கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆகஸ்ட் 4 முதல் CAT தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள்...

 


CAT 2021க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. விண்ணப்ப செயல்முறை மற்றும் பிற விவரங்களை குறித்து பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CAT 2021:

ஐஐஎம்-களின் பல்வேறு முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு CAT தேர்வு ஒரு நுழைவு தேர்வாக உள்ளது. ஐஐஎம் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களும் CAT தேர்வு மதிப்பெண் பட்டியலை பயன்படுத்துகிறது.


அத்தகைய நிறுவனங்களின் பட்டியல் CAT இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐஐஎம் அல்லாத நிறுவனங்களின் தேர்வு செயல்பாட்டில் ஐஐஎம்களுக்கு எந்தப் சம்பந்தமும் இல்லை.


இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA- யுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் சதவீதம் அந்தந்த பல்கலைக்கழகம் / நிறுவனம் பின்பற்றும் நடைமுறையின் அடிப்படையில் கணக்கிடப்படும். இளங்கலை /சமமான தகுதித் தேர்வின் இறுதி ஆண்டு தேர்வர்கள் மற்றும் பட்டப் படிப்பை முடித்து முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். CAT 2021 தேர்வின் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 4ம் தேதியான நாளை காலை 10 மணி முதல் தொடங்கப்படுகிறது. அனைத்து வேட்பாளர்களும் iimcat.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CAT 2021க்கு விண்ணப்பிக்கலாம்.


CAT தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15, மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், தேர்வுகள் நவம்பர் 28 அன்று மூன்று அமர்வுகளில் நடைபெறும். நடப்பாண்டில் தேர்வு மொத்தம் 158 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது.


விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் முதலில் தனிப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க பதிவு செய்ய வேண்டும்.


விண்ணப்பப் படிவத்தை நிரப்ப உருவாக்கப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய வேண்டும்.


பதிவு மற்றும் விண்ணப்ப செயல்முறையை முடிக்க தேவையான விவரங்களை உள்ளிட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய பின் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


CAT 2021 தேர்வு முறை:

தேர்வு 120 நிமிடங்களில் மூன்று பிரிவாக நடத்தப்படும்.


பிரிவு I: வாய்மொழி திறன் மற்றும் வாசிப்பு புரிதல்

பிரிவு II: தரவு விளக்கம் மற்றும் தருக்க பகுத்தறிவு

பிரிவு III: அளவு திறன்


ஒவ்வொரு பிரிவிலும் கேள்விகளுக்கு பதிலளிக்க சரியாக 40 நிமிடங்கள் ஒதுக்கப்படும் மேலும் ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இன்றைய (04-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 04, 2021




குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : பிரச்சனைகள் நீங்கும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 04, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை அகலும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.


ரோகிணி : விழிப்புணர்வு வேண்டும். 


மிருகசீரிஷம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 04, 2021



தனவரவுகளின் மூலம் திருப்திகரமான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள். 


திருவாதிரை : அனுகூலம் உண்டாகும். 


புனர்பூசம் : ஒற்றுமை ஏற்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 04, 2021



தொழில் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். மனதிற்கு பிடித்தவர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும். 


பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


ஆயில்யம் : பொருட்சேர்க்கை ஏற்படும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 04, 2021



எந்த செயலையும் மனதைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் லாபம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : தைரியம் மேம்படும்.


பூரம் : மேன்மையான நாள். 


உத்திரம் : காரியங்கள் நிறைவேறும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 04, 2021



இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மக்கள் தொடர்புத்துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : இழுபறிகள் நீங்கும்.


அஸ்தம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


சித்திரை : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 04, 2021



எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். சகோதரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : புரிதல் உண்டாகும். 


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 04, 2021



புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூரிலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



விசாகம் : சிந்தனைகள் உண்டாகும். 


அனுஷம் : மாற்றமான நாள்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 04, 2021



அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : உதவிகள் கிடைக்கும்.


பூராடம் : சுறுசுறுப்பான நாள்.


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 04, 2021



உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செலவுகள் உண்டாகும்.  உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திராடம் : இன்னல்கள் குறையும். 


திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.


அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 04, 2021



புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : உற்சாகமான நாள். 


சதயம் : ஆதரவு கிடைக்கும்.


பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும். 

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 04, 2021



ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும். 


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 02-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடக் காணொளிகள்(I -VII Standard Tamil Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 02-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடக் காணொளிகள்...



முதலாம் வகுப்பு - அலகு 3 – மகிழ்வோடு கற்போம் - பகுதி 2 - https://youtu.be/H44rQPwgteM



இரண்டாம் வகுப்பு - அலகு 3 – பேசாதவை பேசினால் - https://youtu.be/Zs-lMEtLt_U



மூன்றாம் வகுப்பு - அலகு 7 – சான்றோர் மொழி - https://youtu.be/P7BHoKea-WY



நான்காம் வகுப்பு - அலகு 5 – முயல் அரசன் - https://youtu.be/gGBVFBUSgMA



ஐந்தாம் வகுப்பு - அலகு 1 – துணைப்பாடம் - என்ன சத்தம் - https://youtu.be/TPLmMa9NVmc



ஆறாம் வகுப்பு - அலகு 2 – திருக்குறள் - பகுதி 2 - https://youtu.be/Fd4M21Ip0f4?t=3765



ஏழாம் வகுப்பு -  அலகு 2 – கவிதைப் பேழை - காடு - https://youtu.be/xWjck4e9rV4


கல்வித் தொலைக்காட்சியில் (Kalvi TV) 02-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில்  02-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:



💥  தமிழ் - அலகு 1 - தமிழ் வரி வடிவ வளர்ச்சி - https://youtu.be/M_kFKRNa4uo



 💥 ஆங்கிலம் - Unit 1 - Prose - Hobby turns a successful career - https://youtu.be/SDn1JFj_ywY



 💥 கணக்கு - அலகு 5- வடிவியல் - நாற்கரம் வரைதல் - பகுதி 2 -  https://youtu.be/h1xnHNndGMs



💥 அறிவியல் - அலகு 17- உயிரியல் - தாவர உலகம் - பாசிகள் - https://youtu.be/Y_TwFI1yMoA



💥 சமூக அறிவியல் - அலகு 1- புவியியல் - பாறை மற்றும் மண் - பாகம் 2 - மண் - https://youtu.be/-aEhiOVaNmc



வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return) அபராதம் குறித்த தற்போதைய செய்தி...

 


வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return) அபராதம் குறித்த தற்போதைய செய்தி...


தற்போது (02.08.2021 முதல்) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அபராதம் விதிக்கப்படவில்லை. 01.08.2021  நிலை சரி செய்யப்பட்டு விட்டது. 2021-2022 Assessment Year க்கு ITR தாக்கல் செய்ய கடைசி தேதி 30.09.2021 என்று தெரிய வருகிறது.

 

>>> வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், 01-08-2021 அன்று ITR இணையதளம் அபராதம் விதிக்கிறது...



வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், ITR இணையதளம் அபராதம் விதிக்கிறது...



 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐடிஆர் இணையதளம் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செலுத்துவதாக அபராதம் விதிக்கிறது.


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்தாலும், ஐடிஆர் இணையதளம் வரி செலுத்துவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கிறது.


 வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234 எஃப் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிவு 234 எஃப்-ன் படி, வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் செலுத்த வேண்டும். 


ஞாயிற்றுக்கிழமை வருமான வரி கணக்கு தாக்கல் செய்த சில பயனர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 "கொரோனா தொற்றுநோயின் காரணமாக கால அவகாச நீட்டிப்பு" என மே மாதம் ஜூலை 31யிலிருந்து செப்டம்பர் 30 வரை தேதி நீட்டிக்கப்பட்டது. 


தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செலுத்த டிசம்பர் 31 வரை ரூ.5,000 மற்றும் அதன் பிறகு ரூ.10,000 செலுத்த வேண்டும். வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அபராதம் ரூ.1,000...


01.08.2021 அன்று வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling of Income Tax Returns) செய்யும் போது 234F ன் படி தண்டத்தொகை (Fees on delay in filing of return) ரூ.5000/- விதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது 31.07.2021 உடன் முடிவடைந்ததாக கருதப்பட்டு 01.08.2021 முதல் தண்டத்தொகை வருகிறது. எனவே ஒரு சில நாட்கள் காத்திருந்து பதிவு செய்தல் நன்று. வருமான வரித் துறை ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் 30.09.2021 ஆகும்...


ITR website charges fine for late payment even as last date extended to Sep 30...


Even though the government extended the last date for filing the income tax returns, the website is charging fine from the tax payers.


The fine is levied based on section 234F of the Income Tax Act. As per the section 234F, tax payers must pay a penalty for delay in filing Income Tax Returns.


Some users were asked to pay Rs. 1,000 on Sunday.


The date was extended to September 30 from July 31 in May itself as a "relief during the pandemic."


The late payment is charged with Rs. 5,000 till December 31 and Rs. 10,000 after that. If the income is less than 5 lakh, the fine is Rs. 1,000.


1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் மாதம் முழுவதற்குமான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு பட்டியல்... Kalvi TV Programs Schedule (Cue Sheet) for the entire month of August from 1st to 10th Standard...



KALVITHOLAIKAATCHI CUE SHEETS FOR CLASS - 1 to 10...


1ST WEEK - 02/08/2021 to 06/08/2021

2ND WEEK - 09/08/2021 to 13/08/2021

3RD WEEK - 16/08/2021 to 20/08/2021

4TH WEEK - 23/08/2021 to 27/08/2021


Kalvi TV Programs Schedule (Cue Sheet) for the entire month of August from 1st to 10th Standard...


>>>  1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் மாதம் முழுவதற்குமான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு பட்டியல்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...