கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (04-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 04, 2021




குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : பிரச்சனைகள் நீங்கும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 04, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை அகலும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.


ரோகிணி : விழிப்புணர்வு வேண்டும். 


மிருகசீரிஷம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 04, 2021



தனவரவுகளின் மூலம் திருப்திகரமான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள். 


திருவாதிரை : அனுகூலம் உண்டாகும். 


புனர்பூசம் : ஒற்றுமை ஏற்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 04, 2021



தொழில் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். மனதிற்கு பிடித்தவர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும். 


பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


ஆயில்யம் : பொருட்சேர்க்கை ஏற்படும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 04, 2021



எந்த செயலையும் மனதைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் லாபம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : தைரியம் மேம்படும்.


பூரம் : மேன்மையான நாள். 


உத்திரம் : காரியங்கள் நிறைவேறும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 04, 2021



இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மக்கள் தொடர்புத்துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : இழுபறிகள் நீங்கும்.


அஸ்தம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


சித்திரை : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 04, 2021



எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். சகோதரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : புரிதல் உண்டாகும். 


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 04, 2021



புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூரிலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



விசாகம் : சிந்தனைகள் உண்டாகும். 


அனுஷம் : மாற்றமான நாள்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 04, 2021



அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : உதவிகள் கிடைக்கும்.


பூராடம் : சுறுசுறுப்பான நாள்.


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 04, 2021



உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செலவுகள் உண்டாகும்.  உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திராடம் : இன்னல்கள் குறையும். 


திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.


அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 04, 2021



புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : உற்சாகமான நாள். 


சதயம் : ஆதரவு கிடைக்கும்.


பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும். 

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 04, 2021



ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும். 


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...