த உதவியாளர்கள், டைப்பிஸ்டுகள், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியிடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள்  நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது.


இவ்வாறு நியமிக்கப்படும் இளநிலை உதவியாளர்கள், டைப்பிஸ்டுகளுக்கு ரூ. 14 ஆயிரத்து 640ம், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் ரூ. 9,664ம் ஊதியமாக வழங்கலாம். இவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலமும், 2 முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்து விண்ணப்பங்களை வரவேற்றும் தற்காலிக பணி நியமனம் செய்து கொள்ளலாம். 


இதற்கான ஊதியத்தை குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். நிதித்துறையின் அனுமதி பெற்று இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என  தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.



2021 பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு நகல்...

 


Copy of the order of the Madras High Court (Madurai branch) regarding the 2021 promotion Counselling...

>>> Click here to Download...

தமிழில் படித்தால்தான் வேலை என்பதால் அரசுப்பள்ளிகளில் உயர்கிறது மாணவர் எண்ணிக்கை - கல்வியாளர்கள் வரவேற்பு...

 


பரீட்சைக்கு பயமேன் (Pariksha Pe Charcha) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தமிழில்...

 


>>> பரீட்சைக்கு பயமேன் (Pariksha Pe Charcha) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தமிழில் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர்களுக்கு புகைப்படம், QR கோடுடன் கூடிய அடையாள அட்டை - படிவம்...

 Teachers ID Card Form- PDF FILE...



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21 ம் கல்வியாண்டில் Project Innovations ( Elementary , Secondary & Hr.Secondary ) எனும் தலைப்பின்கீழ் மாவட்டத்திலுள்ள அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு புகைப்படம் , QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட ஆண்டு வரைவு திட்டத்தில் திட்ட ஏற்பளிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது . எனவே , அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். வட்டார வளமையத்தின் மூலமாக பெறப்பட்ட படிவத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அடையாள அட்டை இல்லாத ஆசிரியர்களிடம் வழங்கி , அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து , தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கூடிய பிரதியை தங்கள் பள்ளி சார்ந்த வட்டார வளமையத்தில் வழங்குதல் வேண்டும்.


பள்ளிவாரியாக பெறப்பட்ட படிவங்களை ஒன்றியவாரியாக தொகுத்து , தனிநபர் வாயிலாக இவ்வலுவலகத்தில்  வழங்குமாறு அனைத்து வட்டார வளமைய ( பொ ) மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் , ஆசிரியர்களுக்கு படிவம் வழங்கும்போது , புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , பணிமாறுதலில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் , பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பழுதடைந்த அட்டையை புதுப்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி , இப்பணியினை மேற்கொள்ளவேண்டும் என அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



>>> படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...