கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (26-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 26, 2021



சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். புதிய முயற்சிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுடன் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : உற்சாகமான நாள்.


பரணி : அன்பு அதிகரிக்கும்.


கிருத்திகை : மாற்றமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 26, 2021



வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் முதலீடுகளின் மூலம் லாபம் கிடைக்கும். சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போடும்போது கவனம் வேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


ரோகிணி : ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்.


மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 26, 2021



தொழிலுக்கு தேவையான வங்கிக்கடன் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தந்தைவழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.


புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 26, 2021



தாயிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வீடு,  மனை விற்பனையின் மூலம் லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.


பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.


ஆயில்யம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 26, 2021



மனதைரியத்தோடு எந்தவொரு செயலையும் மேற்கொள்வீர்கள். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் செல்வாக்கு உயரும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



மகம் : செல்வாக்கு உயரும்.


பூரம் :  லாபம் கிடைக்கும்.


உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 26, 2021



அண்டை, அயலார்கள் உதவிகரமாக இருப்பார்கள். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் மற்றும் உறவினர்களால் சிறு விரயங்கள் உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.  இடமாற்றங்கள் ஏற்படும். அறிமுகமில்லாதவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் :  இளம் மஞ்சள்



உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.


அஸ்தம் : விரயங்கள் உண்டாகும்.


சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 26, 2021



வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் பொறுமை வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். திடீர் யோகங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



சித்திரை : பொறுமை வேண்டும்.


சுவாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 26, 2021



பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். நண்பர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 26, 2021



நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். காலதாமதமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். இணையதளம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : அனுபவம் ஏற்படும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 26, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். தாய்வழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் அனைத்தையும் கலந்து, ஆலோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : மனவருத்தங்கள் குறையும்.


திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


அவிட்டம் :  நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 26, 2021



தொலைபேசியின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகத்தின் மூலம் காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் தெய்வப்பணிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


சதயம் : வெற்றிகரமான நாள்.


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 26, 2021



தந்தைவழியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடும். குடும்ப பெரியோர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



பூரட்டாதி : செலவுகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : விமர்சனங்கள் நேரிடும்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேடுகளில் (S.R.) சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் (Information to be checked by teachers in their Service Register)...

 உங்களின் பணிப்பதிவேட்டில் (Service Register) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்...



நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.


பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.


💐பெயர்


💐புகைப்படம்


💐முகவரி


💐அங்க அடையாளங்கள்


💐இனம்


💐பிறந்த தேதி


💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண்


💐X std mark entry


💐X std genuineness entry


💐XII std mark entry


💐XII std genuineness entry


💐DTEd mark entry


💐DTEd genuineness entry


💐UG BA / BSC முன் அனுமதி


💐UG provisional entry


💐UG convocation entry


💐UG genuineness entry


💐BEd முன் அனுமதி entry


💐BEd கற்பித்தல் பயிற்சி entry


💐BEd provisional entry


💐BEd convocation entry


💐BEd genuineness entry


💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி


💐PG provisional entry


💐PG convocation entry


💐PG genuineness entry


💐Appointment ஊதிய நிர்ணயம்;


💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.


💐 SPF ENTRY


💐 FBF entry


💐 பணிவரன்முறை; (ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)


💐 தகுதி காண் பருவம்; (ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)


💐 மாறுதல்கள்; (பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.)


💐 பதவி உயர்வு; (அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)


💐 Special allowance entry


💐 Personal pay 750 entry


💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்; (அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)


💐 ஊக்க ஊதிய உயர்வு; (நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)


💐 மகப்பேறு விடுப்பு பதிவு


💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு


💐 ஆண்டு ஊதிய உயர்வு. ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.


💐 பணிகாலம் சரிபார்ப்பு; (பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)


💐 Pay commission; ( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)


💐 தேர்வு நிலை ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


💐 சிறப்பு நிலை பதிவு


💐 பணியேற்பிடைக் காலம் பதிவு


💐 Department exam pass entry


💐 EL வரவு  ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )


💐 ML பதிவு


💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு


💐 Details of family


💐 Nomination for Death cum Retirement Gratuity


💐 Form of nomination


💐SPF - cum gratuity scheme nomination



மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். 


>>> CLICK HERE TO DOWNLOAD THE S.R ENTRY DETAILS...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் - Drawing and Disbursing Officers பணி மற்றும் தண்டனைகள், தண்டத்தொகை சார்ந்த விளக்கங்கள்...



>>> சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் - ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின் ( DDO) பணி மற்றும் தண்டனைகள், தண்டத்தொகை சார்ந்த விளக்கங்கள்...


YouTube வழியே குடிமைப் பணி தேர்வு பயிற்சி: தமிழக அரசு...



 சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குனர் வெ.இறையன்பு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 


கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேர்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இந்த தடை காரணமாக பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.


இதைத் தொடர்ந்து, சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். AICSCC  TN (Click Here) மற்றும் AIM TN (Click Here) ஆகிய யூ-டியூப் குறியீடுகள் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப் பணித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.


மேலும் அரசு ஊழியர்களுக்கான மேலாண்மை பயிற்சியும் அதன் வழியே அளிக்கப்படும்.



அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச நீட் பயிற்சி: மீண்டும் தொடர பள்ளிக்கல்வித் துறை திட்டம்...



 அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி  வகுப்புகளை மீண்டும் ஆன்லைனில் தொடர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இந்த ஆண்டு கரோனா பரவலால் நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த நவ.9 முதல் ஜன.12 வரை இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அதன் பிறகு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன.



இதற்கிடையே, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5 முதல் 31-ம் தேதி வரை நடக்க இருந்தது. இத்தேர்வு முடிந்த பிறகு ஜூன் மாதம் முதல் நேரடி முறையில் நீட் பயிற்சியை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இந்நிலையில், கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மீண்டும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தொடர கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது,


‘‘பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு நேரடி நீட் பயிற்சி நிறுத்தப்பட்டு, வழிமுறை தொடர்பான காணொலிகள் மட்டும் மார்ச் மாத இறுதிவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்று வந்தனர்.


இந்நிலையில், பொதுத் தேர்வு தள்ளிப்போனதால் மீண்டும் நேரடி பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் மூலம்மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி, பயிற்சியில் அவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்புப்படி ₹ 500/ & ₹30 தொடர்ந்து கிடைக்குமா? - கருவூல கணக்கு முதன்மைச் செயலர் / ஆணையர் விளக்கம்...



 இடைநிலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்புப்படி ₹ 500/ & ₹30 தொடர்ந்து கிடைக்குமா? - கருவூல கணக்கு முதன்மைச் செயலர் / ஆணையர் கடிதம் ந.க. எண்: 37741/ D2 / 2019, நாள்:15-12-2019...


>>> கருவூல கணக்கு முதன்மைச் செயலர் / ஆணையர் கடிதம் ந.க. எண்: 37741/ D2 / 2019, நாள்:15-12-2019...



கல்வித்துறை சார்ந்த தகவலை கல்வித்துறைதான் வழங்க வேண்டும் - பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் (RTI LETTER )...



>>> பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் கடித எண்: 20377/ இ1/ 2010-1, நாள்:29-04-2010...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...