கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு...



 நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள், பாடத்திற்கு ரூ.750 ரூபாய் 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், நடப்பு செமஸ்டருக்கான தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெற உள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – சிபிஎஸ்இ செயலாளர் விளக்கம்...

 


சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, அவர்கள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு இறுதி முடிவுகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 



சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 


கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சி.ஐ.எஸ்.சி.இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.




இதன் பின்னர், மதிப்பீடு முறை குறித்து பல தரப்புகளில் இருந்தும் கேள்விகள் எழ தொடங்கியுள்ளது. இதனால் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வின் அளவுகோல்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதனால் முடிவுகள் வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு அளவுகோல்களை தீர்மானிக்க சிபிஎஸ்இ 12 உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் இணைச் செயலாளர் கல்வி, விபின் குமார், கேந்திரியா மற்றும் நவோதயா வித்யாலயா ஆணையர்கள் மற்றும் சிபிஎஸ்இ மற்றும் யுஜிசி பிரதிநிதிகள் உள்ளனர். குழு தனது அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




இந்த மதிப்பீட்டு அளவுகோலில் திருப்தி இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும், மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒருவரின் திறனை அளவிட முடியாது என்றும், மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தாமதமின்றி, அந்தந்த துறைத் தலைவர்கள் உடனடியாக வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு...

 கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தாமதமின்றி, அந்தந்த துறைத் தலைவர்கள் உடனடியாக வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு...








பிளஸ்1 வகுப்புகள் அடுத்த வாரம் துவக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 



ஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகள் தொடக்கம்: மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


 


 11ஆம் வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 10-15% கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே பிரிவுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், 50 கொள்குறிவகை வினாக்கள் தயாரித்து தேர்வு வைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர். தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்க குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால் கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 15 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதிகமான விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வுகள் வைத்து அனுமதிக்கலாம். ஜூன் 3வது வாரத்தில் வகுப்புகளை தொடங்க வேண்டும். +2 மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


>>> +1 மாணவர் சேர்க்கை - 2021-22 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதல்...



ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

 



>>> தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துப்பள்ளிகளிலும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


Proceedings of the Commissioner of School Education regarding School Opening and Class XI Admission - With the Endorsement of Karur CEO...



பள்ளிகள் திறப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கை தொடர்பான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - கரூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளுடன்...




மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தில் குடும்ப ஓய்வூதியம் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு...

 


மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஒய்வூதியமானது, அவர்கள் விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறைத்தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


இதுகுறித்து மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால், மத்திய அரசு ஊழியர்கள் பலர் உயிரிழந்தனர். பல நேரங்களில், உயிரிழந்த ஊழியரை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருந்து வந்துள்ளது. இந்த நேரத்தில் வாழ்வாதாரத்துக்காக அந்த குடும்பங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.


எனவே, உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியத்தையும் இதர சலுகைகளையும் விரைந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசின் அனைத்து துறைகளும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசு விண்ணப்பித்ததும், அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


பின்னா் அங்கிருந்து, குடும்ப வாரிசுகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாதத்தில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு உயிரிழந்த அரசு ஊழியர்களின் விவரம், அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்ட நாள்,தாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணம், தாமதத்தை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் போன்றவற்றை அரசின் அனைத்து துறைகளும் சமா்ப்பிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் ஆணை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


>>> Payment of family pension, death gratuity and other dues to the family on death of a Government servant during service – Regarding (03/06/2021)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.E.O. celebrated his birthday by cutting a cake in a government school

அரசுப்பள்ளியில் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வட்டாரக்கல்வி அலுவலர் Block Education Officer celebrated his birthday by cutting a cake ...