கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை...

  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். SSLC மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


தற்போது உள்ள சூழலில் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளதாக என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவது பற்றி அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தினசரி கொரோனா தொற்று 35 ஆயிரத்தை தாண்டகிறது. எனவே எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது...

 


மதுரை டு தூத்துக்குடி ஆகாயத்தில் நடந்த திருமணம்... - விமான ஊழியர்கள் சஸ்பெண்ட்...

 





தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநில முதல்வர் படம்...

 


ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால B.Ed படிப்பு தற்காலிக நிறுத்தம் - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு...

 பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து, பி.எட். பயிலும் மாணவர்களின் வசதிக்காக பி.ஏ.பி.எட், பிஎஸ்சி.பி.எட் ஆகிய பிரிவுகளில் 4 ஆண்டுகால ஒருங்கிணைந்த படிப்பை 2021-22 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கென தனியாக தேசிய அளவில் நுழைவுத் தேர்வுநடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, தமிழகத்தில் தனியார் பி.எட். கல்லூரிகள் 4 ஆண்டுகால படிப்பை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.


இந்நிலையில், ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக என்சிடிஇ அறிவித்துள்ளது. பட்டப் படிப்பு முடித்த பிறகு பி.எட். படிப்பை தனியாக படிப்பதால் ஓராண்டு காலம் கூடுதலாக செலவாகும். இதை தவிர்க்கவே, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக என்சிடிஇ தெரிவித்திருந்தது.


இந்நிலையில், 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை, தற்போது பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களால் எழுத முடியாது என்று கூறப்படுள்ளது. இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு 2022-23 கல்வியாண்டில் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். - உயர்கல்வித்துறை- Reexam Schedule...

 அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். - உயர்கல்வித்துறை- Reexam Schedule...


அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும்.


2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


            - உயர்கல்வித்துறை

ரேஷன் கடைகள் 25-05-2021முதல் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு...

 ரேஷன் கடைகள் 25-05-2021முதல் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு...


ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் - தமிழக அரசு.


தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...