கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல் முறையாக தசம எண்களில் +2 மதிப்பெண்கள்...



தசம எண்களில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை 80, 70 என்பதுபோல முழுமையான மதிப்பெண்களாக வழங்கப்பட்டன. தற்போதைய கணக்கீட்டின்படி பெரும்பாலும் இறுதி மதிப்பெண்கள் 70.11 என்பதுபோல தசம எண்களுடன் சேர்ந்து வரும். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பாதிப்பு அடைவதைத் தவிர்க்க மதிப்பெண் சான்றிதழில் தசம விகிதங்கள் அப்படியே குறிப்பிடும் வகையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உதாரணமாக, பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரின் இறுதி மதிப்பெண் கூட்டுத்தொகை 78.74 என்று வந்தால் அது முழு மதிப்பெண்ணாக 79 என மாற்றப்படாமல் 78.74 என்று தசம எண்ணாகவே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும்.


 இந்தப் புதிய நடைமுறை நடப்பு ஆண்டு அமலுக்கு வருகிறது. கட் ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டின்போது இதுபெரிதும் உதவியாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...



 COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...


எடப்பாடியைச் சேர்ந்த T.A.KAMALAKKANNAN என்பவரது கோரிக்கை...

கோரிக்கை எண் (Petition Number) : 2021/1192096/FD

கோரிக்கை (Petition): 

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்‌. 

தமிழக அரசு ஊழியர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தமிழக அரசின்‌ கீழ்‌ மாதம்‌ மாதம்‌ சம்பளத்தில்‌ பிடித்தம்‌ செய்யும்‌ HEALTH INSURANCE (NHIS) தொகை ரூ.180 ரூபாய்க்கான சரியான சிகிச்சை செலவினங்களை சம்மந்தபட்ட INSURANCE நிறுவனம்‌ வழங்குவதில்லை.

உதாரணமாக கொரணா தொற்றில்‌ PCR TESTல்‌ NEGATIVE வந்த பிறகு CT SCAN எடுக்கும்‌ போது நுரையீரலில்‌ தொற்று இருப்பது கண்டுடறியப்பட்டு மருத்துவமனையில்‌ சேர்ந்து சிகிச்சை அளிக்கும்‌ போது ஏற்படும்‌ செலவிற்கு INSURANCE கம்பெனி பொறுப்பேற்க மறுக்கிறார்கள்‌. அதே தனிப்பட்ட முறையில்‌ தனியார்‌ INSURANCE COMPANY-ல்‌ INSURANCE எடுக்கும்போது அவர்கள்‌ செலவின தொகையை ஏற்றுக்கொள்கிறார்கள்‌. எனவே அரசு ஊழியர்கள்‌ அல்லது ஆசிரியர்கள்‌ எந்தவொரு (எந்த நோயாக இருந்தாலும்‌ சரி) நோயின்‌ மூலம்‌ தீவிரமாக பாதிக்கபட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு அதற்காக ஏற்படும்‌ மருத்துவ செலவினங்களை அந்த INSURANCE COMPANY ஏற்றுக்கொள்வதற்கு தாங்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ளபடவேண்டும்‌. இதற்கான சரியான வழிகாட்டல்‌ நெறிமுறைகளை சம்மந்தபட்ட INSURANCE COMPANYக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மிகவும்‌ பணிவுடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. நன்றி.


CM Special Cell Reply: 

ஏற்கப்பட்டது. அரசுக்‌ கடித எண்‌.36962/நிதி(சம்பளம்‌)/2020, நாள்‌.11.11.2020-ன்‌ படி கோவிட்‌ 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்‌ மனுதாரருக்கு கருவூல கணக்கு ஆணையரக கடித 20548/புமகாதி-4/2021 நாள்‌.07.07.21 மூலம் தெரிவிக்கப்பட்டது என்ற தகவல்‌ தெரிவிக்கலாகிறது.


>>> Click here to Download CM Special Cell Reply...


EMIS இணையத்தில் மாணவர்களின் IT PROFILE தகவல் முடித்தவர்களின் விவரம் மாவட்ட வாரியாக...

 EMIS இணையத்தில் மாணவர்களின் IT PROFILE தகவல் முடித்தவர்களின் விவரம் மாவட்ட வாரியாக...



>>>  Steps in Updating IT Profile (Information about Technology) of Students in EMIS...


4 இ.ஆ.ப. (IAS) அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.2966, Dated: 18-07-2021) வெளியீடு...



 4 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...


>>> Click here to Download G.O.Rt.No.2966, Dated: 18-07-2021...


இன்று (19-07-2021) காலை 11மணிக்கு வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (Results)...

 


இன்று வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...


*தமிழகத்தில் இன்று காலை 11மணிக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.


*தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.


*தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறியலாம்


 www.tnresults.nic.in,

 www.dge1.tn.nic.in,

 dge.tn.gov.in, 

dge2.tn.nic.in

இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்


*ஜூலை 22-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


*www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.



Steps in Updating IT Profile (Information about Technology) of Students in EMIS...

Dear HMs, 

(Government Hr.Sec., High & Middle Schools)

Kindly update the IT profile of all students from Class 6-12 in your school through the school login in EMIS. Please direct the class teacher to talk to the student and get as accurate data as possible and update the details in EMIS. 

This is very important and urgent. 

- State EMIS Team


 >>> Click here to Download Steps in Updating IT Profile (Information about Technology) of Students in EMIS...


EMIS- Do you have any smartphone, laptop, computer, tv or other multimedia devices in your home?


அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


தற்போது EMIS  இணையதளத்தில் அரசு பள்ளிகளில் பயிலும்  6 - 12 ஆம் வகுப்பு


நடுநிலை (6-8)

உயர்நிலை (6-10)

மேல்நிலை (6-12)


மாணவர்களின்  IT profile(information technology) சார்ந்த தகவல் பதிவேற்றம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


எனவே, சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடம் சரியான தகவலை கேட்டறிந்து  தகவலினை  EMIS  ல் பதிவு செய்தல் வேண்டும்.


மேற்கண்ட, இப்பணியை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் பார்வைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து  விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


School login-> students-> select IT profile  ->select class, section & name-> update the data ->save


Similarly update all students IT data


 Online Class,  கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க திட்டமிட மேற்கண்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்த  இப்பணியினை தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்.


ENGLISH FLASH CARDS FOR PRIMARY STUDENTS (188 PAGES)...



>>> ENGLISH FLASH CARDS FOR PRIMARY STUDENTS (188 PAGES)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...