கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (18-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஏப்ரல் 18, 2021



தம்பதியர்கள் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்நியர்களின்  நட்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.


பரணி : வெற்றி கிடைக்கும்.


கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 18, 2021



நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அனுபவ அறிவால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


ரோகிணி : மேன்மை உண்டாகும்.


மிருகசீரிஷம் : அறிவு மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 18, 2021



தெய்வப்பணிகளில் ஈடுபட்டு மனத்தெளிவு பெறுவீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் லாபகரமான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : தெளிவான நாள்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும்.


புனர்பூசம் : லாபகரமான நாள். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 18, 2021



வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். பதவி உயர்விற்கான சூழல் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : சிந்தனைகள் தோன்றும்.


பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.


ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 18, 2021



வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


பூரம் :  வாய்ப்புகள் உண்டாகும்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 18, 2021



வியாபார முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : கலகலப்பான நாள்.


சித்திரை : தடைகள் அகலும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 18, 2021



தர்ம காரியங்களை செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் பல புதிய மாற்றங்களினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



சித்திரை : தீர்வு கிடைக்கும்.


சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.


விசாகம் : சாதகமான நாள். 

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 18, 2021



வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து கொள்வதன் மூலம் குழப்பங்கள் மறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.


கேட்டை : குழப்பமான நாள். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 18, 2021



போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனைவியின் மூலம் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : வெற்றி கிடைக்கும்.


பூராடம் : பொருள் வரவு உண்டாகும்.


உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 18, 2021



நெருக்கமான உறவினர்களுக்காக சில செயல்களை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் இருக்க வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த சில பொருட்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : கற்பனைத்திறன் அதிகரிக்கும்.


அவிட்டம் :  அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 18, 2021



மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய ஆராய்ச்சி பற்றிய எண்ணங்கள் தோன்றும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


சதயம் : இடமாற்றம் உண்டாகும்.


பூரட்டாதி : கலகலப்பான நாள்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 18, 2021



உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


உத்திரட்டாதி : எதிர்ப்புகள் மறையும்.


ரேவதி : சாதகமான நாள்.

---------------------------------------


(SBI) நிலையான வைப்புத்தொகை மீது- கடன் பெறுவது எப்படி ?

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உடனடி பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிலையான வைப்புத் தொகையின் மீது கடன் வழங்குகிறது.வட்டி விகிதங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் நாம் பொதுவாக நம் பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால் சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. இத்தகைய அவசர காலங்களில் நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகிய கால கடனை பெற முடியும். 



நிலையான வைப்புத் தொகையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்பிஐ (SBI)வங்கியில் அவ்வாறு கடன் பெற, வங்கி கிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தை நிரப்பித் தர வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். அதே சமயம் இந்த தொகையானது நம்முடைய வைப்புத்தொகையில் 90 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


நிலையான வைப்புத்தொகை மீது எப்படி கடன் பெறுவது?


எஸ்பிஐ(SBI)  வங்கியில் நிலையான வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள தனிநபர் அல்லது கூட்டு வைப்புத்தொகையாளர்கள் கடன் பெற முடியும்


ஆன்லைன் வங்கி கணக்கில் டிடிஆர் அல்லது எஸ்டிடிஆர் முறையில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்களும் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தலாம்.ஓவர் டிராஃப்ட் கணக்கை வைப்புத்தொகையாளர்கள் மின்னணு முறையிலேயே பயன்படுத்தலாம். 


விண்ணப்பம் வங்கியால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, கூட்டு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இருவருமே கடன் பெறும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். விண்ணப்ப படிவத்தில்  ஒருவர் கையெழுத்திட வில்லை என்றால் உங்களுடையை வங்கி விண்ணப்பத்தை நிராகரிக்கும். எஸ்பிஐ(SBI) வங்கியில் வரி சேமிப்புக்கான நிலையான வைப்பு கணக்கு வைத்திருந்தால் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது.


கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்பது பெற்ற கடன் தொகைக்கான வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்தும் காலம் ஆகும். கடன் தவணையை செலுத்த காலதாமதம் ஏற்படும்போது அதை தவிர்ப்பதற்காக கடன் பெறுவோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய திருப்பி செலுத்தும் காலமுறை ஒன்றை வங்கி பரிந்துரைக்கிறது.


 கடன் பெறுபவரின் நம்பகத்தன்மையை தீர ஆராய்ந்து இந்த காலமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எஸ்.டி.டி.ஆர் முறையின் கீழ் கடனை பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டு காலம் . அதுவே இ-எஸ்.டி.டி. முறையின் கீழ் கடனை பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டு காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.


நிலையான வைப்புத் தொகையின் மீது கடன் பெறுவதில் உள்ள பலன்கள்


கடனுக்கான வட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கி வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விட சுமார் 1 சதவீதம் மட்டுமே கூடுதலாக இருக்கும். அதேபோல நீங்கள் திருப்பி செலுத்தும்போது செலுத்த வேண்டிய தொகை குறையும் பட்சத்தில் அதற்கான வட்டி மட்டும் வசூலிக்கப்படும். நிலையான வைப்பு தொகை மீது கடன்பெறும் வசதி மட்டுமல்லாமல் ஓவர் டிராஃப்ட் வசதியையும் எஸ்பிஐ(SBI) வழங்குகிறது. கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.


எஸ்பிஐ(SBI) எஃப்.டி. மீது ஓவர்டிராஃப்ட் கணக்கு தொடங்குவது எப்படி?


ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஓவர்டிராஃப்ட் தொகை பெற முடியும். .அருகிலுள்ள எஸ்பிஐ(SBI) கிளையில் ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட்டை தொடங்கலாம் அல்லது இணையவழியிலும் தொடங்கலாம்.


மின்னணு முறையில் எஸ்பிஐ நிலையான வைப்பு தொகை மீது ஓவர்டிராஃப்ட் தொடங்கும் முறை


எஸ்பிஐ(SBI) நெட் பேங்கிங் கணக்கில் பயனர்களின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைய வேண்டும். அதில் மெனு பிரிவின் உள்ளே e Fixed deposit ஐ கிளிக் செய்யவும். இப்போது overdraft against Fixed deposit ஐ கிளிக் செய்யவும். பிறகு உங்கள் டெபாசிட் கணக்கு திரையில் வரும்.அதில் ஓவர் டிராப்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு வைப்புத்தொகையைத் தேர்ந்தெடுக்கவும். 


அதன் பிறகு 'Proceed' என்பதைக் கிளிக் செய்து, ஓவர் டிராஃப்ட் தொகை, ஓவர் டிராப்ட்டில் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும். தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் கடவுச்சொல்லைப் பெறுவீர்கள், தேவையான இடத்தில் அதை Enter செய்து அதை அங்கீகரிக்கவும். தற்போது உங்கள் கணக்கு தொடங்கப்பட்டு விடும்.

பிக்ஸட் டெபாசிட் வட்டியைக் கூடுதலாகத் தரும்-'Immune India deposit scheme'- மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை...

 கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாம் அலை, மிகத் தீவிரமாகி வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அதைப் போட்டுக்கொள்வதில் மக்களுக்கு அச்சமும், ஏராளமான குழப்பங்களும் இருந்து வருகின்றன. இதனாலேயே மக்களில் பலர், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வருவதில்லை.


கடந்த திங்கள்கிழமையன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1,68,912-ஆக இருந்தது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,35,27,717-யைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.



மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வங்கி பிக்ஸட் டெபாசிட் வட்டியைக் கூடுதலாகத் தரும் விதமாக 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.


இந்த அறிவிப்பின்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்காக பிரத்யேகமாக 'Immune India deposit scheme' என்கிற புதிய சேமிப்புத் திட்டத்தை இந்த வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. மற்ற பிக்ஸட் டெபாசிட் போலத்தான், இந்த பிரத்யேக டெபாசிட் திட்டமும் செயல்படும் என்றாலும், 1,111 நாள்கள் முதிர்வுக் காலம் கொண்ட இந்த பிக்ஸட் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில், வழக்கமான வட்டி விகிதத்தைவிட கூடுதலாக 0.25% வட்டியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


மூத்த குடிமக்கள் 0.50% வட்டியை கூடுதலாகப் பெறமுடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வாடிக்கையாளர்கள் இந்த சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும்தான் என 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - வரவு செலவு திட்டம் - 2021 -22ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு இடைக்கால வரவு செலவு திட்டம் - IFHRMS ல் HOD to BCO படி நிலைகளில் சார்நிலை அலுவலர்களுக்கு நிதி ஒதுக்கீடு பகிர்வு செய்தல்...

 


தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு - அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும் - பள்ளிக்கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 019560/ பி1/ இ1/ 2021, நாள்:09-04-2021 வெளியீடு...

>>> பள்ளிக்கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 019560/ பி1/ இ1/ 2021, நாள்:09-04-2021...


தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! Gazette Notification...

தேவேந்திர குல வேளாளர் பெயரின் கீழ் ஏழு துணை பிரிவுகளை வைக்கும்  அரசியலமைப்பு மசோதா (பட்டியல் பிரிவினர்) ஆணை (திருத்த) சட்டம், 2021க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! Gazette Notification...

The President gives his assent to the Constitution (Scheduled Castes) Order (Amendment) Act, 2021 that seeks to put seven sub sects under one nomenclature of DevendrakulaVellalars. The Union Law Ministry issues a gazette notification in this regard. Details here...




>>> Click here to Download Gazette Notification...



தேவையின்றி மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு...



 தமிழகத்தில் கொரோனா  மீண்டும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால் எக்காரணம் கொண்டும் மாணவ மாணவியரை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கீழ் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்களை வழங்க உள்ளதாகவும், அவற்றை பெற்றுக் கொள்ள மாணவ மாணவியர் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு வினாக்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்து மாணவ மாணவியரை பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் பள்ளி மாணவர்கள் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா  தீவிரமடைந்துள்ளதால் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள் , கட்டுரை போட்டி போன்றவற்றை காரணம் காட்டி எந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்  தனியாக ஒரு உத்தரவையும் போட்டுள்ளார் இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



CEO / DEO அலுவலகங்களில் தன் பதிவேடு (PR - Personal Register) பராமரித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 CEO / DEO அலுவலகங்களில் தன் பதிவேடு (PR - Personal Register) பராமரித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 014733/ அ2/ இ1/ 2021, நாள்: 16-04-2021...


>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 014733/ அ2/ இ1/ 2021, நாள்: 16-04-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...