கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளிகளின் சுவர்களை அசிங்கப்படுத்தாதீங்க - தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை...

 தேர்தலுக்கு முன் அழகாக காட்சியளிக்கும் பல பள்ளிகளின் சுவர்கள், தேர்தலுக்கு பிறகு, அசுத்தமடைவதால், வாக்குச்சாவடி மையங்களில், டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், வரும் 6ம் தேதி நடக்கிறது.

ஆளும், எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பிற கட்சிகளும், கூட்டணி அமைத்து, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகின்றன. பொதுக்கூட்டங்களால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட, ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஓட்டுச்சாவடி மையங்களாக அறிவிக்கப்படவுள்ள பள்ளிகள், தேர்தலுக்கு முன், பின் என்ற இருவேறு கோணங்களில் சந்திக்கவுள்ள மாற்றங்கள் குறித்து, ஆசிரியர்கள் பல்வேறு கருத்துகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஓட்டுச்சாவடி மையமாக உள்ள பள்ளியில், வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய நோட்டீஸ், அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண், வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் என கிட்டத்தட்ட, 30க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படுவது வழக்கம்.

தேர்தலுக்கு முந்தைய தினம், இரவு இப்பணிகள் நடப்பதால், வகுப்பறை உள்ளே, வெளியே என, எங்கு பார்த்தாலும், நோட்டீஸ்மயமாகவே காட்சியளிக்கும்.தேர்தலுக்கு பின், இதை நீக்கும் போது, சுவர்கள் அசுத்தமாவதோடு, பெயின்ட், பாடத்திட்டம் சார்ந்த படங்கள், எழுத்துக்களும் அழிந்து விடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இச்சுவர்களை மீண்டும் அழகாக்க, உரிய ஆசிரியர்களே மெனக்கெட வேண்டியிருக்கும் எனவும், ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.பல கோடி ரூபாய் தேர்தல் பணிகளுக்காக, செலவிடும் தேர்தல் ஆணையம், இச்சிக்கலுக்கு மாற்றுத்தீர்வு காண வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

ராக்கிப்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை கோமதி கூறுகையில், ''எங்கள் பள்ளி முழுக்க, மாணவர்களை கவரும் வகையில், பாடத்திட்ட கருத்துகளை வரைந்து, வண்ணமயமாக்கி உள்ளோம். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், வகுப்பறை சுவர்கள் பெயின்ட் உரிந்த நிலையில், அசுத்தமாகி விடுகின்றன. இதை புதுப்பிக்க, மீண்டும் செலவு செய்வது வாடிக்கையாகி விட்டது.

இதற்கு பதிலாக, டிஜிட்டல் போர்டு வைக்க தேர்தல் ஆணையம் முன்வரலாம். ஒருமுறை இதை கொள்முதல் செய்தால், அடுத்தடுத்த தேர்தல் பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.அரசுப்பள்ளிகளின் மீது நிஜமான அக்கறை கொண்ட, மாவட்ட தேர்தல் ஆணையரான நமது கலெக்டர், இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலிக்கலாமே! 


(ஓட்டுச்சாவடி மையமாக உள்ள பள்ளியில், வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய நோட்டீஸ், அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண், வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் என கிட்டத்தட்ட, 30க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படுவது வழக்கம்.)

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு...

 


பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலமாக பல்கலை தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகள் வெளியீடு: சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. 1997 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தொடக்கத்தில் வணிகவியல், புவி அமைப்பியல், கணிதம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வந்தன. தற்போது அதில் 20க்கு மேற்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்புகள் உள்ளன.


இந்நிலையில் பல்கலைக்கழக தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன. இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020 ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


கொரோனா காரணமாக இந்த முடிவுகள் வெளியிட காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை எழுதி காத்திருக்கும் மாணவ, மாணவிகள் முடிவுகளை www.periyaruniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையத்தில் காணலாம்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு...



 அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்விஆண்டில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. 


இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் உறுதியளித்தது. 


இந்நிலையில், எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உயிரி தொழில்நுட்ப வியல் பிரிவில் 3 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேநேரம், கணக்கீட்டு தொழில்நுட்பம் பிரிவில் தகுதியான மாணவர்கள் (EWS பிரிவு) யாரும் இல்லாததால் அதில்இடங்கள் எதுவும் ஒதுக்கப்பட வில்லை.


விதிமீறல்

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவது விதிமீறல்.


தமிழகத்தில் மிகவும் குறை வான எண்ணிக்கையில் இருக்கிற, இடஒதுக்கீட்டில் வராத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பிற பிரிவு மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும். இதை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றனர்.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைப்படிதான், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வருகிறது. எனவே, இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்றனர்.

விருப்ப மனு கொடுத்த ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய பட்டியல் தயாரிப்பு...



 சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், விருப்ப மனு கொடுத்த ஆசிரியர்களின் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வில் விருப்ப மனு அளித்து, நேர்காணலுக்கு சென்ற வேளாண் துறை பெண் அலுவலர் திலகவதியை, வேளாண் துறையில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் ஊழியர்களில் யாராவது, தேர்தலில் போட்டியிட, கட்சிகளிடம் விருப்ப மனு அளித்துள்ளனரா என, விசாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர், தி.மு.க.,வில், 'சீட்' கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், தனி நபர்கள், தி.மு.க., நிர்வாகிகளின் உறவினர்கள் என, பல தரப்பட்ட ஆசிரியர்கள், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் பெயர்; அவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளின் பட்டியல், தேர்தல் செலவுக்கு தேவைப்படும் பொருளாதாரத்தின் பின்னணி குறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் உளவுத்துறை தரப்பில் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.


இந்த விபரங்களின் அடிப்படையில், அரசு வேலையில் இருந்து கொண்டே விதிகளை மீறி அரசியலில் ஈடுபட்டதாக, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 10.03.2021 (புதன்)...

 


🌹நம்மை பிடித்துவிட்டால்,                                         நாம் என்ன பேசினாலும் ரசிப்பார்கள்.

நம்மை பிடிக்காவிட்டால் நாம் எப்படி பேசினாலும் வெறுப்பார்கள்.

இதுதான் மனித இயல்பு.!

🌹🌹மனசு காயப்பட்டால் பிடித்தவர்களிடம் ஆறுதல் தேடலாம்.

ஆனால் பிடித்தவர்களே காயப்படுத்தினால் 

யாரிடம் ஆறுதல் தேடுவது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑உலகத்தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் மூன்று இடத்தை பிடித்துள்ளது.

⛑⛑அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

⛑⛑கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்..

தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில் தந்துள்ளது

⛑⛑புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

⛑⛑2016ம் தேதி முதல் 2019ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

⛑⛑தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் (1 முதல் 5ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்கிற கேள்வி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. கடைசி ஒரு மாதமாவது பள்ளியை திறக்க கோரிக்கை. 

⛑⛑கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. தேர்வுத் தாளில் சினிமா பாடலை எழுதிய மாணவனின் பெற்றோரை ஆசிரியர் அழைத்து வர சொன்னதால்  விபரீத முடிவு எடுத்துள்ளார்.

⛑⛑விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

⛑⛑ஒரே பதவியில் தேங்கி நிற்கும் ஊழியர்களுக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு - 30 ஆண்டுகளிலிருந்து 40 ஆண்டுகளாக உயர்வு அரசாணை வெளியீடு

⛑⛑27.04.2020-க்கு பிறகு EL சரண்டர் விடுப்பை அரசுக்கு ஒப்படைத்து ஆணை பிறப்பித்து ஆனால் பணமாக பெற்றுக் கொள்ள நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவற்றை மீண்டும் அனுமதித்து பணமாக பெற்றுக் கொள்ள அரசாணை வெளியீடு GO NO:12நாள்:8.03.2021.                                                                       

⛑⛑முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு

⛑⛑மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

⛑⛑SGT,BT,PG ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணை வெளியீடு.       

⛑⛑ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!(அரசாணை எண் 58 முதல் 92 முடிய 80 பக்கங்கள் கொண்ட தொகுப்பு)

⛑⛑அரசாணைகள் எண்: 58 முதல் 67 & 74, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑அரசாணைகள் எண்: 68 முதல் 75 (74 தவிர), நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑அரசாணைகள் எண்: 76 முதல் 85, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑அரசாணைகள் எண்: 86 முதல் 92, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑மதவாத சக்திகளுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், கூட்டணியில் இருந்து விலகல்,

திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு

இந்திய தேசிய லீக் கட்சி

⛑⛑என் மீது இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்த பாஜக-வினர் திட்டமிட்டு சதி முயற்சி. மேலும் நான் 100 % இந்துப் பெண்ணாக இருந்தாலும் அனைத்து மக்களையும் நேசிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

⛑⛑திமுக-கொமதேக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் கொமதேக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.                                                                                                                                            

⛑⛑தேமுதிகவிற்கு வாழ்வா சாவா என்ற நிலையில் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது.

சின்னத்தையும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியிலும் தங்களை தக்கவைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது.

⛑⛑புதுவை என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள்; பாஜக - அதிமுகவுக்கு 14 இடங்கள்:

ரங்கசாமி

⛑⛑குடும்பத்  தலைவிகளுக்கு உரிமை தொகை அறிவித்தது பற்றி எடப்பாடி கூறுவது பச்சை பொய் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடும்பத்  தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை என்ற திமுகவின் அறிவிப்பு பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரவேற்பு பற்றி உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட எடப்பாடி ரூ.1,500 அறிவித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்                                                        

⛑⛑திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவருக்கு 55 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் – ஈரோடு பக்தர் உபயம்

⛑⛑காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2014ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்ற போது LPG சிலிண்டரின் விலை ரூ 410. இன்று விலை ரூ 820. திரு மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது!, என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

⛑⛑திமுக ஆதரவு திரும்பப் பெறப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை;

 அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை செயற்குழுவில் முடிவெடுக்கப்படும்! - 

தமிமுன் அன்சாரி பேட்டி.

⛑⛑டெல்லி எல்லையில் 105-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 105 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்                                         

⛑⛑முதல்வர் அவர்களே நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? என அற்புதம் அம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

30 மாதங்களுக்கு முன் இதேநாள்  அமைச்சரவைகூடி விடுதலை தீர்மானம் நிறைவேற்றியதாக தமிழகஅரசு அறிவித்தது. கடந்த ஜனவரி 25ம் தேதி அந்த தீர்மானம் செல்லாது என்றார் ஆளுநர். கொள்கை முடிவு எனசொல்லும் முதல்வர் அவர்களே இது குறித்து எடுத்த சட்டநடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

⛑⛑கேஸ் விலையை குறைக்க முடியாத முதல்வர் இலவச சிலிண்டர் கொடுப்பாரா?

வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்துகொண்டு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி 

டிடிவி தினகரன் பேட்டி

⛑⛑வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

️⛑⛑சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் ரூ.4,183ஆக உள்ளது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

⛑⛑குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம் 

தடுப்பூசி போட்டு கொண்டபின் ஸ்டாலின்

⛑⛑நாம் கடைக்கு சென்று காய் வாங்கும் போது, கத்திரிகாய் நல்லதா? முத்துனதா? என பார்த்து வாங்குகிறோம். 

அதே போல,அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும்

கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி

⛑⛑ICC-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தேர்வு.

⛑⛑திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.

174 தொகுதியில் போட்டியிடும் திமுக 

உதயசூரியன் சின்னம் 187 தொகுதியில் களம்காண உள்ளது.

கூட்டணியில் பார்வர்ட் பிளாக் அல்லது வேறு கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் போட்டியிடும் தொகுதியில் எண்ணிக்கை குறையும்.

⛑⛑சென்னை அதிமுக தலைமையகத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உடன் பாஜக. குழு சந்திப்பு; பாஜக போட்டியிடும் தொகுதிகள் வெளியாக வாய்ப்பு.

அதிமுக அலுவலகத்தில் அதிமுக- பா.ஜ.க தலைவர்கள் ஆலோசனை.

பா.ஜ.க.வுக்கு ஏற்கனவே 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற பா.ஜ.க முயற்சி.

⛑⛑கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது: டிடிவி தினகரன்

⛑⛑கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம். கோவை அருகே தமிழக கேரள எல்லையில் இருக்கும் 13 சோதனை சாவடிகளில் காண்காணிப்பு தீவிரம்.

⛑⛑மக்கள் மத்தியில் துணை முதலமைச்சருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது

வரும் தேர்தலில் அ.தி.மு.க-பாஜக கூட்டணி வெற்றி பெறும்

-பொன். ராதாகிருஷ்ணன்

⛑⛑அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார்.

எல்.கே.சுதீஷ்

👉சாணக்கியனாக இருந்தது போதும், இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது  

அதிமுகவுக்கு தான் இனி இறங்கு முகம்; அதிமுகவின் தலைமை தான் சரியில்லை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

👉அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு.

👉தேமுதிகவுக்கு நேற்று தான் தீபாவளி- அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்- துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ்

👉செல்வாக்கான, வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளர் பட்டியலை மாவட்ட வாரியாக உடனே தயார் செய்க

தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சி தலைமை அவசர உத்தரவு

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் தகவல்.

👉அதிமுக தேமுதிகவை மதிக்கவில்லை.

நாம் கெஞ்சிக் கொண்டிருக்க அவசியமில்லை. எடப்பாடி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் பழனிசாமியில் டெபாசிட் கூட வாங்க முடியாது

தேமுதிக  முன்னாள் பொருளாளர் இளங்கோவன்.

👉சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல விஜயகாந்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டனர் -தேமுதிக தொண்டர்கள்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியிருப்பது நல்ல விஷயம்  

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்ததே தேமுதிகவின் தயவில் தான் 

- விஜயபிரபாகரன்

👉மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைக்க மாட்டோம்.  அரசியலில் நாங்கள்தான் சீனியர் அதனால் தெய்வத்துடன் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி;  தனித்தே 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் - விஜயபிரபாகரன் பேச்சு

⛑⛑நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துக்கட்ட முடியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையிலேயே மவுனமாக இருக்கிறோம்.தேமுதிக பலம் கடந்த தேர்தலிலேயே  தெரிந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அந்த கட்சிக்கே பாதிப்பு.

எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் கூறினார்.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை என குடும்பத் தலைவியரே கேட்பர்: ஸ்டாலின்

👉மார் 09,2021

தினமலர்

👉சென்னை: குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1,500 மற்றும் ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் தருவதாக அதிமுக அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 'பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை என குடும்பத் தலைவியரே கேட்பார்கள்' என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டத்தை முதன்மை செயலர் கே.என்.நேரு வெறறிகரமாக நடத்திக் காட்டிவிட்டார். திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரள்வதும் தெரிகிறது. குடும்பத் தலைவியருக்கு மாதம்தோறும் ரூ.1,000 'உரிமைத் தொகை' என அறிவித்தேன். உடனே, அடிமை அதிமுக ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவியருக்கு ரூ.1500, சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள்.

பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?

குடும்பத்தலைவியரே இதனை கேட்பார்கள். அவர்களிடம் தமிழகம் இனியும் ஏமாறத் தயாராக இல்லை. ஓயாது உழைப்போம்; இலக்கை நோக்கி ஒன்றுபட்டு உழைப்போம். தேர்தல் களத்தில் வெற்றிச் சிகரத்தை காண்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய (10-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனம் மற்றும் மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அஸ்வினி : சுறுசுறுப்பான நாள்.


பரணி : மேன்மை உண்டாகும்.


கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : மரியாதைகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. எந்தவொரு வேலையையும் மேற்கொள்ளும் பொழுது தேவையற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : விரயங்கள் உண்டாகும்.


திருவாதிரை : பேச்சுக்களை குறைக்கவும்.


புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆதரவான பணிகளை செய்து மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


பூசம் : மனம் மகிழ்வீர்கள்.


ஆயில்யம் : பாராட்டுகள் கிடைக்கும். 

---------------------------------------




சிம்மம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

பணியில் பொறுப்புகள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த இடைவெளிகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : பொறுப்புகள் குறையும்.


பூரம் : முயற்சிகள் ஈடேறும்.


உத்திரம் : நன்மை உண்டாகும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொருட்சேர்க்கை ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : மேன்மையான நாள்.


அஸ்தம் : அமைதி உண்டாகும்.


சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

வியாபாரத்தில் பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கால்நடைகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மூட்டு மற்றும் முதுகு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தடைகள் அகலும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : கவனம் வேண்டும்


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : இடமாற்றம் உண்டாகும்.


அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


கேட்டை : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். அவ்வப்போது பழைய நினைவுகள் மற்றும் பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : வாதங்களை தவிர்க்கவும்.


உத்திராடம் : மனவருத்தங்கள் நேரிடும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : மாற்றங்கள் பிறக்கும்.


அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : ஒற்றுமை உண்டாகும்.


சதயம் : தெளிவு கிடைக்கும்.


பூரட்டாதி : காலதாமதங்கள் குறையும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 10, 2021


மாசி 26 - புதன்

பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மன்றம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...