இடுகைகள்

முகநூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌

படம்
  ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌ விருதுநகர் மாவட்ட ஆட்சியர் @jeyaseelan_vp  அவர்கள் பேஸ்புக் பதிவிலிருந்து.. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு டீச்சர் வந்தார், ஜூலியா மிஸ். மற்ற டீச்சர்கள் எல்லாம், "ஏய் கையகட்டி வாயில விரலவை, லைன்ல நில்லு, பேசாம மனசுக்குள்ள படி" இப்படி மர அடிஸ்கேலோடு சுற்றி வர ஜூலியா மிஸ் மட்டும், கண்ணுங்களா வாங்க நம்ம ஸ்கூல சுத்தி இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் நான் இங்கிலீஷ் பெயர் சொல்லி தரேன் என்று பள்ளியை சுற்றிக் காட்டி  ஆங்கில வகுப்பு நடத்துவார். நாளைக்கு நம்ம நாட்டுல இருக்கிற எல்லா மாநிலங்கள் பெயர்களையும் எழுதிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு சாக்லேட் கொடுப்பேன் என்று மகிழ்விப்பார். ஆங்கில நாளிதழ்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்து வகுப்பில் வாசிக்கச் செய்வார்.‌ இ

இல்லம் தேடிக் கல்வி - இயல்பான வகுப்பறை செயல்பாடுகளை பதிவிடுவதற்கு தனியான முகநூல் குழு (Illam Thedi Kalvi Scheme - A separate Facebook group for posting normal classroom activities)...

படம்
 தன்னார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.! இயல்பான வகுப்பறை செயல்பாடுகளை பதிவிடுவதற்கு தனியான முகநூல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதில் பதிவிடுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். முகநூல் குழுவில் இணைப்பு: https://www.facebook.com/groups/266220495428469/?ref=share இந்த குழுவின் நெறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை தனியான ஒரு குழுவிற்கு பார்வேர்ட் செய்து வைக்கின்றனர். தெரிவுசெய்யப்பட்ட வீடியோக்களையும் படங்களையும் நீங்கள் அதில் பார்க்கலாம். அதன் மூலம் வகுப்புக்கு புதிய கருத்துக்கள் கிடைக்கும்.  அந்தக் குழுக்களின் இணைப்பு : ITK Selected Images : https://t.me/+gmR_ANVvN-gzYTBl ITK Selected Videos : https://t.me/+4bxmAfpyTh5jNzA1

முகநூல் பதிவை விமர்சித்ததால் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியருக்கு மிரட்டல்...

படம்
 மேட்டூர் அருகே முகநூல் பதிவில் விமர்சித்ததால் அரசுப்பள்ளிக்கு புகுந்து வேறு பள்ளி ஆசிரியர்கள்  ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் CEO விடம் புகார் அளித்துள்ளார் .

முகநூல் செயலியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி...?

படம்
How to use Facebook App safely ...? முகநூல் நம் விவரங்களை நாம் ஆஃப்லைனில் இருக்கும்போதும்  Settings -> Off-Facebook Activity சென்றால், அந்த பகுதியில் நாம் என்னென்ன வலைதளங்களுக்கு சென்றோம், செயலிகள் உபயோகித்தோம் போன்ற விவரங்களை காணலாம். (அதை விளம்பரதாரர்களுக்கு கொடுக்க, அவர்கள் நம்மை தொடர்பு கொள்கிறார்கள்). Settings -> Off-Facebook Activity -> Clear Historyஐ அழுத்தினால், அடித்த பக்கத்தில் மீண்டும் Clear Historyஐ அழுத்தி உறுதி செய்ததும், History அழிகிறது. (இனி விளம்பரங்கள் வராது - அடுத்த ஹிஸ்டரி சேரும் வரை) அதோடு முடிவதில்லை இந்த விவகாரம். மேலும் ஹிஸ்டரி சேராமல் இருக்க,  Settings -> Off-Facebook Activity -> More Optionsஇல் அழுத்தவும். அதையடுத்து வரும் பக்கத்தில், “Manage Future Actvity”ஐ அழுத்தவும்.  அடுத்த பக்கத்தில் மீண்டும் Manage Future Actvityஐ கொடுத்து  அழுத்தவும். இறுதியாக தோன்றும் பக்கத்தில், “Future Off-Facebook Activity”ஐ Off நிலைக்கு தள்ளவும். மீண்டும் “Turn-Off”ஐ அழுத்தி -  உறுதி செய்யவும்.  இனி நீங்கள் பாதுகாப்பாக முகநூல் செயலியைப் பயன்படுத்தலாம்...

Whatsapp உங்கள் தகவல்களை Facebook ல் பகிராது - Whatsapp நிறுவனம் உறுதி...

படம்
  வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்: வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் முகநூல் நிறுவனத்திற்கு பகிர படமாட்டாது.  தனிநபர் தகவல்கள் முகநூல் நிறுவனத்திற்கு தரப்படமாட்டாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம். தனிநபரின் தொலைபேசி எண் இருப்பிட முகவரி மற்றும் தகவல்கள் எதுவும் முகநூல் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது. வாட்ஸ்அப் குழுக்கள் எப்பொழுதும் போல தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் என விளக்கம். கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு எதிராக தகவல்கள் பெரிய அளவில் பகிரப்பட்டு வந்ததால் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கி வாட்ஸ்அப் நிறுவனம் இது போன்ற ஒரு விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. WhatsApp Protects and Secures Your Private Messages  WhatsApp cannot see your private messages or hear your calls and neither can Facebook .  WhatsApp does not keep logs of who everyone is messaging or calling .  WhatsApp cannot see your shared location and neither can Facebook .  WhatsApp does not share your contacts with Facebook WhatsApp groups remain private .  You can set your messages to dis

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...