கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalvi TV - Records - Registers - Forms ...



 கல்வி தொலைக்காட்சி - பதிவேடுகள் - படிவங்கள்...


Kalvi TV Records & Registers


📌️ ️தலைமை ஆசிரியர் கண்காணிப்பு பதிவேடு


📌️ ️"Online Class" Survey Form


📌️ ️ பார்வை விபரப்‌ பதிவேடு


📌️ ️மாணவர் தொடர்பணி விபரப்‌ பதிவேடு


📌️  ️பார்வை பராமரிப்பு பதிவேடு


📌️ ️ வீட்டுப்பள்ளி பதிவேடு


📌️  Time Table Schedule For All Classes - PDF...



>>> Click here to Download Kalvi TV - Records - Registers - Formats...



இன்றைய (25-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 25, 2021



உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் அமையும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அஸ்வினி : உயர்வான நாள்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 25, 2021



தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்புகள் உயரும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொழில் முயற்சிகளால் மேன்மை அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : மனவருத்தங்கள் குறையும்.


ரோகிணி : மதிப்புகள் உயரும்.


மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 25, 2021



மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். பயணங்கள் தொடர்பான செயல்களில் காலதாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்துக்கொள்ளவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படும்.


திருவாதிரை : மந்தமான நாள்.


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 25, 2021



வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூசம் : கலகலப்பான நாள்.


ஆயில்யம் : ஆசிகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 25, 2021



போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


பூரம் : லாபம் அதிகரிக்கும்.


உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 25, 2021



உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். குறுகிய தூர பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : தடைகள் அகலும்.


சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 25, 2021



தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மையும், அனைவரிடத்திலும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



சித்திரை : தனவரவுகள் கிடைக்கும்.


சுவாதி : ஆதரவான நாள்.


விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 25, 2021



மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழல்கள் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.


அனுஷம் : வெற்றிகரமான நாள்.


கேட்டை : காலதாமதங்கள் அகலும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 25, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 25, 2021



தாய்வழி உறவினர்களின் மூலம் கவலைகள் நீங்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணியில் பொறுப்புகள் உயரும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சுபவிரயங்கள் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திராடம் : கவலைகள் நீங்கும்.


திருவோணம் : பொறுப்புகள் உயரும்.


அவிட்டம் : மேன்மையான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 25, 2021



தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நிலையில் சற்று சோர்வுடனும், சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : லாபகரமான நாள்.


சதயம் : திறமைகள் வெளிப்படும்.


பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 25, 2021



குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். சமூகப்பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.


உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.


ரேவதி : பிரச்சனைகள் தீரும்.

---------------------------------------


பொது / ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி (GPF / TPF) இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை (IVRS)...



 அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை (IVRS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14-ம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி (ஐ.வி.ஆர்.எஸ்.) முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை 044-24325050 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பயன்படுத்தலாம். இந்த சேவையின் மூலமாக தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேம நல நிதி, ஆசிரியர் சேம நல நிதி சந்தாதாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி நடப்பு இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித்தொகை பெறுவதற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.


தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோரின் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 


தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறும் பிற அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் சிறப்பு பிரிவு ஓய்வூதியதாரர்களான அரசு கலைஞர்களை தவிர வேறு நபர்கள், கலைஞர் ஓய்வூதியம், தமிழ் அறிஞர் ஓய்வூதியம், பத்திரிகையாளர் ஓய்வூதியம், நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம், சமஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும். மேலும் சுயவரைதல் அதிகாரிகள் தங்களது ஊதிய சீட்டினை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் முதுநிலை துணை மாநில கணக்காயர் தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


GPF / TPF சந்தாதாரர்கள் IVRS வசதியைப் பயன்படுத்தும் முறை: 

 04424325050 என்ற எண்ணுக்கு கால் செய்தால் நமது வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் பிறந்த தேதி முதலியவற்றை IVRS வழியாக கேட்கும். அதை நாம் பதிவு செய்யும்போது நம்முடைய இருப்புத் தொகை பெற்ற கடன் விவரங்கள் வாய்மொழியாக அறிவிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


👉எண் 1 அழுத்தவும்- தமிழ் எனில்


👉எண் 1 அழுத்தவும்- வருங்கால வைப்புநிதி எனில்


👉எண் 3 அழுத்தவும்-ஆசிரியர் சேமநல நிதி எனில்


👉TPF No மற்றும் பிறந்த தேதி பதிவிடவும்.


👉மேற்கண்ட விபரம் சரியெனில் எண் - 5 ஐ அழுத்தவும்.


👉எண் 4 அழுத்தவும்- இருப்பு விவரம் (Balance) கேட்க.


👉எண் 5 அழுத்தவும்- பெற்ற கடன் (Loan Details) விவரம் கேட்க.


👉எண் 6 அழுத்தவும்- விடுபட்ட சந்தா (Missing Credits) விவரம் கேட்க.


👉எண்  7 அழுத்தவும் - இறுதி பகுதி முன்பணம் (Part Final) விவரம் கேட்க.



>>> GPF / TPF சந்தாதாரர்கள் IVRS வசதியைப் பயன்படுத்தும் முறை (PDF File)...



பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பும் தாக்கமும்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-2...

 மத்திய அரசு வெளியிட்ட 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) 2019-20 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 15 லட்சம் பள்ளிகளில் 26.4 கோடி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். இதில் இந்திய அளவில் மாணவ சேர்க்கைக்கான மொத்தப் பதிவு விகித குறியீடு (Gross Enrolment Ratio) தொடக்கப் பள்ளி அளவில் 102.7% என்றும்; நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை 89.7% என்றும் உள்ளது. இதுவே தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தொடக்கப் பள்ளிகளில் 98.9% என்றும், நடுநிலைப் பள்ளிகளில் 96.5% என்றும் உள்ளது.




மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கும், மொத்த பதிவு விகிதத்துக்கும் நெருங்கிய தொடர்பொன்று உள்ளது. அதாவது, மொத்த பதிவு விகிதமென்பது (GER) பள்ளிப் படிப்பில் இருந்து ஒருநிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்களின் ஒட்டுமொத்த விகிதத்தை குறிக்கும். இது குறையும்போது மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கையில் குறைவுகள் ஏற்படும். அந்த வகையில் இது இரண்டுக்கும் உண்டான இடைவெளியை வைத்து, அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையானது எந்தளவுக்கு குறைகிறது என்பதை நாம் அறியலாம். எந்தளவுக்கு இந்த விகிதம் அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு குழந்தைகள் மத்தியில் நாம் கல்வியறிவை அதிகரிக்கிறோம் என அர்த்தம்.



 



இந்த GER-ல், தமிழகத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் தொடக்கப் பள்ளியில் சேரும் 98.6 விகித மாணவர்கள் - 99.3 விகித மாணவிகள் தங்களின் அடுத்த நிலையான நடுநிலை கல்விக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 66.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 80.6 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களின் அடுத்தகட்ட உயர் கல்விக்கு செல்கின்றனர். அதாவது, மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் சிலர், தங்களின் உயர்க்கல்வி படிப்புகளுக்கு செல்வது தமிழகத்தில் குறைவாக குறைகிறது. இதனால் 12-ம் வகுப்புக்கு பிறகான படிப்பே கேள்விக்குறியாகிறது.




உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன்மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10 ம் வகுப்போடு தங்களின் பள்ளிக்கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 ஆக உள்ளது. 




இதை இந்திய அளவில் பார்த்தால், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளின் இடைநிற்றல் விகிதமானது 16 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இது 2.6 சதவிகிதமும்; 1 முதல் 5 வரையிலான ஆரம்பப் பள்ளிகளில் 1.5 சதவிகிதமும் உள்ளது. அதாவது, 10-ம் வகுப்புக்குப் பின் பல மாணவர்கள் 11, 12 வகுப்புக்கு செல்வதில்லை; அல்லது பலர் 10-ம் வகுப்பை முடிப்பதேயில்லை.



இதேபோல் தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 1.4 சதவிகிதமாகவும், மாணவிகளில் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவிகிதமாகவும் உள்ளது. இதுவே உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகளை விட மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்துள்ளது. மாணவிகளின் இடைநிற்றல் 5.6% ஆகவும், மாணவர்களின் இடைநிற்றல் 13.4% ஆகவும் இருந்துள்ளனர். 




இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 3.3 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிகையில் குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இடைநிற்றல் விகிதமானது 14.4 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், பீகாரில் 21.4 சதவிகிதம் இடைநிற்றல் விகிதம் உள்ளது. இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக பள்ளிகளும் அதிக மாணவர் சேர்க்கையும் உள்ளதென்பது இங்கே கவனிக்கத்தக்கது. வேதனை என்னவென்றால், அங்கும் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ மாணவியரும் அதிகம்.




அருணாச்சலப் பிரதேசம், அசாம், போன்ற மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் 30%-க்கும் அதிகமாக உள்ளன. குஜராத், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவின் விகிதத்தை விட அதிகமான இடைநிற்றல் விகிதத்தை பெற்றுள்ளன. இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவில் இடைநிற்றல் காணப்படும் மாநிலம் பஞ்சாப். பஞ்சாபின் இடைநிற்றல் விகிதம் 1.5% மட்டுமே. 




கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிகையும், இடைநிற்றல் விகிதமும் மேலும் அதிகரித்து வருவதாக கல்வியலாளர்கள் கூறுகின்றனர். 




ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இடைநிற்றல் விகிதத்தை எடுத்துக்கொண்டால், மாணவர்களை விட மாணவிகளின் இடைநிற்றல் விகிதமானது 2% குறைவாக உள்ளது. 




இடைநிற்றலுக்கான மற்றுமொரு காரணமாக, உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைவும் அமைகிறது. அதாவது, இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் 81.1 சதவிகித மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 80.1% மாணவர்களும், 82.3% மாணவிகளும் அடங்குவர். தமிழகத்தில் 90.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 94.4% பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.




மாணவர்களைப் பொறுத்தவரை, நடுநிலைப் பள்ளிகளில் 99.6% பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 86.7% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அசாம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உயர்நிலைப் பள்ளிகளில், மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.




இப்படியாக ஒரு வகுப்பில் தேர்வில் தோல்வி பெறும்போது, அவர்கள் இடையிலேயே பள்ளிப்படிப்பை மொத்தமாக முடித்துக்கொள்கின்றனர். இதுபோன்ற சூழலை தடுக்கவே தமிழகத்தில் 8ம் ஆண்டு வரை கட்டாய தேர்ச்சி உள்ளதென்பது நினைவுகூறத்தக்கது.




இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பஞ்சாப் (97.9), இரண்டாவது இடத்தில் கேரளா (92.0), நான்காவது இடத்தில் மணிப்பூர் (90.1) உள்ளது. புதுச்சேரி 89.9 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இக்காரணத்தினால், இங்கெல்லாம் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ, மாணவியர் பிற மாநிலங்களைவிட கொஞ்சம் குறைவாக உள்ளது. 




இந்தியாவில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது மொத்தமாக 2.8 சதவீதமாக உள்ளது. இதில், 2.9 சதவிகிதம் பெண்களும், 2.7 சதவிகிதம் ஆண்களும் அடங்குவர். இந்திய மாநிலங்களில், குறிப்பாக, டெல்லி, நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது அதிகமாகவே உள்ளது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதம் 0 சதவிகிதமாக உள்ளது.




இருப்பினும் பல மாநிலங்களில் குறிப்பாக (தேர்ச்சி பெறாதோர் 0% என்றிருக்கும் தமிழ்நாட்டு உட்பட) நடப்பாண்டில் தேர்ச்சி அடைந்தாலும், அடுத்த நிலை கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில், 14.15 சதவிகிதம் பேர் உயர்நிலைப் படிப்பிற்குப் பின், மேல்நிலைக் கல்விக்கு செல்வதில்லை என தெரியவந்துள்ளது. இதை இந்திய அளவில் பார்க்கும்போது, தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்கு 92.80%, நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு 91.4% பேர் சென்றாலும், உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றவர்களின் எண்ணிகையானது 71.60 சதவிகிதமாக உள்ளது. இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.




இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.




இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம், கல்விக் கட்டணம், மற்ற வசதிகளை எதிர்ப்பார்த்து பள்ளிகளை மாற்றம் செய்துவருபர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதாவது, எட்டாம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 9 மற்றும் 10 வகுப்பு ஒரு பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பள்ளியும் என மாற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளிகளில் தக்க வைப்பு விகிதமானது குறைந்துக் கொண்டே செல்கிறது.




இந்தியாவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்தவர்கள் 87% பேர் அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். ஆனால், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 40.2 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வியை தொடர்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர் மட்டும்தான் அதே பள்ளியில் 10-ம் வகுப்பை முடிக்கிறார்கள். அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில், 100 பேர் சேர்ந்தால் அதில் 68 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு வரை கல்வியை தொடர்வதாக தெரியவந்துள்ளது.




தமிழ்நாட்டில் 94.8% பேர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வந்தாலும், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 68.1% பேர் மட்டுமே அதே பள்ளியை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் சண்டிகர், கேரளா ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே 100% தக்கவைப்பு விகிதமானது காணப்படுகிறது. இதனால் சிக்கல் ஏதும் உருவாவதில்லை என்பதால், இது கவலைக்கொள்ள வேண்டாத தரவாகவே இருக்கிறது.




இங்கு நாம் கவலை கொள்ள வேண்டியது, இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவர்களைப் பற்றிதான். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய, பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இடைநிற்றலுக்கு உள்ளாக்காமல், அரசுப் பள்ளியில் சேர்க்கத் தொடங்க வேண்டும் என்கின்றனர் கல்வியலாளர்கள். தமிழகத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு பெருமளவில் இருக்கிறதென்பதே இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.




அந்தவகையில் சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில், பலர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. முறையான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வியையும் கொடுத்து அரசுப் பள்ளிகள் இனிவரும் காலத்தில் மாணவர்களை தக்க வைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பட்சத்தில் இடைநிற்றல் விகிதமென்பது பெருமளவில் குறையும். இல்லாதபட்சத்தில், இடைநிற்றல் அதிகரிக்கலாம். இந்திய அளவிலும் அரசு பள்ளி சார்ந்த விழிப்புணர்வும், இடைநிற்றலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வும் அரசு சார்பில் மக்கள் மத்தியில் அளிக்கப்பட வேண்டியது அவசியப்படுகிறது.




குழந்தைத் திருமணங்கள், குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பை தடுக்க, மாணவ, மாணவியரின் இடைநிற்றல் விகிதத்தை சரிசெய்தாலே போதும்.


இந்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தின் GER குறியீடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேர்ச்சிபெறாதோர் விகிதம், இடைநிற்றல் விகிதம், தக்கவைப்பு வீதம் போன்றவற்றை தெரிந்து கொண்டோம். அடுத்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, குடிநீருக்கான முக்கிய ஆதாரங்கள், ஆண்கள் - பெண்கள் கழிவறை வசதி, கைகழுவும் வசதி, மருத்துவ பரிசோதனை நடத்திய பள்ளிகள், சிறப்பு குழந்தைகளுக்கான படிகட்டுகளில் கைபிடிக்கும் கம்புகள் (handrails) மற்றும் வளைவுகளை (ramps) கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Warrant இல்லாமல் அரசுப் பேருந்துகளில் காவல் துறையினர் இலவசப்பயணம் செய்யக்கூடாது என DGP கடிதம்...

 Warrant இல்லாமல் அரசுப் பேருந்துகளில் காவல் துறையினர் இலவசப்பயணம் செய்யக்கூடாது என DGP கடிதம்...



கல்விக் கடன் பெறுவது எப்படி? (முழுமையான தகவல்கள்) How to Get Educational Loan? - Full Details...



 கல்விக் கடன் எப்படி வாங்கலாம்? கல்விக் கடன் மறுத்தால் யாரிடம் புகார் செய்வது? (முழுமையான தகவல்கள்) How to Get Educational Loan? - Full Details


>>> தகவல்களை கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.


உடனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒருபக்கம்... அப்படி கிடைத்துவிட்டால் படிப்புச் செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என்கிற கவலை இன்னொரு பக்கம்... மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கென கொஞ்சம் பணம் சேர்த்தவர்களை விட்டுவிடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன்தான்.


இந்த கல்விக் கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையில் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்?


அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத் துறை/ தேசிய அல்லது தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புள்ள கல்விப் பிரிவை தேர்வு செய்வது கல்விக் கடனை பெறுவதற்கு அடிப்படையான விஷயம்.


பிரிவைத் தேர்வு செய்வது போல, சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதிலும் கவனம் அவசியம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அருகில் இருக்கும் வங்கி மேலாளரை அணுகி கல்விக் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.



பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரியிருந்து Bonafide என்று சொல்லப்படுகிற சேர்க்கைக்கான ரசீதையும், Fees Structure என்று சொல்லப்படுகிற முழுப் படிப்புக்குமான செலவு விவரம் அடங்கிய சான்றிதழ்களையும் வாங்கி வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


இது தவிர, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக்காக குடும்ப அட்டையின் சான்றொப்பமிட்ட நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் முடிந்தவரை பிளஸ்டூ படித்து விடுமுறையில் இருக்கும்போதே தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வங்கிகளுக்கு பெற்றோருடன் சென்று கல்விக் கடன் குறித்து விசாரித்துவிடுவது நல்லது.


''கல்விக் கடன் பெற நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளையே முதலில் அணுகலாம். சேமிப்புக் கணக்கு இல்லாத வங்கிகளையோ, அறிமுகமே இல்லாத வங்கி களையோ நாடும் போது கல்விக் கடன் கிடைக்க, நேரம் நிறைய விரயமாகலாம். சிறிய ஊர்களில் இருப்பவர்கள் முன்னோடி வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற லாம்'' என்றார் ஐ.ஓ.பி. மேலாளர் கிருஷ்ணன்.


கல்விக் கடன்: யாருக்கு கிடைக்கும்?


இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பித்திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர் வாங்கிய மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்விக் கடன் கிடைக்கும்.


அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கும்.


எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள இளங்கலை படிப்புகள் (பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகள்), முதுகலை படிப்புகள் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள்) மற்றும் தொழிற்கல்விகள் (பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், மேலாண்மை போன்ற படிப்புகள்), ஐ.ஐ.டி., என்.ஐ.எஃப்.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புகள் மற்றும் சி.ஏ., சி.எஃப்.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகளுக்கும், டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் கிடைக்கும்.


ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயங்கவே செய்யும். அது மாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ்சுவதே இதற்கு காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாக கிடைக்காது.


கல்விக் கடன் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் அவசியமாக இருக்க வேண்டும்.


* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.


* வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகளாக கருதப்படும் கல்விகளைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.


* அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்திருக்க வேண்டும்.


* பிளஸ்டூ மதிப்பெண்கள் கூட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50%-ம், மற்ற பிரிவினருக்கு 60%-மாகவும் இருத்தல் அவசியம்.


எவ்வளவு கிடைக்கும்?


இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும்.


இதற்கு அதிகமாக கல்விக் கடன் தேவை எனில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலோ, அவர்கள் தேர்வு செய்திருக்கும் படிப்பின் எதிர்காலத்தின் அடிப்படையிலோ அல்லது பெற்றோர்களின் வருமான விகிதம் போன்ற அடிப்படை விஷயங்களை சரிபார்த்து அதிக கல்விக் கடன் கேட்கும் மாணவனுக்கு கடன் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதை வங்கியே முடிவெடுக்கும்.


கல்விக் கடன்: உத்தரவாதம் தேவையில்லை!


கல்விக் கடன் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இன்றைய தேதியில் தமிழகத்தில் பல மாணவ, மாணவிகளின் தேவை இதற்குள் அடங்கிவிடும் என்பதால் கல்விக் கடன் வாங்குகிற பெற்றோர்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவேண்டியதில்லை.


நான்கு லட்சத்திலிருந்து 7.5 லட்சம்வரை கல்விக் கடன் என்கிறபோது பெற்றோரில் ஒருவரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தரவேண்டி வரும். ஏழு லட்சத்துக்கு அதிகம் என்கிற போது தன் வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.


எந்த செலவு அடங்கும்?


வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள் முழுமையாக அடங்கும்.


* கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.


* தேர்வுக் கட்டணம், புத்தகம் மற்றும் ஆய்வகக் கட்டணம்.


* விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள்.


* மாணவர்களின் கல்விச் சாதனங்கள் மற்றும் சீருடைகள்.


* படிப்பிற்கான கம்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்கள்.


படிப்பில் கவனம் தேவை!


கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில், செமஸ்டர் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும்.


ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத்தப்படலாம். மீண்டும் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்ற பிறகே வங்கியிடமிருந்து கல்விக் கடனை எதிர்பார்க்க முடியும்.



கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதன் மூலம் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.


கல்விக் கடனை வழங்குவதற்காக அரசாங்கமே தனியாக ஒரு வங்கியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கல்விக் கடனுக்கான வங்கி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இந்த வங்கியில் மட்டுமே கல்விக் கடனை பெற முடியும். மற்ற வங்கிகளில் பெற முடியாது.


கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு தரப்படும் டிகிரி சான்றிதழில், எந்தவொரு மாணவன்/மாணவி கல்விக் கடன் வாங்கி படித்திருந்தாலும் இவர்கள் இந்த வங்கியில் கல்விக் கடன் வாங்கி படித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட போகிறார்களாம். இப்படி செய்யும் பட்சத்தில் கல்விக் கடன் வாங்கி படித்த மாணவன் வேலைக்குச் செல்கிற போது அந்த நிறுவனம் வங்கியைத் தொடர்பு கொண்டு கல்விக் கடன் வாங்கியிருக்கும் மாணவன்/மாணவியோ கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாம்.


கல்விக் கடன்: எப்படி திரும்பக் கட்டுவது?


கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிற காலத்திலேயே கட்ட வேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில்லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதம் கழித்தே வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஆரம்பித்தால் போதும். முழுக் கடனையும் திருப்பிச் செலுத்த குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவகாசம் தரப்படும். படித்து முடித்த பிறகு வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.


படிக்கும்போது வட்டி கட்ட தேவையில்லை!


கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அவர்களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் படிக்கும் காலத்தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.


அந்த கடனுக்கான வட்டியை அரசாங்கம் வங்கிகளுக்கு செலுத்திவிடும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட ஆரம்பிக்க வேண்டும். இந்த சலுகை வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடையாது.


கடனை சீராக கட்டினால் சலுகை!


இடைவிடாமல் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சதவிகித வட்டி சலுகை தரப்படும். பொதுவாகவே கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் கல்விக் கடனை மாதத் தவணையாகத்தான் கட்டி வருகி றார்கள். விரைவில் கடனை அடைக்க நினைப்பவர்கள் வேலையின் மூலம் எப்போதெல்லாம் பணம் கைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடனை அடைக்கலாம்.


வரிச் சலுகை என்ன?


திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட்டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக்காக கல்விக் கடன் பெறப்பட் டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச் சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் வரை கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம்.


கல்விக் கடன்: கட்டாமல் போனால்..?!


மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ, அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். காவல் துறை நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தைகூட வங்கி அணுகி, கடனை கட்டச் சொல்லலாம்.


வேலை கிடைக்காவிட்டால்..!


கல்விக் கடன் வாங்கி படித்த மாணவர், படித்து முடித்தபின் வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும். எனவே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கடனை கட்டாமல் விடலாம் என்று நினைக்க வேண்டாம்.


முதுநிலைக்கும் கடன்!


இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முதுநிலைப் படிப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சயம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந்தும்.


இன்ஷூரன்ஸ் அவசியம்!


கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முதலில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறுத்தும்.


ஏனெனில், மாணவருக்கு திடீரென்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.


கல்விக் கடன்: மறுக்க என்ன காரணம்?


கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்கப்படலாம்.


எல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந்த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.


யாரிடம் புகார் செய்வது?


''அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழையும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்'' என்கிறவர்கள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச்னையை எடுத்துச் சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு உரிய பதிலை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்னஞ்சல், இ-மெயில் அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்தலாம். அப்போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம்.


எளிதில் கடன் கிடைக்க..!


கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிகளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு- செலவு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


கல்விக் கடன் அடைபடுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய உரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வேண்டாம்!


>>> தகவல்களை கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அழகப்பா பல்கலைக்கழகம் ஆன்லைன் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு...



 காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஜூலை 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.



மாணவர் சேர்க்கை:

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர். கடந்த ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழக முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பெறப்பட்டு விட்டது. தற்போது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்க அரசு அறிவித்துள்ளது.


அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த மாதம் இறுதி வரை முதுகலை மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை மாணவர் சேர்க்கை குறித்து பல்கலையின் பதிவாளர் சி.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி, இளங்கலையில் மாணவர்கள் அனைத்து செமஸ்டர்களிலும் பெற்ற 3ம் பகுதி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.


முன்னதாகவே விண்ணப்பித்த மாணவர்கள் தற்போதும் விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் இணையத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களை உள்ளிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிக விவரங்களுக்கு admissions.alagappauniversity.ac.in/departmentsadmission  என்ற இணையதளத்தில் மற்றும், 04565-223111/113 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...