கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்புகள்; விண்ணப்பப் பதிவு தொடங்கியது

 சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்புகளில் சேர நேற்று முதல் விண்ணப்பப் பதிவு  தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், ஜூன் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.




இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை ஆகிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. பின்னர் சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்குத் தனி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு, அவற்றுடன் அப்பிரிவுகள் இணைக்கப்பட்டன.



இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுகலை வகுப்புகளில் சேர நேற்று முதல் விண்ணப்பப் பதிவு  தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், ஜூன் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



அத்துடன் எம்.ஃபில்., முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.354 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



கூடுதல் தகவல்களுக்கு: https://egovernance.unom.ac.in/cbcs2122/



விண்ணப்பிப்பதில் சந்தேகம் ஏற்பட்டால் https://egovernance.unom.ac.in/cbcs2122/AdmissionPGMPHIL/FrmInsruct என்ற முகவரியைக் காணலாம்.


முதல்வர் நிவாரண நிதிக்கு சேமிப்புப் பணத்தை வழங்கிய பள்ளி மாணவி; பாராட்டி மடிக்கணினி வழங்கிய விழுப்புரம் எம்எல்ஏ...

 முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு தன் சேமிப்புப் பணம் ரூ.1,500 வழங்கிய மாணவிக்கு விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் மடிக்கணினி  வழங்கினார்.


தற்போது உலகம் முழுவதும் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகின்றனர்.


அந்த வகையில், கடந்த 11-ம் தேதி விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகளான 5-ம் வகுப்பு மாணவி சிந்துஜா. தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு 2-வது பரிசாக ரூ.500-ஐ பெற்றார்.


அந்தப் பணத்துடன் மேலும் பணம் சேர்த்து உயர்கல்வியின் தேவைக்காக மடிக்கணினி வாங்குவதற்காக ஒரு உண்டியலில் சேமித்து வந்த ரூ.1,500 பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.


உடனே அவர் வங்கிக்குச் சென்று அந்த பணத்திற்கு வரைவோலை எடுத்து, அதனை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக, கடந்த 11-ம் தேதி மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார்.


இதனை செய்தித்தாளில் படித்த தலைமைச் செயலாளர் இறையன்பு, "மாணவி சிந்துஜாவுக்கு தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வதாகவும், சிறுவயதிலேயே பிறர் அனுபவிக்கும் துயரங்களை உணர்ந்து, அதற்கு தன்னால் உதவிகளை செய்ய வேண்டும் எண்ணத்தை ஊட்டி வளர்த்த பெற்றொரை பாராட்டுகிறேன். அம்மாணவி மேன்மேலும் தன் வாழ்வில் படித்து சிறந்து விளங்கவேண்டுமென்று இறைவனை பிராத்திக்கிறேன்" என்று அனுப்பிய பாராட்டு கடிதத்தை இன்று (மே 13) மாலை ஆட்சியர் அண்ணாதுரை அம்மாணவியிடம் வழங்கினார்.


இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், சிந்துஜாவுக்கு மடிக்கணினி ஒன்றை வழங்கினார். அப்போது, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்...

 கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்...



அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்க இருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு - விவரம்...

 கொரோனா சிறப்பு நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 


நாளை முதல் ரூ.2 ஆயிரம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


 

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்த கையோடு அந்த திட்டத்தை கடந்த 10-ந்தேதி தொடங்கி வைத்தார். ரேஷன் கடைகளில் நாளை (15-ந்தேதி) முதல் ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்பட உள்ளது.



14 பொருட்கள்

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையை கருத்தில் கொண்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு ஆகிய 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.




 

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 


அதில், ‘இந்த மளிகை பொருட்கள் விலையானது அமுதம் பல்பொருள் அங்காடிகளில் வழங்கப்படும் பொருட்களின் கொள்முதல் விலையின் (வரிகள் உள்பட) அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 14 மளிகை பொருட்கள், துணிப்பையுடன் சேர்த்து 15 பொருட்களுக்கு கொள்முதல் விலையாக ரூ.397.33 கணக்கிடப்பட்டுள்ளது.


கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில்...

கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை கொள்முதல் செய்யும் பணி இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் அந்த பொருட்கள் ‘பேக்கிங்’ செய்யும் பணிகள் நடைபெறும். இந்த நிவாரண பொருட்கள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி அன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சின்னம் மட்டும் கொண்ட பைகள் தயார்...





திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. நேற்று (மே 13) மட்டும் தமிழகத்தில் 30,621 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14,99,485 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1,83,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


நேற்று சென்னையில் 6,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 42,579 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 297 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 16,768 ஆக அதிகரித்துள்ளது.


இதனிடையே, கரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.


அந்த வகையில், திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக இன்று (மே 14) அவர் வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...



அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 12ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும்பொருட்டு 17.05.2021 முதல் 29.06.2021 வரை மாணவர்களுக்கு தேர்வு வைக்க அட்டவணை வெளியீடு: எவ்வாறு தேர்வு நடத்த வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்...


தேர்வு நடைபெற வேண்டிய வழிமுறைகள்  :


* ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் . 



* மாணவர்களுக்கு தனியாகவும் , மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் . தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் . 



* மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்துதல் வேண்டும். விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர் , பதிவு எண் ( அரசுத்தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட எண் ) , பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.



* அனைத்து விடைகளையும் எழுதிய பின்பு இறுதியில் மாணவர் கையொப்பம் மற்றும் பெற்றோர்/ பாதுகாவலர் கையொப்பம் பெறுதல் வேண்டும் . 



* எழுதப்பட்ட விடைத்தாட்களை Adobe Scan App மூலம் படம் பிடித்து , Pdf கோப்பாக Whats app மூலம் பாட ஆசிரியர்களுக்கு அனுப்புதல் வேண்டும் . மாணவர்கள் விடைத்தாட்களை image file ஆக அனுப்புவதை தவிர்க்க வேண்டும் . 



* எழுதப்பட்ட விடைத்தாட்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.



* பாட ஆசிரியர் Whats app மூலம் பெறப்பட்ட விடைத்தாட்களை Whats app- யிலேயே திருத்தம் செய்து உரிய மதிப்பெண்களை Whats app- யிலேயே Type செய்தல் வேண்டும். 



* திருத்தப்பட்ட விடைத்தாட்களை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் . பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே இருத்தல் வேண்டும் . பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் பள்ளியின் படம் , ஆசிரியர் படம், தலைமையாசிரியரின் படம் , மாணவர் படம் , பெற்றோர் படம் போன்ற எந்த ஒரு படங்களும் கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது.


 

* மேலும் , வேறு செய்திகள் , வீடியோக்கள் போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது. இதனை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.




* ஒவ்வொரு நாளும் தேர்வு முடிவுற்றவுடன் மாணவர் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு விடைத்தாள் / நோட்டில் தேர்வு எழுதிய பக்கத்தினை படம் பிடித்து , Pdf ( Adobe Scan App மூலம் ) ஆக மாற்றம் செய்து Whats app மூலம் அனுப்பப்பட வேண்டும் . மாணவர்கள் தேர்வுகளை நோட்டிலோ மற்றும் தாளிலோ எழுதி அதனை பாட வாரியாக அடுக்கி மாணவர்களை பள்ளிக்கு நேரிடையாக வருகை புரிய அரசு அறிவிக்கும் நாளில் இந்நோட்டினை / விடைத்தாளினை ஆசிரியரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.



* ஜூன் மாத இறுதிக்குள் Unit Test & Revision Test-ஐ WhatsApp வழியாக நடத்தி முடிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை உத்தரவு.



மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6733/ ஈ5/ 2020, நாள்: -05-2021...


>>> CLICK HERE TO DOWNLOAD - மதுரை மாவட்ட CEO செயல்முறைகள்  - PROCEEDINGS - REG: UNIT TEST & REVISION TEST - PDF...


ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டம் என தகவல்...

 







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...