கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசின் அறிவுரைகளை மீறி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Disciplinary action will be taken against the schools concerned, if students from class I to VIII are invited to the school and conduct classes in violation of the instructions of the Government of Tamil Nadu - Proceedings of the Dindigul District Chief Educational Officer)பி.சி.எண்: 10/2022, நாள்: 04-01-2022...

 



>>> தமிழ்நாடு அரசின் அறிவுரைகளை மீறி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Disciplinary action will be taken against the schools concerned, if students from class I to VIII are invited to the school and conduct classes in violation of the instructions of the Government of Tamil Nadu - Proceedings of the Dindigul District Chief Educational Officer)பி.சி.எண்: 10/2022, நாள்: 04-01-2022...


இல்லம் தேடிக் கல்வி - இயல்பான வகுப்பறை செயல்பாடுகளை பதிவிடுவதற்கு தனியான முகநூல் குழு (Illam Thedi Kalvi Scheme - A separate Facebook group for posting normal classroom activities)...



 தன்னார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.!


இயல்பான வகுப்பறை செயல்பாடுகளை பதிவிடுவதற்கு தனியான முகநூல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதில் பதிவிடுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். முகநூல் குழுவில் இணைப்பு:

https://www.facebook.com/groups/266220495428469/?ref=share



இந்த குழுவின் நெறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை தனியான ஒரு குழுவிற்கு பார்வேர்ட் செய்து வைக்கின்றனர். தெரிவுசெய்யப்பட்ட வீடியோக்களையும் படங்களையும் நீங்கள் அதில் பார்க்கலாம். அதன் மூலம் வகுப்புக்கு புதிய கருத்துக்கள் கிடைக்கும். 

அந்தக் குழுக்களின் இணைப்பு :


ITK Selected Images : https://t.me/+gmR_ANVvN-gzYTBl


ITK Selected Videos : https://t.me/+4bxmAfpyTh5jNzA1

இல்லம் தேடிக் கல்வி திட்டம் - சிறப்பான செயல்பாடுகளின் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான குறைகள் தீர்க்க தனித்தனி டெலிகிராம் குழுக்கள் (Illam Thedi Kalvi Scheme - Separate Telegram Groups for Special Activities Videos, Photos and Volunteers Grievances)...

 


அன்பார்ந்த இல்லம் தேடிக் கல்வி தன்னார்வ தொண்டர்களே!


இந்தக் குழுவில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் இருப்பதால் நிறைய பதிவுகள் வருகின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களில் நெறியாளர்கள் (Moderator) ஆக செயல்பட விருப்பம் தெரிவித்த சிலர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


நெறியாளர்கள் கீழ்க்கண்ட பணிகளை செய்வார்கள்.


1) தன்னார்வலர்கள் சிறந்த பதிவுகளை அடையாளம் கண்டு அந்த  பாராட்டுவார்கள்.


2) தேவையில்லாத வீடியோக்கள் மற்றும் படங்களை நீக்குவார்கள்


3) இயல்பான பதிவுகளை பதிவு செய்யும் முகநூல் குழுவில் இணைய ஆலோசனை மற்றும் இணைப்பு பகிர்வார்கள். 


4) மற்றவர்களுக்கு பயனளிக்கும் மிகச் சிறந்த வீடியோக்களையும், படங்களையும் தேர்ந்தெடுத்து இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ITK Selected Videos, ITK Selected Images குழுவிற்கு ஃபார்வேர்ட் செய்வார்கள். இந்த குழுக்களில் நெறியாளர்கள் மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். மற்ற பங்கேற்பாளர்கள் பதிவுகளை பார்க்க மட்டும் இயலும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்களை பார்ப்பதால் தன்னார்வலர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் இருக்கும் குழுவின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து உறுப்பினர்களும் அந்த குழுக்களில் இணைந்து கொள்ளலாம்.

I

TK Selected Videos: https://t.me/+4bxmAfpyTh5jNzA1


ITK Selected Images: 

https://t.me/+gmR_ANVvN-gzYTBl



5) தன்னார்வலர்களின் குறைகள் மற்ற பதிவுகளில் காணாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே தன்னார்வலர்களின் குறைகளை மட்டும் தனியாக பார்வர்டு செய்வதற்கு ITK volunteer grievances என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது அதில் தன்னார்வலர்கள் குறைகளை நெறியாளர்கள் ஃபார்வர்ட் செய்வார்கள். அந்த குறைகளைத் தீர்க்க ஒரு அலுவலர் குழு செயல்படும்.

ITK Volunteers Grievances: https://t.me/+XuTCWvIX4QQ5OGVl


6) RP Moderator‌, Teacher Moderator, CSO Moderator ஆகியோர் தன்னார்வலர்களின் கல்விச் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுவார்கள். இவர்களின் வழிகாட்டுதல்கள் மிகவும் முக்கியமானது. 


இதுதவிர அவ்வப்பொழுது வழங்கப்படும் புதிய பணிகளை நெறியாளர்கள் செய்வார்கள்.


அனைத்து தன்னார்வலர்களும் இல்லம் தேடிக் கல்வி இயக்கத்தை வெற்றிகரமாக மாற்ற முழு மனதுடன் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


க.இளம்பகவத்.

சிறப்புப் பணி அலுவலர்

இல்லம் தேடிக் கல்வி.

இல்லம் தேடிக் கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கான டெலிகிராம் குழு (Illam Thedi Kalvi - Official Telegram Group for Volunteers)...

 


இல்லம் தேடிக் கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கான டெலிகிராம் குழு...


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்களது கல்வி செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் டெலகிராம் குழு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள், சமூகப்பணி அமைப்பின் பிரதிநிதிகள், இணைந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். 


இந்த குழுவின் நோக்கங்கள்:-


1. தன்னார்வலர்களுக்கு புதிய கல்வி உத்திகளை பகிர்வது.


2. தன்னார்வலர்கள் தாங்கள் செய்யும் சிறப்பான கற்பித்தல் செயல்பாடுகளைப் பகிர்வது.


3. சிறந்த தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துவது.


4. மாநில திட்ட இயக்குனரகத்திலிருந்து  தகவல்களை நேரடியாக தன்னார்வலர்களுக்கு தெரியப்படுத்துவது.


5. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்த களத்தில் இருந்து ஆலோசனைகள் பெறுவது.


6. தன்னார்வலர்களின் குறை தீர்த்தல். 


இந்த டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ள Telegram ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். பிறகு கீழிருக்கும் லிங்க் வழியாக இந்தக் குழுவில் இணையலாம். 


இந்த தகவலை அனைத்து தன்னார்வலர்களுக்குத் தெரியப்படுத்தி டெலிகிராம் குழுவில் இணைக்கவும். 


Link: 

https://t.me/+h4DsqIH4cUw3NGFl


அன்புடன்...


க.இளம்பகவத், இ.ஆ.ப.,

சிறப்புப் பணி அலுவலர்,

இல்லம் தேடிக் கல்வி.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000 - பெற நிபந்தனைகள் மற்றும் தேவையான விவரங்கள் - சிறப்புப் பணி அலுவலர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்களின் அறிவிப்பு (Illam Thedi Kalvi Scheme - Rs.1000 per month as an incentive for volunteers - Conditions and Required Details - Special Task Officer Mr. K. Ilambagavath I.A.S. announcement)...

 


அன்பார்ந்த தன்னார்வலர்களே!


தாங்கள் இல்லம் தேடிக் கல்வியில் இணைந்து  அளப்பரிய பணியைச் செய்து வருகிறீர்கள்! பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நமது குழந்தைகளின் கல்வியை மீட்பதற்கு உங்களது பணி மகத்தானது!


பல தன்னார்வலர்கள் தங்களது சுய முயற்சியால் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்களை உருவாக்கி சிறப்பாக கற்பித்து வருகிறீர்கள். தாங்கள் அப்பணியை மென்மேலும் சிறப்பாக செய்து வர ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- வழங்கப்படும். 


டிசம்பர் மாதம் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளைத் தொடங்கி குறைந்தபட்சம் 20 நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ள  தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை தற்பொழுது விடுவிக்கப்படுகிறது.


இதற்காக தன்னார்வலர்கள் தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை இல்லம் தேடிக் கல்வி கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான ஆப்ஷன் நாளை முதல் செயலியில் ஆக்டிவேட் செய்யப்படும்.  


தன்னார்வலர்களுக்கு தனியான வங்கி கணக்கு இல்லை எனில் புதிய  வங்கி கணக்கு ‌ஒன்றினைத் தொடங்கி பதிவேற்றம் செய்க. 


தன்னார்வலர்களின் பெயர், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட், ஆகியவற்றுடன் வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்த விவரங்கள்‌ இடம்பெற்றுள்ள பக்கத்தை புகைப்படம் எடுத்து எடுத்து இல்லம் தேடிக் கல்வி கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  


நம் குழந்தைகளின் கல்வியைக் காப்போம்!


க.இளம்பகவத் இ.ஆ.ப,

சிறப்புப் பணி அலுவலர்

இல்லம் தேடிக் ‌கல்வி.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ஒமைக்ரான் தொடர்பாக ஏதாவது பெரும் செலவு ஏற்படலாம் என்ற கோணத்தில் நிறுத்தி வைப்பு எனும் செய்தியின் உண்மைத்தன்மை (Dearness Allowance payable to Central Government employees and Dearness Relief to Central Government pensioners, payble at current rates are to be kept In abeyance so as to deal with any unprecedented (Omicron) situation - Fact Check)...



 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ஒமைக்ரான் தொடர்பாக ஏதாவது பெரும் செலவு ஏற்படலாம் என்ற கோணத்தில் நிறுத்தி வைப்பு எனும் செய்தியின் உண்மைத்தன்மை (Dearness Allowance payable to Central Government employees and Dearness Relief to Central Government pensioners, payble at current rates are to be kept In abeyance so as to deal with any unprecedented (Omicron) situation - Fact Check)...


>>> Office Memorandum No. 1/1/2022-E- 11(13/1) Government of India Ministry of Finance Department of Expenditure,  North Block., New Delhi E(X)/F/DoE/Pt-II/23 Dated the 3 January 2022...




மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட  வேண்டிய அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் பெயரில் மேற்கண்ட போலி உத்தரவு ஒன்று வலம் வருகிறது. 


▶️இது போன்ற எந்த உத்தரவையும் மத்திய நிதியமைச்சகம் வெளியிடவில்லை.

இன்றைய (04-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஜனவரி 04, 2022




சிந்தனை திறனில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்  



அஸ்வினி : மாற்றம் ஏற்படும். 


பரணி : உபாதைகள் நீங்கும். 


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 04, 2022




பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செய்கின்ற முயற்சியில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபவிரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



கிருத்திகை : அனுபவம் ஏற்படும். 


ரோகிணி : ஆதரவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 04, 2022




உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கலில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். 


திருவாதிரை : முடிவுகளில் கவனம் வேண்டும். 


புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 04, 2022




குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட சஞ்சலங்கள் நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை உருவாக்கும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

புனர்பூசம் : சஞ்சலங்கள் நீங்கும். 


பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 04, 2022




தோற்றப்பொலிவுகளில் மாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவம் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மகம் : மாற்றம் ஏற்படும்.


பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 04, 2022




வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகனப் பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். தாமதம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : வாய்ப்புகள் கைகூடும்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 04, 2022




செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சந்தோஷம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 04, 2022




வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : மேன்மையான நாள்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 04, 2022




தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திராடம் : சோர்வான நாள்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 04, 2022




செய்கின்ற பணிகளை பதற்றமின்றி செய்வது நல்லது. நண்பர்களின் வழியில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடும், லாபமும் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : பதற்றமின்றி செயல்படவும்.


திருவோணம் : அனுபவம் அதிகரிக்கும். 


அவிட்டம் : முதலீடுகள் மேம்படும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 04, 2022




நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : அலைச்சல் உண்டாகும்.  


சதயம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 04, 2022




உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இன்னல்கள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : மேன்மையான நாள். 


உத்திரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.


ரேவதி : ஆதாயமான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...