கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதி திராவிடர் & பழங்குடியினர் மாணவர்களுக்கான Post Graduate Level Professional Coursesக்கு கல்வி உதவித்தொகை ரூ.13500ஆகவும், போஸ்ட் மெட்ரிக் (+1, +2 வகுப்புகள்) கல்வி உதவித்தொகை ரூ.4000 ஆகவும் உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 107, நாள்: 14-12-2021 வெளியீடு (Adi Dravidar & Tribal Student Post Graduate Level Professional Courses Scholarship increased to Rs.13500 and Post Matric (+1, +2 Classes) Scholarship increased to Rs.4000 - G.O. Released)...



>>> ஆதி திராவிடர் & பழங்குடியினர் மாணவர்களுக்கான Post Graduate Level Professional Coursesக்கு கல்வி உதவித்தொகை ரூ.13500ஆகவும், போஸ்ட் மெட்ரிக் (+1, +2 வகுப்புகள்) கல்வி உதவித்தொகை ரூ.4000 ஆகவும் உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 107, நாள்: 14-12-2021 வெளியீடு (Adi Dravidar & Tribal Student Post Graduate Level Professional Courses Scholarship increased to Rs.13500 and Post Matric (+1, +2 Classes) Scholarship increased to Rs.4000 - G.O. Released)...


திருநெல்வேலி மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Tirunelveli Zonal Level Review Meeting - District wise Review Officers Appointed - School Education Commissioner Proceedings ) ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 20-12-2021...

 


>>> திருநெல்வேலி மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Tirunelveli Zonal Level Review Meeting - District wise Review Officers Appointed - School Education Commissioner Proceedings ) ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 20-12-2021...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-12-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.12.21

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்: அமைச்சியல்


அதிகாரம்: அவை அஞ்சாமை


குறள் எண்: 728


குறள்:

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.



பொருள்:


நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்



பழமொழி :

Don't judge the worth of a person by their size.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 


2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்


பொன்மொழி :


வழி இருப்பது உண்மை தேடுவது நம் திறமை



பொது அறிவு :


1. இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது? 


ஆந்திரப்பிரதேசம். 


2. புளூட்டோ தனது கோள் என்ற தகுதியை இழந்த ஆண்டு எது? 


2006.


English words & meanings :


A path of democracy - ஜனநாயக பாதை, 


Absolute monarchy - முழு அதிகாரமுடைய முடியாட்சி

ஆரோக்ய வாழ்வு :


அவரைக்காயில் புரதம் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது .மலச்சிக்கலைப் போக்குகிறது.

கணினி யுகம் :


Switch the video to full-screen or theater mode


*Pressing the F key switches between full-screen and normal mode.


Tip


Pressing Esc also exits the full-screen mode.


*Pressing the T key switches between theater mode and normal mode.


டிசம்பர் 21


ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்


எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 21, 1972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.


2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.


நீதிக்கதை


நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி


ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 


அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.


ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.


தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.


சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். 


பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.


எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.


அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.


காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.


அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.


இன்றைய செய்திகள்


22.12.21


🔴 பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. 


🔴 தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை மீண்டும் விஞ்சிய கோவை!


🔴 தொண்டை மண்டலத்தை இயற்கை வேளாண் மண்டலமாக்குவதுதான் இலக்கு!' - THOFA நடத்தும் வேளாண் திருவிழா


🔴 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி முனீஸ்வரி பயின்று வருகிறார். இவர் சோழர் காலத்து ஈழக்காசுகளை கண்டெடுத்தார் ; இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 


🔴 பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


🔴 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா



Today's Headlines


🔴  For the festival of Pongal total 16,768 special buses are planned to operate


🔴  In the daily status of Corona Covai upbeat Chennai


🔴  Our goal is to turn Thondai Zone into Natural Agriculture Zone - THOFA conducts Agri Festival


🔴  In Ramnad District at Thirupullani school a plus two student found out Srilangan coins which belong to the period of Chozha. She receives heaps of congratulations.


🔴  Famous Tennis Player Rafael Natal is having Corona positive.


🔴  In Asian Championship Cup India defeated Japan and confirm its 3rd victory


 Prepared by


Covai women ICT_போதிமரம்

இன்றைய (21-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 21, 2021




நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனதில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பரணி : பயணம் மேற்கொள்வீர்கள்.


கிருத்திகை : முடிவுகள் சாதகமாகும்.

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 21, 2021




செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அலுவலக ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.


ரோகிணி : கனவுகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 21, 2021




பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். அசதியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 


திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.


புனர்பூசம் : பிரச்சனைகள் தீரும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 21, 2021




மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.



புனர்பூசம் : விருப்பம் நிறைவேறும்.


பூசம் : வரவுகள் கிடைக்கும். 


ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும். 

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 21, 2021




ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு நீடிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரம் : அனுகூலம் உண்டாகும். 


உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 21, 2021




பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வேலை விஷயமாக நல்ல செய்திகள் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.


அஸ்தம் : உதவி கிடைக்கும். 


சித்திரை : ஆதரவான நாள்.

---------------------------------------




துலாம்

டிசம்பர் 21, 2021




பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் உண்டாகும்.  வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பயணம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


சுவாதி : மாற்றங்கள் உண்டாகும். 


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 21, 2021




சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.  பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.  தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.  


கேட்டை : நட்பு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

டிசம்பர் 21, 2021




புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. சிந்தனைகளில் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 



மூலம் : காலதாமதம் உண்டாகும்.


பூராடம் : அனுசரித்து செல்லவும். 


உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

டிசம்பர் 21, 2021




மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்வீர்கள். முயற்சிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : முன்னேற்றமான நாள். 


திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

டிசம்பர் 21, 2021




நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூழல் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : புரிதல் உண்டாகும். 


சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

டிசம்பர் 21, 2021




அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். மனதில் எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். தொழில் ரீதியான நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில்  விழிப்புணர்வு வேண்டும். சுபமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


ரேவதி : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------


ஆசிரியர்களிடம் இருந்து கைவிட்டுப் போன அதிகாரம் - தடம் மாறுகிறதா மாணவ சமுதாயம்? - சமூக விரோத செயல்களில் ஈடுபாடு அதிகரிப்பு - ஒதுங்க நினைக்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி (Abandoned Power from Teachers - Is Student Society Changing Tracks? - Increased Involvement in Anti-Social Activities - Teachers Who Think to Set aside - Paper News)...



>>> ஆசிரியர்களிடம் இருந்து கைவிட்டுப் போன அதிகாரம் - தடம் மாறுகிறதா மாணவ சமுதாயம்? - சமூக விரோத செயல்களில் ஈடுபாடு அதிகரிப்பு - ஒதுங்க நினைக்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி (Abandoned Power from Teachers - Is Student Society Changing Tracks? - Increased Involvement in Anti-Social Activities - Teachers Who Think to Set aside - Paper News)...

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் (Teachers Transfer Counselling ) - விரைவில் விண்ணப்ப பதிவு (நாளிதழ் செய்தி)...

 


>>> ஆசிரியர்களுக்கு இடமாறுதல் - விரைவில் விண்ணப்ப பதிவு (நாளிதழ் செய்தி)...


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டாவது இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்று, ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, கவுன்சிலிங்கை நடத்துவதற்கான விதிமுறைகளை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், இனி ஒரே இடத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் போன்ற உத்தரவுகள் உள்ளது.



இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங்கை ஜனவரியில் நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு விரைவில் துவங்கும் என்றும், கவுன்சிலிங் அட்டவணை இன்று வெளியாகும் என்றும் தெரிகிறது.

இல்லம் தேடிக் கல்வி - பயிற்சிக் கட்டகம் - உயர் தொடக்கநிலை (6-8) வகுப்புகள் - தொகுதி I [ Illam Thedi Kalvi (ITK) - Training Module - Upper Primary (6-8) Classes - Volume I]...

 


>>> இல்லம் தேடிக் கல்வி - பயிற்சிக் கட்டகம் - உயர் தொடக்கநிலை (6-8) வகுப்புகள் - தொகுதி I [ Illam Thedi Kalvi (ITK) - Training Module - Upper Primary (6-8) Classes - Volume I]...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...