கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

COACHING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COACHING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TNPSC Group 1, 2, 2A : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நேரடி பயிற்சி



TNPSC Group 1, 2, 2A : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நேரடி பயிற்சி


மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group 1, 2, 2A ஒருங்கிணைந்த நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.


திங்கள்-வெள்ளி, காலை 10-மதியம் 1 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.


பயிற்சியில் அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் வகுப்புகள், பாடக்குறிப்புகள், தினசரி/மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், பாடவாரியான துணைத் தேர்வுகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் வழங்கப்படும்.


சேர விரும்புவோர் ஆதார் அட்டை நகல், Passport Size புகைப்படத்துடன் A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் நேரில் அணுகலாம்.


தொடர்புக்கு 044-22500134 மற்றும் 9361566648-வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.


TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

 



Kalaignar Centenary Integrated Competitive Examinations Coaching Centre

Kalanjipatti, Oddanchatram, Dindigul- 624619





CECC

Kalaignar Centenary Integrated Competitive Examinations Coaching Centre 2026-27 ,Online Registration Notification


TNPSC, SSC, IBPS, RRB  உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 


விண்ணப்பம் தொடக்கம்  : 16.05.2026

கடைசி தேதி : 24.05.2026



பயிற்சி குறித்த தகவல் அறிய

https://www.cecc.in/latest/17


பயிற்சிக்கு பதிவு செய்ய வலைதள முகவரி:

https://admission.cecc.in/register



போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


6 months of full-time free coaching classes for 200 aspirants to succeed in competitive exams - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது - செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 (TNPSC Group IV Competitive Examination Online Training Courses Tamil Nadu Government has started from 13.11.2023 - Press Release No: 2282, Dated: 15-11-2023)...


TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது - செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 (TNPSC Group IV Competitive Examination Online Training Courses Tamil Nadu Government has started from 13.11.2023 - Press Release No: 2282, Dated: 15-11-2023)...



>>> செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் SSC, RRB, Banking, UPSC தேர்வுகளுக்கு நடைபெறும் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-05-2023 - செய்தி வெளியீடு எண்: 876, நாள்: 10-05-2023 (Last Date to Apply for Coaching for SSC, RRB, Banking, UPSC Exams under “Naan Mudhalvan” Scheme: 20-05-2023 - Press Release No: 876, Date: 10-05-2023)...



>>> "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் SSC, RRB, Banking, UPSC தேர்வுகளுக்கு நடைபெறும் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-05-2023 - செய்தி வெளியீடு எண்: 876, நாள்: 10-05-2023 (Last Date to Apply for Coaching for SSC, RRB, Banking, UPSC Exams under “Naan Mudhalvan” Scheme: 20-05-2023 - Press Release No: 876, Date: 10-05-2023)...



>>> பயிற்சிக்கு விண்ணப்பிக்க வலைதள முகவரி (Coaching Application Website Address)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு / அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நவம்பர் 3வது வாரத்தில் தொடங்க பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of Commissioner of School Education to start free coaching classes in 3rd week of November for Government / Government Aided School students to face competitive exams including NEET) ந.க.எண்: 056940/ டபிள்யு4/ இ1/ 2022, நாள்: 03-11-2022...



>>> அரசு / அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நவம்பர் 3வது வாரத்தில் தொடங்க பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of Commissioner of School Education to start free coaching classes in 3rd week of November for Government / Government Aided School students to face competitive exams including NEET) ந.க.எண்: 056940/ டபிள்யு4/ இ1/ 2022, நாள்: 03-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



YouTube வழியே குடிமைப் பணி தேர்வு பயிற்சி: தமிழக அரசு...



 சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குனர் வெ.இறையன்பு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 


கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேர்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இந்த தடை காரணமாக பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.


இதைத் தொடர்ந்து, சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். AICSCC  TN (Click Here) மற்றும் AIM TN (Click Here) ஆகிய யூ-டியூப் குறியீடுகள் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப் பணித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.


மேலும் அரசு ஊழியர்களுக்கான மேலாண்மை பயிற்சியும் அதன் வழியே அளிக்கப்படும்.



அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச நீட் பயிற்சி: மீண்டும் தொடர பள்ளிக்கல்வித் துறை திட்டம்...



 அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி  வகுப்புகளை மீண்டும் ஆன்லைனில் தொடர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இந்த ஆண்டு கரோனா பரவலால் நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த நவ.9 முதல் ஜன.12 வரை இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அதன் பிறகு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன.



இதற்கிடையே, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5 முதல் 31-ம் தேதி வரை நடக்க இருந்தது. இத்தேர்வு முடிந்த பிறகு ஜூன் மாதம் முதல் நேரடி முறையில் நீட் பயிற்சியை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இந்நிலையில், கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மீண்டும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தொடர கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது,


‘‘பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு நேரடி நீட் பயிற்சி நிறுத்தப்பட்டு, வழிமுறை தொடர்பான காணொலிகள் மட்டும் மார்ச் மாத இறுதிவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்று வந்தனர்.


இந்நிலையில், பொதுத் தேர்வு தள்ளிப்போனதால் மீண்டும் நேரடி பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் மூலம்மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி, பயிற்சியில் அவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

 


ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐ.ஐ.டி./ஜே.இ.இ. போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் நெக்ஸ்ட்ஜென் வித்யா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரவ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும் உடன் இருந்தனர்.

இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப கல்வியை சேர்ந்த ஐ.ஐ.டி./ ஜே.இ.இ. உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தனியாக லாக்-இன் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். இதற்கான பதிவு வருகிற 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், பயிற்சி வகுப்புகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கும். 

http://play.google.com/store/apps/details?id=com.vidhyaeducation.android

என்ற முகவரியில் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special camp for inclusion of names in the electoral roll - District Collector Press Release

  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.10.2026 அன்று சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பு வெளியீடு Special camp for inc...