கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2021 - வியாழன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி

குறள் : 415

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

பொருள்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

பழமொழி :

A man of course never wants a weapon.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

யாரிடமும் கடுமையாக ப் பேசக்கூடாது.அப்படிப் பேசினால் நம் சுபாவமும் அவ்வாறாகிவிடும்.நாவை அடக்கினால் தான் நாடி வருவோர் நிலைப்பர்....அன்னை சாரதா தேவி

பொது அறிவு :

1.அதிகமான பரப்புகளை பார்க்க உதவும் ஆடி எது?

குவி ஆடி.

2.பூமியிலிருந்து செயற்கைக்கோள் சென்ற வழியைத் துல்லியமாக அறிய உதவும் விதி எது?

டாப்ளர் விளைவு.

English words & meanings :

Sight - ability to see. பார்க்க முடிதல். 

Site - a location or place. இட‌ம்.

ஆரோக்ய வாழ்வு :

வீட்டில் ஜூஸ் தயாரிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...!



நீங்கள் வீட்டில் ஜூஸ் போட ஜூஸர் மிக்ஸர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த மிக்ஸர் கண்டிப்பாக சூடாக இருக்கக்கூடாது. அதனை உறுதிப்படுத்திய பின்னரே ஜூஸ் போட வேண்டும்.

வீட்டிலேயே ப்ரஷ் ஜூஸ் போட்டு குடிக்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வெப்பநிலை மட்டுமே. பெரும்பாலானோர், ப்ரஷ் ஜூஸில் ஐஸ் போட்டு குடிப்பதையே விரும்புவர். ஆனால், அது மிகவும் தவறான விஷயம். எப்போதுமே, ஜூஸை சாதாரண வெப்பநிலையில் தான் குடிக்க வேண்டும்.

வீட்டில் தயாரித்த ப்ரஷ் ஜூஸை ஒதுபோதும் ப்ரிட்ஜில் வைக்கவே கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ப்ரஷாக அரைத்த ஜூஸை ப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் பழச்சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை குறைத்துவிடும்.

பொதுவாக ஜூஸ் போடும் போது அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. பழங்களில் ஏற்கனவே போதுமான அளவு இயற்கை சர்க்கரை இருக்கும். 

காய்கறி ஜூஸ் குடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் அதில் உப்பு அல்லது சுவையை அதிகரிக்க வேறு எந்த மசாலாவையும் சேர்க்கக்கூடாது.

கணினி யுகம் :

Shift + F3 - Change case of selected text. 

Shift + F7 - Activate the thesaurus


நீதிக்கதை

 ஜெகனின் புதுசட்டை


பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான். 

ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான். 

பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான். 

ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான். 

ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது. 

ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு. 

என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன். 

ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு. 

அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான். 

உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன். 

கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான். 

எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு. 

நீதி :

முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது. 

இன்றைய செய்திகள்

07.10.21

◆அஞ்சல் துறையில் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டது; அன்னைத்தமிழுக்கு கிட்டியது வெற்றி: சு.வெங்கடேசன் எம்.பி. 

◆திருச்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.

◆வேளாண் பல்கலைகழகத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு: நவம்பர்2-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு.

◆கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் இயல்புக்குத் திரும்பவும், கற்றல் இழப்பில் இருந்து மீளவும் பல்வேறு வழிமுறைகளை எம்.பி.க்கள், கல்வியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

◆முதுகலை நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது.


◆8-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் டிசம்பர் 22-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது.

◆டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா. 

Today's Headlines

 🌸 Hindi dumping in the postal sector was thwarted;  Annaitamil won: S. Venkatesh MP

🌸 The Vice-Chancellor of the Central University of Tamil Nadu said that steps are being taken to set up a subsidiary campus of the Central University of Tamil Nadu on an area of ​​about 25 acres in Trichy.

 🌸Extension of the application deadline for admission to Agricultural University: Publication of ranking list on November 2.

 ,🌸 MPs and educationist have suggested various ways for students to return to normal and recover from learning loss, as schools are closed due to corona.

 🌸The changes made in the Postgraduate Need Super Specialty Examination will be implemented from the 2022-23 academic year, the Central Government has said in the Supreme Court.

 🌸The UN predicts that 500 billion people worldwide will have access to water by 2050.  Warned in one of the thesis.

🌸 The 8th Pro- Kabaddi League Series will be held in Bangalore from December 22.

 🌸 Rohit Sharma became the first Indian to hit 400 sixes in T-20 cricket.

Prepared by
Covai women ICT_போதிமரம்

கல்வி தொலைக்காட்சியில் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் வகுப்பு மற்றும் பாடவாரியான கால அட்டவணை (Kalvi TV - October Month Telecast Details - October-2021 Cue Sheet)...



>>> கல்வி தொலைக்காட்சியில் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் வகுப்பு மற்றும் பாடவாரியான கால அட்டவணை (Kalvi TV - October Month Telecast Details - October-2021 Cue Sheet)...


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 04-10-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான தமிழ்(Tamil) பாடக் காணொளிகள்(Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 04-10-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - அலகு-1-ஐலசா ஐலசா- https://youtu.be/vZQ39rGl6xw



💥 இரண்டாம் வகுப்பு - அலகு-1-என் நினைவில்- https://youtu.be/6MzEeGQpZH8



💥 மூன்றாம் வகுப்பு-அலகு -1-உண்மையே உயர்வு- https://youtu.be/1x8nZJtjafs



💥 நான்காம் வகுப்பு - அலகு --1-காவல் காரர்- https://youtu.be/Bi4PdrTTm7U



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 1-நானும் பறக்கப் போகிறேன்- https://youtu.be/Ss82-SghA5s

12.10.2021 அன்று நடைபெற உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள் (Agenda of the Review Meeting for Chief Educational Officers to be held on 12.10.2021)...



 >>> 12.10.2021 அன்று நடைபெற உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள் (Agenda of the Review Meeting for Chief Educational Officers to be held on 12.10.2021)...

பள்ளிக் கல்வித் துறை - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 12.10.2021 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Department of School Education - Proceedings of the Commissioner of School Education based on the review meeting for all Chief Educational Officers and District Educational Officers to be held on 12.10.2021 in Chennai) ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 05-10-2021...



 பள்ளிக் கல்வித் துறை - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 12.10.2021 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Department of School Education - Proceedings of the Commissioner of School Education based on the review meeting for all Chief Educational Officers and District Educational Officers to be held on 12.10.2021 in Chennai) ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 05-10-2021...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 05-10-2021...


>>>  12.10.2021 அன்று நடைபெற உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள் (Agenda of the Review Meeting for Chief Educational Officers to be held on 12.10.2021)...


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Transfer Counselling for District Educational Officers on 12.10.2021 - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 05-10-2021...

 


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Transfer Counselling for District Educational Officers on 12.10.2021 - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 05-10-2021...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 05-10-2021...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2021 - புதன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.10.21

  திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி. 

குறள் : 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

பழமொழி :

A little knowledge is a dangerous thing.


அரை வைத்தியம் ஆபத்தில் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

நீங்கள் பிறரிடம் எதை செலவு செய்கிறீர்களோ அதைவே நீங்கள் சம்பாதிப்பீர்கள். அன்பும் பகையும் இரட்டிப்பாகும் செலவுகள் ஆகும்....விவேகானந்தர்.

பொது அறிவு :

1.கிரிக்கெட் பீட்சின் நீளம் எவ்வளவு?

 22 கெஜம்.

2.கிரிக்கெட் ஸ்டம்பின் உயரம் எவ்வளவு?

27 அங்குலம்.

English words & meanings :

Metre - SI unit of length. நீளத்தின் அலகு. 

Meter - measuring device. அளக்கும் கருவி.

ஆரோக்ய வாழ்வு :

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் தேன்...!!




*தேனுடன் சுண்ணாம்பைக் கலந்துநன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால்ஆறாத புண்கள் ஆறிவிடும்.

 * கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிடகீழ் வாதம் போகும். வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

 * தேனோடு பாலோஎலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும்கல்லீரல் வலுவடையும்.

 * அரை அவுன்ஸ் தேனுடன்அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வரஇரத்த சுத்தியும்இரத்த விருத்தியும் ஏற்படும்நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

 * அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரகுணமாகும்முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

கணினி யுகம் :

Ctrl + Alt + 2 - Change text to heading 2

Ctrl + Alt + 3 - Change text to heading 3

அக்டோபர் 6

புலமைப்பித்தன்  அவர்களின் நினைவுநாள்  


புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.  புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

நீதிக்கதை

  தங்கத்தூண்டில்


ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம். 

அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான். 

அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான். 

இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான். 

பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு. 

தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ். 

ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது. 

நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.21

 ◆இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது: 30,000 மாணவர்கள் பங்கேற்பு.

◆தேசிய நெடுஞ்சாலையில் 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ரத்து; 60 முதல் 100 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு.

◆சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் நிவர்த்தி செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

◆அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக உரிய மாற்றங்களை செய்யவேண்டும் என்று பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்.

◆தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அதன் விதிமுறைகளுடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

◆உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 10 ஆண்டுகளில் 14% பவளப்பாறைகள் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

◆இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரணத்தால் லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று உள்ளார்.

◆உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்.

Today's Headlines

 🌸 Phase II Engineering counseling started: 30,000 students participated.

 🌸100 to 120 km speed on the National Highway was Cancelled by Federal Government. The High Court verdict to give the order for only 60 to 100 km speed limit.                                                                            

 🌸A new facility has been launched at the Chennai Regional Passport Office to address passport-related complaints and grievances through WhatsApp video calls.

 🌸 The Tamil language has been removed from post office forms.  S. Venkatesh M . P wrote a letter to the General Manager that appropriate changes should be made immediately. 

 🌸 The Ministry of Road Transport and Highways has announced the establishment of the National Road Safety Board with its regulations.

 🌸Scientists say that 14% of worldwide coral reefs have been destroyed in 10 years due to climatic changes. 

 🌸 Lovelina Borgohain has qualified directly for the Women's World Boxing Championships after winning a bronze medal at the Tokyo Olympics in June this year.

 🌸 World Cup Sniper: Namya Kapoor of India wins gold at the age of 14.
Prepared by
Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...