கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (13-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்



மேஷம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி


உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் மேம்படும். செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : ஆதரவான நாள்.


பரணி : முன்னேற்றம் உண்டாகும்.


கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் தொடர்பான நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : கலகலப்பான நாள்.


ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

அரசாங்கத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறிது மந்தமான நிலை உண்டாகும். தடைகளும் சில நேரங்களில் சாதகமாகும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.


திருவாதிரை : மந்தமான நாள்.


புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.


பூசம் : விமர்சனங்கள் நேரிடும்.


ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------




சிம்மம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனோதைரியம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : மனோதைரியம் உண்டாகும்.


உத்திரம் : ஆதாயமான நாள். 

---------------------------------------




கன்னி

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபடும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.


அஸ்தம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

விளையாட்டுகளில் விழிப்புணர்வு வேண்டும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.


சுவாதி : திருப்திகரமான நாள்.


விசாகம் : ஒற்றுமை மேம்படும். 

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புது வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவாலான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


கேட்டை : வெற்றி கிடைக்கும். 

---------------------------------------




தனுசு

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தோன்றக்கூடிய எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


பூராடம் : முயற்சிகள் மேம்படும்.


உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத சில பொருட்களின் மூலம் வரவுகளும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : வரவுகள் மேம்படும்.


அவிட்டம் : மாற்றங்கள் பிறக்கும். 

---------------------------------------




கும்பம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்விற்கான சுபச்செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் புதிய பயணங்களும், அனுபவ வாய்ப்புகளும் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கண்பார்வை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


சதயம் : அனுபவம் கிடைக்கும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 13, 2021


மாசி 29 - சனி

எதிலும் விரைவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் மாறுபடும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.


உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.


ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------

மாதிரி வாக்குப் பதிவு குறித்த நடைமுறைகள்...


 >>> மாதிரி வாக்குப் பதிவு குறித்த நடைமுறைகள் (Mock Poll Instructions)...


Ballot Unit, Control Unit, VVPAT – M3, Paper Seal, Strip Seal பொறுத்துதல் மற்றும் மண்டல அலுவலர்கள் (Zonal Officers) கையேடு...


>>> Ballot Unit, Control Unit, VVPAT – M3 (Voter Verifiable Paper Audit Trail), Paper Seal, Strip Seal பொறுத்துதல் மற்றும் மண்டல அலுவலர்கள் (Zonal Officers) கையேடு...




12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 16.04.2021முதல் 23.04.2021வரை நடத்தப்பட உள்ளது...

 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 16.04.2021முதல் 23.04.2021வரை நடத்தப்பட உள்ளது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...


>>> அரசுத் தேர்வுகள் இயக்கக அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பாட வல்லுநர் தொகுப்பு உருவாக்குதல் - ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பி வைக்கக் கோரி SCERT இணை இயக்குநர் உத்தரவு...


 >>> பாட வல்லுநர் தொகுப்பு உருவாக்குதல் - ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பி வைக்கக் கோரி SCERT இணை இயக்குநர் உத்தரவு...


தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

 


ஐரோப்பாவில் டென்மார்க் , ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு தற்காலிக நிறுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாமே? ஏன்?

 


ஐரோப்பாவில் டென்மார்க் , ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு தற்காலிக நிறுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாமே? ஏன்? 

இது குறித்து எனது  விரிவான விளக்கம் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


டென்மார்க் நாட்டில் ஆஸ்ட்ரா செனிகா/ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் முப்பது லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுள் 22 பேருக்கு அசாதாரண ரத்த உறைதல் ஏற்பட்டிருப்பதாகவும், 

அவர்களுள் ஒருவர் மரணமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் முகமை  எடுத்துரைத்தது. 


இதனை கருத்தில் கொண்டு அந்நாடு வருகிற 14 நாட்களுக்கு AZD1222 தடுப்பூசி வழங்குதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி( TEMPORARY SUSPENSION)  வைத்து , நிகழ்ந்த இந்த ரத்த உறைதல் சம்பவங்களுக்கும் தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அறிய ஆணை பிறப்பித்துள்ளது.


TEMPORARY SUSPENSION/ ENQUIRY  என்பது சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தால் காவல் துறையினர் ACQUIST என்பார்களே அது போன்று என்று கருத்தில் கொள்ள வேண்டும். 


சந்தேகத்தின் பேரில் வழக்கு தொடுத்து கைது செய்து விசாரிப்பார்கள். பிறகு நீதி விசாரணை நடைபெறும். அதன் பிறகு தீர்ப்பு ÇONVICT என்று வந்தால் தான் அவர் குற்றவாளி ஆகிறார். எனவே AZD1222 தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நிரந்தநமாக தடை செய்து விட்டது என்று செய்தி பரவினால் அதை ஒதுக்கி விடுங்கள். அது புரளி. 


டென்மார்க்கை தொடர்ந்து  ஐஸ்லாந்து , நார்வே ஆகிய நாடுகளும் தற்காலி நிறுத்த ஆணை பிறப்பித்துள்ளன 


மொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஐம்பது லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு இதுவரை 30 ரத்த உறைதல் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ கட்டமைப்பும் சரி.. அவர்கள் பக்கவிளைவுகளை பதிவு செய்து பராமரிக்கும் முறையும் சரி மிகவும் சிறப்பானது. 

எனவே அந்த நாடுகளில் இத்தகைய பக்கவிளைவுகள் துல்லியமாகக் கண்டறியப்படுவதில் வியப்பேதுமில்லை. 


இதய ரத்த நாள அடைப்பு 

மூளை ரத்த நாள அடைப்பு 

நுரையீரல் ரத்த நாள அடைப்பு 

கால்களின் ஆழ் சிறை அடைப்பு 

போன்றவை அதீத ரத்த உறைதலால் நிகழ்பவை. 


ஆயினும் ஒரு நாட்டில் மேற்சொன்ன நிகழ்வுகள் தடுப்பூசி போடப்படாத சூழ்நிலையிலும் கூட  அனுதினமும் முதியோர்களுக்கு, 45+ மக்களுக்கு நடந்தேறி வருகின்றன. 


உதாரணம் கூறுகிறேன் 


அதாவது ஒரு நாட்டில் ஒரு வருடத்தில் மொத்தம் 3650 பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்று கடந்த ஐந்து வருட ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்றால் 


அங்கு சராசரியாக தினமும் 10 பேர் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று அர்த்தம் 


அந்த பத்து பேரில் 5 பேர் 65+ வயதினர் 

3 பேர் 45+ வயதினர் 

2 பேர் 45 வயதுக்குள் என்று ஆவணங்கள் கூறினால் அதை ஒரு பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். 


இதை Normally  Expected Events என்போம். 


மற்றொரு பக்கம், தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட மருந்து வழங்கப்பட்டவர்களில் நிகழ்ந்துள்ள மொத்த மரணங்கள் எவ்வளவு? என்று பார்க்க வேண்டும்


தடுப்பூசி வழங்கப்பட்ட மக்கள் தொகையில் மாரடைப்பு மரணங்கள் நிகழ்கிறது என்றால் அந்த மரணங்களை ஆய்வுக்குட்படுத்தி அவை முதலில் தடுப்பூசியின் நேரடி விளைவால் நடந்தவை தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும்

 

இதற்கு மருத்துவ ஆய்வு / பிரேதக்கூறாய்வு போன்றவை துணை நிற்கும். 


அதற்கடுத்த படியாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் நிகழ்ந்த மரணங்கள் ஏற்கனவே அந்த நாட்டில் ஏற்படும் EXPECTED DEATHS தை தாண்டுகின்றனவா? என்று பார்க்க வேண்டும். 


அவ்வாறு தடுப்பூசி பெறப்பட்டவர்களில் அதிகமாக மரணங்கள் நிகழ்வு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த தடுப்பூசி தடை செய்யப்படும். இதை EXCESS DEATHS THAN EXPECTED என்று கூறுவோம்.


டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியனின் சில நாடுகள் சேர்த்து 50லட்சம் டோஸ்களில் 30 ரத்த உறைதல் சம்பவங்கள்  நிகழ்ந்துள்ளன.  இது அந்நாடுகளின் Expected events அளவுக்குள் தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.  


அதற்கடுத்த படியாக தடுப்பூசிக்கும் இத்தகைய விளைவுகளுக்கும் தொடர்பு உள்ளனவா என்பதை அறிய CAUSALITY ANALYSIS செய்யப்படும் 


அதில் இந்த தடுப்பூசியை வழங்கும் ஏனைய நாடுகளில் இது போன்ற விளைவுகள் தோன்றுகின்றனவா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


இதுவரை இந்தியாவில் இரண்டரை கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது 

ஆயினும் ஓரிரு இடங்கள்  தவிர்த்து 

தடுப்பூசியினால் தொடர்ந்து கொத்து கொத்தாக மக்கள் தீவிர பக்க விளைவுகளுக்கு உள்ளானார்கள் என்று செய்தியில்லை.  அதுவே உண்மையும் கூட. 


இந்தியாவில் கோவிஷீல்டு / கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதிக பட்சம் தலைவலி, காய்ச்சல், கைகால் வலி மட்டுமே அறுதிப்பெரும்பான்மை பேருக்கு ஏற்படுகின்றது.


எனவே இந்திய மக்கள் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதைப் பார்த்து அச்சப்படத்தேவையில்லை.  


மேற்சொன்ன அனைத்து ஆய்வுகளையும் வட சிறந்த ஆய்வு 


RISK Vs BENEFIT ANALYSIS 


அதாவது ஒரு செயலை செய்வதால் ஏற்படும் தீமை 

அதை செய்யாமல் விட்டால் அடையும் தீமையை விட குறைவாக இருந்தால் 

அந்த செயலை செய்யத்தான் வேண்டும். 


ஹெல்மெட் போட்டு நீண்ட தூரம் பைக் ஓட்டினால் தலை முடி கொட்டுகிறது. 

தலைவலி வருகிறது.

ஆனால் இந்த தீமைகளை கருத்தில் கொண்டு ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டி அடிபட்டால் தலையில் பலத்த காயம் பட்டு மரமணடையும் தீமை நடக்கலாம். 


அதே போல 

கொரோனா தடுப்பூசி பெறுவதால் 

ஏற்படும் காய்ச்சல் / உடல் வலி போன்ற சிறு தீமைகளை பொறுத்துக்கொள்வது 


தீவிர கொரோனா ஏற்படுவது 

கொரோனா மரணங்கள் ஏற்படுவது போன்ற பெருந்தீமைகளில் இருந்து காத்துக்கொள்ளத் தான் என்ற எண்ணம் வேண்டும்.


மீண்டும் இரண்டு வாரங்களில் அந்த நாடுகள் ஆய்வை முடித்து மீண்டும் AZD1222 தடுப்பூசியை வழங்கும் பணிகளை தொடரும் என்றே எதிர்பார்க்கிறேன்.  


இந்தியாவில் வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிக்கும் தற்போது வரை பாதுகாப்பு தன்மை மிக்கவையாகவே ஆய்வு முடிவுகளின் படியும் கடந்த இரண்டு மாத கால அனுபவங்களின்படியும் விளங்குகின்றன. 


எனவே, அச்சமின்றி தடுப்பூசி பெற முன்வாருங்கள் 


அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று இலவசமாக தடுப்பூசியை பெற்றிடுங்கள்.  


நன்றி  


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? Teacher stabbed to death in government school near Thanjavur - what is t...