கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இரண்டரை மாதங்கள் கடந்த பின்பும், 21-08-2021அன்று இயங்காத வருமானவரி இணையதளம்(Income Tax E-filing Portal) - குறைபாடுகள் குறித்து இன்போசிஸ்(Infosys) நிறுவன தலைமை அலுவலர்(MD & CEO Mr.Salil Parekh) நேரில் ஆஜராகி நிதியமைச்சருக்கு விளக்கம் அளிக்க உத்தரவு...
இரண்டரை மாதங்கள் கடந்த பின்பும், 21-08-2021அன்று இயங்காத வருமானவரி இணையதளம் - குறைபாடுகள் குறித்து இன்போசிஸ் நிறுவன தலைமை அலுவலர் நேரில் ஆஜராகி நிதியமைச்சருக்கு விளக்கம் அளிக்க உத்தரவு...
தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி (DSE - NSP KYC Updating Instructions) இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:031551/எம்/இ4/2021, நாள்:17-08-2021...
பள்ளிக் கல்வி - NSP இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவு செய்து KYC படிவத்தை பூர்த்தி செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:031551/எம்/இ4/2021, நாள்:17-08-2021...
ஒவ்வொரு ஆண்டும் , NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , தெரிவுசெய்யப்பட்ட , ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு NMMS கல்வி உதவித்தொகை மத்திய கல்வி அமைச்சகத்தால் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் ( DBT ) வரவு வைக்கப்படுகிறது.
இதற்காக , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( DNO ) மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ( INO ) தங்களது ஆதார் விவரங்களை NSP இணைய தளத்தில் உள்ளீடு செய்து , (KYC ) படிவத்தை தவறாமல் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி , ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் 2021 , ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு UDISE பள்ளிக் குறியீட்டிற்கு ஒரு தலைமை ஆசிரியரின் ஆதார் விவரங்கள் மட்டுமே NSP இணையதளத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே , இப்பணியை அனைத்து தலைமை ஆசிரியர்களும் மிகுந்த கவனத்துடன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:031551/எம்/இ4/2021, நாள்:17-08-2021...
இன்றைய (23-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஆகஸ்ட் 23, 2021
எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். சக பணியாளர்களால் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : ஆர்வம் ஏற்படும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 23, 2021
தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரிலிருந்து புதிய வேலைகள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளின் தன்மைகளை அறிந்து வித்தியாசமான செயல்முறைகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 23, 2021
திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 23, 2021
பயணங்கள் தொடர்பான செயல்களில் காலதாமதம் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : பதற்றமின்றி செயல்படவும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 23, 2021
வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மகம் : அனுபவம் மேம்படும்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 23, 2021
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 23, 2021
குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். மனதில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 23, 2021
சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுயதொழிலில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 23, 2021
குறுகிய தூர பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத சுபவிரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : திருப்தியான நாள்.
உத்திராடம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 23, 2021
தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் கவலைகள் நீங்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் உண்டாகும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : புகழ் அடைவீர்கள்.
திருவோணம் : கவலைகள் நீங்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 23, 2021
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : நன்மை ஏற்படும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 23, 2021
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். எதிர்பாராத சில விரயங்களின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி : காலதாமதங்கள் அகலும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வுக்கு பின் புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி(New teachers will be appointed after teachers transfer counselling - School Education Minister )...
ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வுக்கு பின் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது :
தமிழக முதல்வர் அறிவித்தபடி செப்டம்பர் 1இல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு , முதல்வர் அறிவுரைப்படி காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.
இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதில் கவனமுடன் செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இசை ஆசிரியர் பயிற்சி, பட்டம் & பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்(Those who have passed Class X and Class XII can apply for Music Teacher Training, Degree & Diploma in Tamil Nadu Government College of Music)...
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இசை ஆசிரியர் பயிற்சி, பட்டம் & பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இல.கணேசன் அவர்கள் நியமனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து (Ila.Ganesan appointed Governor of Manipur - Chief Minister MK Stalin's congratulations)...
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
இதற்கான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பாஜக தேசியக் குழு உறுப்பினராக இருக்கிறார். தமிழக பாஜக தலைவராக இருந்திருக்கிறார்.
>>> முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...